Home /News /entertainment /

மர்மங்களும், அதிரடி திருப்பங்களும் நிறைந்த ’வனம்’!

மர்மங்களும், அதிரடி திருப்பங்களும் நிறைந்த ’வனம்’!

வனம்

வனம்

வனம் திரைப்படத்தைக் காண 2022 ஏப்ரல் ஞாயிறு, மாலை 4 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை மறக்காமல் டியூன் செய்யுங்கள்.

  உலக தொலைக்காட்சியில் முதன்முறையாக ஏப்ரல் 3, ஞாயிறன்று கலர்ஸ் தமிழில் ‘வனம்’ திரைப்படம் ஒளிப்பரப்பாகிறது.

  மர்மங்களும், அதிரடி திருப்பங்களும் நிறைந்த ஒரு த்ரில்லர் திரைப்படத்தைக் கண்டு ரசிக்க இந்த ஞாயிறு (ஏப்ரல் 3 ம் தேதி) மாலை 4.00 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை தவறாமல் பாருங்கள் . அடுத்து என்ன நிகழப்போகிறது என்று இதயத்தை படபடக்கச் செய்யும் ஒரு த்ரில்லர் திரைப்பட அனுபவத்திற்கு தயாராகுங்கள். இந்த ஞாயிறு மாலை 4.00 மணிக்கு, தமிழ்நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொது பொழுதுபோக்கு சேனல் என புகழ்பெற்றிருக்கும் கலர்ஸ் தமிழ், உலக தொலைக்காட்சி தளத்தில் முதன்முறையாக வனம் திரைப்படத்தை உங்களுக்காக வழங்கவிருக்கிறது.

  திகிலையும், பரபரப்பையும், சஸ்பென்ஸ் உணர்வையும் உருவாக்கும் இத்திரைப்படம் ஒரு ஹாஸ்டல் அறையில் மர்மமாக சிலர் காணாமல் போவதன் காரணத்தைக் கண்டறிய முற்படும் ஒரு கல்லூரி மாணவனின் சாகசப் பயணத்தை சித்தரிக்கிறது.
  ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த பயங்கர – திகில் திரைப்படத்தில் நடிகர்கள் வெற்றி சட்லி, அணு சித்தரா மற்றும் ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அடர்ந்த காடு ஒன்றை பின்புலமாகக் கொண்டு பின்னப்பட்டிருக்கும் இத்திரைக்கதை ஒரு கலைக்கல்லூரியில் படிக்கும் மகிழ் (நடிகர் வெற்றி) என்ற இளைஞனைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு குறும்படத்தை இயக்குவதற்காக அவனது கல்லூரிக்கு ஒரு ஆவண திரைப்பட படைப்பாளியான ஜாஸ்மின் (நடிகை ஸ்மிருதி வெங்கட்) வருகிறார்.

  மகிழின் வாழக்கையில் குறுக்கிடும் இவர், அவரது பள்ளிப் பருவத்தில் காதல் உணர்வை அரும்பச் செய்து மனம் கவர்ந்தவர் என்பது கதையை சுவாரஸ்யமாக்குகிறது. இதற்கிடையே ஹாஸ்டலில், ஒரு நபர் இதற்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட ஒரு அறைக்கு மாறும்படி  மகிழ் நிர்பந்திக்கப்படுகிறார். இந்த அறையில் அவருடன் தங்கியிருக்கும் பிற மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக மர்மமான சூழ்நிலைகளில் உயிரிழக்கின்றனர். மகிழும், ஜாஸ்மினும் இணைந்து கடந்தகால நிகழ்வுகளை தோண்டி ஆராய்ந்து, பின்புலத்தில் மறைந்திருக்கும் பயங்கரமான உண்மைகளை கண்டறிவதாக பயணிக்கும் கதை நிச்சயமாக பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகமாக்கி இதயத்துடிப்பை எகிறவைக்கும் என்பது நிச்சயம்.

  இத்திரைப்பட இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த் இதுபற்றி கூறியதாவது, “பயங்கர நிகழ்வுகள் கலந்த ஒரு திகில் படமாக வனம் இருக்கின்ற போதிலும், இந்த உலகின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியம் பற்றி வலுவான ஒரு செய்தியை பார்வையாளர்களுக்கு சொல்ல முயற்சிக்கிறது. இதுவரை நான்கு படங்களில் மட்டுமே நடித்திருக்கின்ற போதிலும், இத்திரைப்படத்தின் பிற நடிகர்களோடு வெற்றியும் மிக்சிறப்பாக அவரது நடிப்புத்திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்.” என்றார்.

  இதுகுறித்து இத்திரைப்பட நாயகன் வெற்றி சட்லி பேசுகையில், “ஒரு அடர்ந்த காட்டில் இதன் காட்சிகள் எடுக்கப்பட வேண்டியிருந்ததால், வனம் திரைப்படத்திற்காக நடித்தது முற்றிலும் வித்தியாசமான ஒரு அனுபவமாக எனக்கு இருந்தது. ஒரு த்ரில்லர் திரைப்படத்தை உருவாக்குவது எளிதானதல்ல. மிகக்குறுகலான இடங்களில் இதற்கான காட்சிகளை படமாக்க வேண்டியிருந்தது. இதற்கும் மேலாக, கல்லூரி அமைவிடத்தில் நடித்தது எனது கல்லூரி கால நாட்களை நினைவூட்டியது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இத்திரைப்படம் ஒளிபரப்பாவதால் எனது உற்சாகம் இன்னும் அதிகமாகியிருக்கிறது. திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பை பெற்றதைப் போலவே சின்னத்திரை பார்வையாளர்களாலும் வனம் பெரிதும் ரசிக்கப்படும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.” என்று கூறினார்.

  இத்திகில் திரைப்படத்தின் உணர்வை, இசையமைப்பாளர் ரான் ஈத்தன் யோஹான் – ன் அற்புதமான பின்னணி இசை மிகச்சிறப்பாக உயர்த்தி, கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய திரைப்படமாக இதனை ஆக்கியிருக்கிறது.

  பரபரப்பிற்கும், திகிலுக்கும் பஞ்சமில்லாத அதிரடி நிகழ்வுகளோடு பல நடிகர்களின் சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கும் வனம் திரைப்படத்தைக் காண 2022 ஏப்ரல் 3ம் தேதி  ஞாயிறு, மாலை 4 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை மறக்காமல் டியூன் செய்யுங்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், Kollywood, Movie

  அடுத்த செய்தி