• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தொடர் முயற்சி.. கைக்கொடுக்காத படங்கள்.. முதல் வெற்றியால் கலங்கி நிற்கும் வானத்தை போல அண்ணன் சின்ராசு!

தொடர் முயற்சி.. கைக்கொடுக்காத படங்கள்.. முதல் வெற்றியால் கலங்கி நிற்கும் வானத்தை போல அண்ணன் சின்ராசு!

வானத்தை போல சீரியல் சின்ராசு

வானத்தை போல சீரியல் சின்ராசு

விஜய் டிவி புகழ் ஈரோடு மகேஷ் இவரின் நெருங்கிய நண்பரும் கூட.

  • Share this:
    சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் வானத்தை போல சீரியலில் சின்ராசு ரோலில் நடிக்கும் நடிகர் தமன் குமார் பற்றிய தகவல்கள்

    வெள்ளித்திரையில் வெற்றியை ருசிக்காதவர்கள் பலரும் சின்னத்திரையில் எளிதில் வெற்றி பெற்று அந்த தருணத்தில் இருந்து மீள முடியாமல் நெகிழ்ச்சியுடன் இருப்பார்கள். இதை லக் என்பதா இல்லை சின்னத்திரையில் எளிதாக ரசிகர்களை கவர்ந்துவிடலாம் என்பதா என தெரியவில்லை. ஆனாலும் எத்தனையோ திறமைவாய்ந்த நடிகர்களை சின்னத்திரை இன்று வாழ வைத்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியலான வானத்தை போல சீரியலில் நடிக்கும் பாசக்கார அண்ணன் சின்ராசு சின்னத்திரையில் தனி அடையாளம் ஏற்படுத்திக் கொண்டார்.

    இவரின் நிஜப்பெயர் தமன்குமார். மதுரையை சேர்ந்த இவர், தனது 14 வயதிலே சென்னைக்கு வந்துவிட்டார். கல்லூரி படிப்பை முடித்தவுடன் ஸ்கிரிப்ட் ரைட்டிங் மீது ஆர்வம் கொண்டு அதில் கவனம் செலுத்தினார். அதன் மூலம் சினிமா வாய்ப்பையும் தேடி வந்தார். வாய்ப்பு கிடைக்காததால் பெற்றோர் ஆசைக்காக இடையில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது தான் பலரின் அறிவுருத்தலால் நடிப்பை கற்றுக் கொள்ள தியேட்டர் லேப் ஜெயராமிடம் நடிப்பு பயிற்சிக்காக சேர்ந்து அவரிடம் முறையாக நடிப்பு பயிற்சி பெற்றார்.

    இதனைத்தொடர்ந்து பல்வேறு ஆடிஷன்களில் கலந்து கொண்டு நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தார். அப்படித்தான் ஆச்சர்யங்கள் என்ற திரைப்படத்தில் முதன் முறையாக ஹீரோவாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான சட்டம் ஒரு இருட்டறை படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு தமனுக்கு பெயர் வாங்கி தராததால் அடுத்தடுத்து தொட்டால் தொடரும், சேது பூமி, புயலா கிளம்பி வரோம், 6 அத்தியாயம், நேத்ரா என பல படங்களில் நடித்தார். ஆனாலும் அவர் நினைத்த வெற்றியை பெறமுடியவில்லை.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அந்த சமயத்தில் தான், சின்னத்திரையில் சன்டிவியின் வானத்தைப் போல சீரியல் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. முதலில் சீரியல் என்றவுடன் தயங்கியவர், சன் டிவி என்றவுடன் துணிந்து நடித்தார். இன்று வானத்தை போல சீரியலின் அண்ணன் சின்ராசு என்றால் தெரியாத ரசிகர்களே இல்லை. அந்த அளவுக்கு அந்த ரோல் தமன் குமாருக்கு நல்ல பெயரை வாங்கி தந்துள்ளது. பாசக்கார அண்ணனாக நடிப்பில் கலக்குகிறார். அதுமட்டுமில்லை விஜய் டிவி புகழ் ஈரோடு மகேஷ் இவரின் நெருங்கிய நண்பரும் கூட. சின்னத்திரை கொடுத்த வரவேற்பால் நெகிழ்ச்சியில் இருக்கிறார் தமன்குமார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: