தமிழ் சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் பல சேனல்களில் நிறைய சூப்பர் ஹிட் சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. அந்த வகையில் இரவு 8 மணி முதல் 8.30 வரை ஒளிபரப்பாகி வருகிறது "வானத்தை போல" சீரியல்.
அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7-ம் தேதி முதல் வானத்தை போல சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் கதை பல திரைப்படங்களில் வருவது போன்று இருந்தாலும் இந்த சீரியலுக்கு என்று தனித்துவமான ரசிகர்கள் பலர் இருந்து வருகின்றனர்.
சமீபத்தில் இந்த சீரியல் வெற்றிகரமாக 300 எபிசோட்களை கடந்த நிலையில் இந்த சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. துளசி கேரக்டரில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்த நடிகை ஸ்வேதா திடீரென சீரியலில் இருந்து விலகி விட்டார்.
இதனை தொடர்ந்து மான்யா ஆனந்த் என்பவர் தற்போது புதிதாக துளசி கேரக்டரில் நடித்து வருகிறார். ஸ்வேதா விலகிய அதிர்ச்சியில் இருந்தே இன்னும் ரசிகர்கள் மீளாத நிலையில் இந்த சீரியலில் இருந்து துளசியின் பாசமிகு அண்ணனாக சின்ராசு என்ற கேரக்டராக நடித்து வந்த நடிகர் தமன் குமாரும் இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார்.
வானத்தை போல சீரியலுக்கு மிகப்பெரிய பலமாக இருந்த அண்ணன் - தங்கை காம்போவான தமன் - ஸ்வேதா இருவருமே சீரியலில் இல்லை என்றால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்தநிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது புது சின்ராசாக நடிகர் ஸ்ரீகுமார் நடிக்க போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது
இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான பொம்மலாட்டம் என்ற சீரியலில் நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் நடிகர் சஞ்சீவுக்கு பதில் இவர் நடித்திருந்தார். அந்த சீரியல் சமீபத்தில் முடிவு பெற்றதை அடுத்து ஸ்ரீகுமார் தற்போது மீண்டும் சன் டிவி வானத்தைப் போல சீரியலில் நடிக்க இருக்கிறார்.
இதையும் படிங்க.. ரசிகர்களுக்கு அருண் விஜய் கொடுக்க போகும் ட்ரீட் யானை டீசர்!
ஜீ தமிழ் தொடர்களில் நடித்து வந்த அவர் தற்போது சன் டிவிக்கு தாவி இருப்பது அனைவருக்கும் சற்று ஆச்சர்யத்தை கொடுத்து இருக்கிறது. புதிய அண்ணன் தங்கை நடிக்கும் வானத்தைப் போல சீரியலின் அடுத்த எபிசோட் விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. தற்போது இந்த சீரியலில் துளசிக்கு திருமணம் நடந்து கணவர் வீட்டில் பிரச்சனைகள் நடக்கிறது. இதனால் அண்ணன் - தங்கை இடையே பிரிவு ஏற்படும் நிலையில் சின்ராசு யாரிடமும் சொல்லாமல் சென்று விடுகிறார். எனவே குடும்பத்துடன் அவரை தேடும் பணிகளில் கதை நகர்கிறது. ஸ்ரீகுமார் சின்ராசு கதாபாத்திரத்தை சிறப்பாக செய்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.