வானத்தை போல சீரியல் இயக்குனர் சீரியலில் கொடுத்த அதிரடி ட்விஸ்ட்டால் ரசிகர்கள் இயக்குனரின் மீது கோபத்தில் இருக்கின்றனர். இதுக் குறித்து அவர்கள் பதிவிடும் கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் ‘வானத்தை போல’ சீரியல் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த சீரியலாக உள்ளது. அண்ணன் - தங்கை பாச போராட்டத்தின் கதையாக ஒளிப்பரப்பாகும் இந்த தொடரில் ஆரம்பத்தில் நடித்து வந்த நடிகர், நடிகைகள் திடீரென்று சீரியலை விட்டு விலகினர். இதனால் நடுவில் சீரியல் சின்ன இறக்கத்தை சந்தித்து இருந்தது. இந்நிலையில் மீண்டும் சின்ராசு துளசி ரோலுக்கு நடிகர் ஸ்ரீ குமார் மற்றும் நடிகை மன்யா உயிர் கொடுக்க தற்போது சீரியல் டி.ஆர்.பியில் கலக்கி கொண்டிருக்கிறது. வானத்தை போல சீரியலில் கடந்த 1 வாரமாக பரபரப்புக்கு பஞ்சமில்லாத கல்யாண எபிசோடு ஒளிப்பரப்பாகி வருகிறது.
பொன்னி- சரவணனன் காதலிப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இது பொன்னியின் அப்பாவுக்கு பிடிக்கவில்லை. அவர் எப்படியாவது பொன்னியை சின்ராசுவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என நினைக்கிறார். இதற்காக அவர் எடுக்காத முயற்சிகளே இல்லை. அதே நேரம் சின்ராசு, தாசில்தார் சந்தியாவை உயிருக்கு உயிராக நேசிக்கிறார். சந்தியாவை அண்ணனுக்கு திருமணம் செய்து வைக்க துளசியும் ஆசைப்படுகிறார். ஆனால் இதில் ராஜபாண்டிக்கு விருப்பமில்லை. இப்படி ஏகப்பட்ட ட்விஸ்டுகளுடன் சீரியல் செல்ல, கடைசியில் சின்ராசு - பொன்னி திருமணம் உறுதியானது. இதில் இருவருக்கும் விருப்பமில்லை.
ரஜினி பட நடிகைக்கு இப்படியொரு நிலைமையா! சோப்பு விற்பதாக அவரே சொன்ன தகவல்
துளசி எப்படியாவது சந்தியாவை அண்ணன் சின்ராசுக்கு திருமணம் செய்து வைக்க பல பிளான்களை போட்டார். கடைசி நேரத்தில் அவரின் கணவர் ராஜபாண்டி உள்ளே புகுந்து மொத்தத்தையும் கலைக்கிறார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் சரவணனன் கடைசி நேரத்தில் கத்தியை காட்டி சின்ராசு - பொன்னி திருமணத்தை நிறுத்த நினைத்தார். ஆனால் அதுவும் சொதப்ப, ராஜபாண்டி ஆசைப்பட்ட மாதிரி கடைசியில் விருப்பமே இல்லாமல் சின்ராசு - பொன்னி திருமணம் நடக்கிறது.
அடுத்த 1 வாரத்திற்கு ட்ரெண்டிங்கில் இருக்க போவது பிக் பாஸ் ஷிவானி தான்!
ரசிகர்கள் எதிர்பார்த்த ட்விஸ்ட் இது இல்லை, கடைசி நேரத்தில் எப்படியாவது சின்ராசு - சந்தியா சேர வேண்டும் தான் நினைத்தார்கள். பொன்னியுடன் திருமணம் நடந்ததால், சின்ராசுவின் காதல் தோல்வியில் முடிந்து விட்டது. இதில் உணர்சிவசப்பட்டு, இயக்குனருக்கு லவ் பிரேக்கப்பா? ஏன் சின்ராசு காதலை இப்படி முடித்தார்? என தங்களுடைய ஆதங்கத்தை இணையத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.