Home /News /entertainment /

மீண்டும் சீரியலுக்கு வந்த ’வானத்தை போல’ துளசி.. ரசிகர்கள் செம்ம ஹாப்பி!

மீண்டும் சீரியலுக்கு வந்த ’வானத்தை போல’ துளசி.. ரசிகர்கள் செம்ம ஹாப்பி!

வானத்தை போல துளசி

வானத்தை போல துளசி

வானத்தை போல துளசியை ரசிகர்கள் தங்கள் வீட்டு பெண்ணாக நினைத்து கொண்டாடினார்கள்.

    மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் சன் டிவி தொடர்களில் ஒன்று தான் வானத்தைப்போல. அண்ணன்-தங்கை பாசத்தை எடுத்துரைக்கும் விதத்தில் இதன் கதைக்களம் அமைந்துள்ளதால் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது.இந்த சீரியலின் துளசி-சின்ராசு கேரக்டர்கள் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டுள்ளது என்றே சொல்லலாம். தற்போது சின்ராசுவின் கல்யாண எபிசோடுகள் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் சின்ராசு ரோலில் நடிகர் தமன் நடித்தார்.

    இவர் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்தவர். சும்மா நச்சுனு இருக்கு, தொட்டால் தொடரும், சேது பூமி, புயலா கிளம்பி வரோம், 6 அத்தியாயம், நேத்ரா என போன்ற சில படங்களில் நடித்திருந்தார். ஆனால் எந்த படங்களும் இவருக்கு கைகொடுக்கவில்லை. பல படங்களில் நடித்தும் வெற்றி கிடைக்காத நிலையில் இவருக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதலில் தயங்கிய இவர் பிறகு சன் டிவி என்றவுடன் துணிந்து நடிக்க வந்தார். சீரியல் மூலம் நல்ல ரீச் கிடைத்ததும் மீண்டும் வெள்ளித்திரையில் கவனம் செலுத்த திட்டமிட்டு சீரியலில் இருந்து விலகினார். தற்போது அவர் ரோலில் சீரியல் நடிகர் ஸ்ரீ நடித்து வருகிறார். அவரின் நடிப்பும் சீரியலுக்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது.

    பாக்கியா வீட்டுக்கு வரும் ராதிகா... கோபி மாட்டபோகும் நேரமா இது?

    இதே போல தான் துளசி ரோலில் நடித்து வந்த ஸ்வேதா கெல்கே கதையும். 2019ஆம் ஆண்டு ஜெமினி டிவியில் ஒளிபரப்பான ‘மதுமாசம்’ என்ற தெலுங்கு சீரியலில் நடித்தார். அதில் இவர் நடித்த ஷ்ரவயா எனும் கேரக்டர் நல்ல ரீச் ஆனது. வெள்ளித்திரையில் வாய்ப்பும் வந்தது. தெலுங்கு மொழியில் ஒரு படத்தில் நடித்தார். ஆனால் அவர் நினைத்த ரீச்சை அந்த படம் வாங்கி தரவில்லை. தொடர்ந்து பல குறும்படங்கள் மற்றும் ஆல்பம் சாங்கில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். தெலுங்கு, கன்னட சீரியலில் நடித்தபோது கிடைத்த ரீச்சால் தமிழில் அறிமுகமாக வாய்ப்பு கிடைத்தது. சன்டிவியின் வானத்தை போல சீரியலில் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார்.

    மிரட்டிய முத்துராசு.. சரியான பதிலடி கொடுத்து அடக்கிய ஐஸ்வர்யா!

    இங்கு அவருக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. ரசிகர்கள் துளசியை தங்கள் வீட்டு பெண்ணாக நினைத்து கொண்டாடினார்கள். இந்நிலையில் தான் திடீரென்று சீரியலில் இருந்து ஸ்வேதா விலகினார். தமன் மற்றும் ஸ்வேதாவின் மாற்றம் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் மீண்டும் சின்னத்திரை ரசிகர்களை மகிழ்விக்க ஸ்வேதா சீரியலில் நடிக்க வந்துள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    கலைஞர் டிவியில் விரைவில் டெலிகாஸ்ட் செய்யப்படவுள்ளன ‘கண்ணெதிரே தோன்றினாள்’ என்ற சீரியல் மூலம் ஸ்வேதாவை மீண்டும் தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் பார்க்கலாம். இந்த சீரியலில் கேஜிஎஃப் புகழ் மாளவிகா அவினாஷூம் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இந்த தகவல் ஸ்வேதா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial

    அடுத்த செய்தி