ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ‘வானத்தை போல’ சீரியல் நடிகை! ஏன் இந்த திடீர் முடிவு?

ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ‘வானத்தை போல’ சீரியல் நடிகை! ஏன் இந்த திடீர் முடிவு?

வானத்தை போல

வானத்தை போல

வானத்தை போல பொன்னியாக நடிகை சைந்தினி பிரகாஷ் நடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் வானத்தை போல சீரியலில் பொன்னி ரோலில் நடிக்கும் நடிகை ப்ரீத்தி குமார் அந்த சீரியலில் இருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் பல சேனல்களில் நிறைய சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பி வருகின்றன. அந்த வகையில் சன் டிவியில் இரவு 8 மணி முதல் 8.30 வரை ஒளிபரப்பாகி வருகிறது "வானத்தை போல" சீரியல். அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியலில் இதுவரை பல மாற்றங்கள் அரங்கேறியுள்ளது. அதாவது இந்த சீரியலில் ஆரம்பம் முதலே துளசி கேரக்டரில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்த நடிகை ஸ்வேதா திடீரென சீரியலில் இருந்து விலகி விட்டார்.இதனை தொடர்ந்து மான்யா ஆனந்த் என்பவர் தற்போது புதிதாக துளசி கேரக்டரில் நடித்து வருகிறார்.

கேக் வெட்டி கொண்டாடிய காற்றுக்கென்ன வேலி சூர்யா - வெண்ணிலா! எதற்காக தெரியுமா?

ஸ்வேதா விலகிய சில மாதங்களில் பாசமிகு அண்ணனாக சின்ராசு என்ற கேரக்டரில் நடித்து வந்த நடிகர் தமன் குமாரும் இந்த சீரியலில் இருந்து விலகினார். இந்த 2 பெரிய மாற்றங்களும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினர். இதனால் சீரியலின் டி.ஆர்.பி அடிவாங்கும் என சீரியல் குழு பயந்தது. அதன் பின்பு சின்ராசு ரோலில் ஸ்ரீகுமார் என்ட்ரி கொடுத்து அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்தார். மான்யா - ஸ்ரீ குமார் நடிப்பு ரசிகர்களை கவர மீண்டும் டி.ஆர்.பி எகிறியது.

மிகப் பெரிய வெற்றி.. சந்தோஷத்தில் சன் டிவி எதிர் நீச்சல் சீரியல் குழு!

தற்போது சீரியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாம மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. சின்ராசு - பொன்னி திருமணம் எபிசோடுகள் ஒளிப்பரப்பாகி வருகின்றன. பொன்னியின் காதலர் சரவணனை காணவில்லை. சின்ராசுவின் மாமா எப்படியாவது பொன்னிக்கு சின்ராசுவை கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால் துளசிக்கு இதில் விருப்பம் இல்லை. முத்துராசு கல்யாணத்தை நிறுத்த ஒருபக்கம் துளசியுடன் சேர்ந்து போராட,  இந்த பக்கம் கல்யாணத்தை நடத்த ராஜ பாண்டி முயற்சிக்கிறார். இப்படி ஒருபக்கம் சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருக்க இன்னொரு பக்கம் சீரியலில் பொன்னி ரோலில் நடித்து வந்த ப்ரீத்தி குமார் சீரியலில் இருந்து விலகிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 
View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)இனி வரும் எபிசோடுகளில் அவருக்கு பதில் பொன்னியாக நடிகை சைந்தினி பிரகாஷ் நடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  தொடர்ந்து இந்த சீரியலில் இருந்து நடிகர், நடிகைகள் விலக என்ன காரணம்? என்றும்  ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Sun TV, TV Serial