ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Sun Tv : வானத்தை போல துளசி திடீர் விலகல்... வெளிவராத காரணம்! புதியதாக வரும் நடிகை இவர் தான்!

Sun Tv : வானத்தை போல துளசி திடீர் விலகல்... வெளிவராத காரணம்! புதியதாக வரும் நடிகை இவர் தான்!

வானத்தை போல துளசி

வானத்தை போல துளசி

வானத்தை போல சீரியலில் துளசி ரோலில் நடிக்கும் நடிகையின் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சன் டிவியில் ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வந்த வானத்தை போல சீரியலில் துளசி ரோலில் சின்ராசு தங்கையாக நடித்து வந்த ஸ்வேதா திடீரென்று சீரியலில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் நாளை முதல் சீரியலில் துளசியாக நடிக்கும் நடிகையின் புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.

சன்டிவியில் ஒளிப்பரப்பாகும் அனைத்து சீரியல்களும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்கள் லிஸ்டில் இடம் பிடித்து வருகிறது. இந்த லிஸ்டில் ஃபேமலி ஆடியன்ஸ் அதிகம் விரும்பும் சீரியலாக இருப்பது வானத்தை போல. இது அண்ணன் தங்கச்சி பாசத்தை அடிப்படையாக கொண்டு ஒளிப்பரப்பகும் நெடுந்தொடர். இந்த தொடரில் நாயகியாக நடித்து வருபவர் துளசி. அண்ணன் சின்ராசு மீது பாசத்தை பொழியும் தங்கையாக நடித்து வருகிறார். இவரது நிஜப்பெயெர் ஸ்வேதா கெல்ஜ். கர்நாடகாவை சேர்ந்த இவர் பெங்களூருவில் வசித்து வருகிறார்.

இவர் மாடலிங் செய்து கொண்டிருக்கும் போதே சீரியல் வாய்ப்பு கிடைத்தது. ஜெமினி டிவியில் ஒளிப்பரப்பான மதுமாசம் என்ற தெலுங்கு சீரியலில் நடித்தார்.தெலுங்கு, கன்னட சீரியலில் நடித்தபோது கிடைத்த ரீச்சால் தமிழில் அறிமுகமாக வாய்ப்பு கிடைத்தது. சன்டிவியின் வானத்தை போல சீரியலில் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். இதில் அண்ணன் ரோலில் நடிக்கும் தமன்குமாருடன் சேர்ந்து துளசி கதாபாத்திரத்தில் தங்கையா கநடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனார். இந்த சீரியல் 300 எபிசோடுகளை தாண்டி வெற்றிக்கரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது.

இப்போது இந்த சீரியலில் இருந்து துளசி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் எந்த காரணத்திற்காக சீரியலை விட்டு பாதியில் சென்றார் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. அதே நேரம் நாளை முதல் சீரியல் டெலிகாஸ்டில் துளசி ரோலில் நடிக்கும் நடிகையின் புகைப்பட. தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

மன்யா

அவருக்குப் பதிலாக, மன்யா ஆனந்த் என்பவர் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இவரும் ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பாக்யரேகா சீரியல் மூலம் சின்னத்திரையில் பாப்புலர் ஆனவர். இனி வரும் எபிசோடுகளில் இவர்தான் துளசியாக நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Sun TV, TV actress, TV Serial