ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வள்ளி திருமண வரவேற்பு கொண்டாட்டம்.. திண்டுக்கல்லில் கலர்ஸ் தமிழின் உற்சாகப் பயணம்!

வள்ளி திருமண வரவேற்பு கொண்டாட்டம்.. திண்டுக்கல்லில் கலர்ஸ் தமிழின் உற்சாகப் பயணம்!

வள்ளி திருமணம்

வள்ளி திருமணம்

பொழுதுபோக்கு சேனல் துறையில் இந்த அளவுக்கு பிரமாண்டமாக திருமண வரவேற்பு விழா நடைபெறுவது முதன் முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு நிகழ்வாகும்.<

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கலர்ஸ் தமிழ், வள்ளி மற்றும் கார்த்திக்கின் திருமண வரவேற்பு விழாவை மக்களுடன் இணைந்து கோலாகலமாக கொண்டாடும் வகையில் திண்டுக்கல் நகரில் அதன் நட்சத்திரப் பட்டாளத்துடன் இணைந்து திண்டுக்கல் நகரை முழுவதையும் விழாக்கோலமாகியது. வள்ளி திருமணத்தின் முதன்மை கதாபாத்திரங்களான வள்ளி (நடிகை நட்சத்திரா நடிப்பில்) மற்றும் கார்த்திக் (நடிகர் ஷ்யாம் நடிப்பில்) ஆகியோரின் சிறப்பான திருமண நிகழ்வைத் தொடர்ந்து, திருமண வரவேற்பு நிகழ்வை திண்டுக்கல் GTN கலைக்கல்லூரி வளாகத்தில் இந்நகரைச் சேர்ந்த 2500 மேற்பட்ட பார்வையாளர்கள் முன்னிலையில் ஜுன் 18 சனிக்கிழமையன்று பிரமாண்டமாக நடத்தப்பட்டது. தமிழ் பொது பொழுதுபோக்கு சேனல் துறையில் இந்த அளவுக்கு பிரமாண்டமாக திருமண வரவேற்பு விழா நடைபெறுவது முதன் முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு நிகழ்வாகும்.

வள்ளியும், கார்த்திக்கும் இப்போது தம்பதியராக இணைந்திருப்பதால், முற்றிலும் வேறுபட்ட இரு ஆளுமைகளான இவர்களின் திருமண வாழ்க்கை நிச்சயம் கவனிக்கப்பட வேண்டியதாக, ரசிக்கக்கூடியதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

திருமண தம்பதியர் வள்ளி மற்றும் கார்த்திக், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அமர்ந்திருக்க நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற ஊர்வலத்தோடு, இத்திருமண வரவேற்புக் கொண்டாட்டம் அமர்க்களமாகத் தொடங்கியது. பொய்க்கால் குதிரையாட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், சிலம்பாட்டம் மற்றும் மயிலாட்டம் என பல்வேறு நாட்டுப்புறக் கலைகள் இந்நிகழ்வில் அரங்கேறியது இச்சாலையில் இருபக்கங்களிலும் நின்றிருந்த பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. திருமண வரவேற்பு நிகழ்விற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்துமாறு கேட்டுக்கொள்கின்ற பாரம்பரியமான மஞ்சள் பத்திரிகை திண்டுக்கல் நகர் முழுவதும் உள்ள மக்கள் அணைவருக்கும் வினியோகிக்கப்பட்டது.

ரசிகர்களின் முன்னிலையில் சனிக்கிழமையன்று திருமண வரவேற்பு விழா மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை நடிகை ஃபரீனாவும், விஜே. அன்சரும் தொகுத்து வழங்கினர். பார்வையாளர்களோடு கலந்துரையாடி மகிழ்வித்ததோடு, இந்த மாலைநேர நிகழ்விற்கு வருகை தந்த விருந்தினர்களை அன்போடு அவர்கள் வரவேற்றனர். தங்கள் அபிமான நடிகர்களான வள்ளி (நடிகை நட்சத்திரா) மற்றும் கார்த்திக் (நடிகர் ஷ்யாம்), வடிவு (நடிகை நளினி), வசுந்தரா (நடிகை காயத்ரி ஜெயராமன்) மற்றும் அர்ஜுன் (நடிகர் விஷ்ணு விஜய்) ஆகியோரோடு இன்னும் பல நடிகர்களை நேரடியாகப் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியளித்தது. இந்நிகழ்விற்காக வந்திருந்த நடிகர், நடிகையர், புதுமண தம்பதியரான வள்ளி மற்றும் கார்த்திக்கை வாழ்த்தியதோடு, சிறப்பான நடன நிகழ்ச்சிகளையும் அரங்கேற்றினர்.

கலர்ஸ் தமிழ் – ன் பிசினஸ் ஹெட் திரு. S. ராஜாராமன் இந்நிகழ்ச்சி பற்றி பேசுகையில், “ இந்நிகழ்வானது எங்களது தனித்துவமான கருத்தாக்கங்களில் ஒன்றை பலரும் அறியுமாறு காட்சிப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தையொட்டியதாக அமைகிறது. ஒரு கதாபாத்திரமாக வள்ளி, தமிழ்நாட்டின் கலாச்சார பின்புலத்தோடு, ஆழமான பிணைப்பைக் கொண்டிருக்கிறார். ஆகவே, இந்நிகழ்வை திண்டுக்கல்லில் நடத்த வேண்டுமென்பது நாங்கள் விரும்பி தேர்வு செய்த எடுத்த முடிவாகும். வள்ளித் திருமணம் என்ற இக்கதை எண்ணற்ற பார்வையாளர்களால் பெரிதும் ரசித்துப் பாராட்டப்படுகிறது. இனிவரும் காலத்திலும் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் வியப்பை வழங்கும் பல திட்டங்களை நாங்கள் கொண்டிருக்கிறோம்,” என்று கூறினார்.

வள்ளி திருமணம் தொடரின் குடும்பத்தினரோடு இந்நிகழ்விற்கு வந்திருந்த அனைத்து நட்சத்திரங்களும் ஒன்று சேர்ந்து நடனமாடி, தாங்கள் மகிழ்ந்ததோடு, பார்வையாளர்களையும் பரவசத்தில் ஆழ்த்தி இந்நிகழ்வை நிறைவு செய்தனர்.

வயாகாம்18 மீடியா பிரைவேட் லிமிடெட்., இந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சியடைந்துவரும் என்டர்டெயின்மென்ட் வலையமைப்புகளுள் ஒன்றாகும். பல செயல்தளங்களில் பல தலைமுறைகளுக்கான பல கலாச்சார பிராண்டு அனுபவங்களை வழங்கி வருகிற வலுவான பிராண்டுகளின் தாயகமாக இது திகழ்கிறது. 51% பங்குகளை கொண்டிருக்கும் நெட்வொர்க்18 மற்றும் 49% பங்குகளை கொண்டிருக்கும் வயாகாம் சிபிஎஸ் ஆகிய இரு பெருநிறுவனங்களின் கூட்டுமுயற்சி நிறுவனமான வயாகாம்18, சினிமா வழியாகவும் மற்றும் ஆன்லைன், வானொலி மற்றும் களஅளவில் கொண்டிருக்கும் தனது ஆதாரவளங்களான ஒளிபரப்பு, ஆன்லைன், தள அடிப்படையிலான, கடைகளுக்கு உள்ளே மேற்கொள்ளப்படும் விளம்பரங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களின் வழியாக இந்தியாவின் எண்ணற்ற மக்களை சென்றடைகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், TV Serial