ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வள்ளி திருமணம்.. பிரச்சனை கொடுக்க வரும் கார்த்திக்கின் பெஸ்டி சாருலதா!

வள்ளி திருமணம்.. பிரச்சனை கொடுக்க வரும் கார்த்திக்கின் பெஸ்டி சாருலதா!

வள்ளி திருமணம்

வள்ளி திருமணம்

வசுந்தரா , கார்த்திக்கின் உண்மையான அக்கா இல்லை என்பதையும் வள்ளி தெரிந்து கொண்டார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வள்ளி திருமணம் சீரியலில் கார்த்திக்கின் தோழியாக நடிகை அனு அய்யப்பன் என்ட்ரி கொடுக்கிறார்.

  கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் வள்ளி திருமணம் சீரியல் தற்போது ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் டெலிகாஸ்ட் ஆகி வருகிறது. இதில் வள்ளி - கார்த்திக் ஜோடி சின்னத்திரையில் சூப்பர் டூப்பர் ஹிட் ஜோடியாக வலம் வருகின்றனர். ரசிகர்கள் இவர்களின் ஆன் ஸ்கீரின் கெமிஸ்ட்ரியை பெரிதும் விரும்பி பார்க்கிறார்கள். யாரடி நீ மோகினி சீரியல் புகழ் நடிகை நக்ஷத்ரா இதில் வள்ளி ரோலில் நடிக்கிறார். ஆக்‌ஷன், சென்டிமெண்ட் என வள்ளி திருமணத்தில் நக்ஷத்ராவின் நடிப்பு ஃபுல் என்ர்ஜியில் உள்ளது. வள்ளிக்கு ஜோடியாக ஷ்யாம் நடிக்கிறார். ஈரமான ரோஜாவே சீரியலுக்கு அடுத்தப்படியாக வள்ளி திருமணம் தொடர் ஷ்யாமுக்கு மிகப் பெரிய ரீச்சை வாங்கி தந்துள்ளது.

  அடாவடி பெண்ணாக சுற்றி வருகிறார் வள்ளி, அவரை காதலிக்கிறார் கார்த்திக். ஆனால் அதற்குள் பல சண்டைகள் பிரச்சனைகள் வெடிக்க பல பொய்களுக்கு மத்தியில் வள்ளி - கார்த்திக் திருமணம் நடக்கிறது. வள்ளி யார்? என்ற உண்மை  சில நாட்களுக்கு முன்பு வரை கார்த்திக்கின் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாது. ஆனால் சமீபத்தில் அந்த உண்மையை வசுந்தரா கண்டுப்பிடித்து விட்டார். ஆனால் அதே நேரம் வசுந்தரா , கார்த்திக்கின் உண்மையான அக்கா இல்லை என்பதையும் வள்ளி தெரிந்து கொண்டார். அதனால் இப்போது வசுந்தரா vs வள்ளி சண்டை ஓடிக் கொண்டிருக்கிறது.


  அதே சமயம் கார்த்திக்குக்கு ஆபீசில் ஹெல்ப் செய்வதற்காக வள்ளியும் இங்கிலீஷ் கற்றுக் கொண்டு வருகிறார். இந்நிலையில் கார்த்திக் கல்லூரி தோழியாக சீரியலில் சாருலதா என்ற கேரக்டரில் நடிகை அனு அய்யப்பன் என்ட்ரி கொடுக்கிறார். இதுக் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகை அனு கன்னட சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். இதற்கு முன்பு பல தொடர்களிலும் நடித்துள்ளார். சாருலதாவின் அறிமுகம், வள்ளி - கார்த்திக் வாழ்க்கையில் கண்டிப்பாக பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும் என தெரிகிறது. அடுத்து என்ன? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், TV Serial