சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் வானத்தை போல சீரியல் 500 எபிசோடுகளை தாண்டி சாதனை செய்துள்ளது. சீரியலின் இந்த வெற்றி பயணத்தால் சின்ராசும் துளசியும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சன்டிவியில் ஒளிப்பரப்பாகும் அனைத்து சீரியல்களும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்கள் லிஸ்டில் இடம் பிடித்து வருகிறது. இந்த லிஸ்டில் ஃபேமலி ஆடியன்ஸ் அதிகம் விரும்பும் சீரியலாக இருப்பது வானத்தை போல.சன் டிவியில் இரவு 8 மணி முதல் 8.30 வரை ஒளிபரப்பாகி வருகிறது. இது அண்ணன் தங்கச்சி பாசத்தை அடிப்படையாக கொண்டு ஒளிப்பரப்பாகும் நெடுந்தொடர். இந்த சீரியல் தற்போது 500 எபிசோடுகளை தாண்டி ஒளிப்பரப்பாகி வருகிறது. இதுவரை வானத்தை போல சீரியலில் ஏகப்பட்ட மாற்றங்கள் அரங்கேறியுள்ளன. சமீபத்தில் பொன்னியாக நடித்து வந்த பிரீத்தி குமார் சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு பதில் இப்போது பொன்னி ரோலில் சைந்தினி பிரகாஷ் நடித்து வருகிறார்.
கண்ணு பட போகுது ஆங்கர் ரக்ஷன்.. லைக்ஸ் அள்ளும் ஃபோட்டோஸ்!
இதற்கு முன்பு, இந்த தொடரில் நாயகியாக அதாவது சின்ராசுவின் தங்கை துளசி ரோலில் ஸ்வேதா கெல்ஜ் நடித்து வந்தார்.
இவர் மாடலிங் செய்து கொண்டிருக்கும் போதே சீரியல் வாய்ப்பு கிடைத்தது. துளசி கதாபாத்திரத்தில் தங்கையாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனார். ஆனால் திடீரென்று இவர் சீரியலில் இருந்து விலகினார். அதற்கான காரணம் வெளியாகவில்லை. ஆனால் தற்போது கலைஞர் டிவியில் ஒளிப்பரப்பாகும் புத்தம் புதிய சீரியலில் நடிக்கிறார். இவரை போலவே அண்ணன் சின்ராசு ரோலில் நடித்து வந்த தமன்குமாரும் சீரியலை விட்டு கிளம்பினார்.
காற்றுக்கென்ன வேலி சீரியலில் வெண்ணிலா கொடுக்க போகும் சர்ப்ரைஸ்!
அவர் ரோலில் தற்போது ஸ்ரீகுமார் நடிக்கிறார். அவரின் தங்கை துளசியாக மன்யா ஆனந்த் நடிக்கிறார்.தற்போது சீரியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. சின்ராசு - பொன்னி திருமணம் முடிந்து அதன் மூலம் ஏகப்பட்ட பிரச்சனைகள் அரங்கேறி வருகின்றன. ஒருபக்கம் சந்தியா கழுத்தில் தாலி இருக்கும் விஷயமும் தெரிந்து விட்டது. இன்னொரு பக்கம் சரவணனும் பொன்னியை தேடி கொண்டிருக்கிறார். இந்நிலையில் வானத்தை போல சீரியல் பல தடைகளை கடந்து 500 எபிசோடுகளை தாண்டி ஒளிப்பரப்பாகி வருவதால் இந்த நிகழ்வை சீரியல் குழு கேக் வெட்டி செலப்ரேஷன் செய்துள்ளனர்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படத்தில் வானத்தை போல மொத்த சீரியல் குழுவும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த வெற்றியில் ஸ்ரீகுமார், மன்யாவுக்கு முக்கிய பங்கு உள்ளது. தமன், ஸ்வேதா விலகலுக்கு பின்பு இவர்கள் இருவரும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து அதன் மூலம் சீரியல் டி.ஆர்.பியை தக்க வைத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.