ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வள்ளி திருமணத்தில் கடைசி நேர திருப்பம்.. வள்ளிக்கு தாலி கட்டினார் கார்த்திக்!

வள்ளி திருமணத்தில் கடைசி நேர திருப்பம்.. வள்ளிக்கு தாலி கட்டினார் கார்த்திக்!

வள்ளி திருமணம்

வள்ளி திருமணம்

வள்ளி திருமணம் சீரியலில் அக்காவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு வள்ளி கழுத்தில் கார்த்திக் தாலி கட்டுகிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் வள்ளி திருமணம் சீரியலில் கடைசி நேர ட்விஸ்டாக வள்ளியை திருமணம் செய்கிறார் கார்த்திக்.

  யாரடி நீ மோகினி சீரியல் பிரபலமான நடிகை நக்ஷத்ரா சிறிய இடைவெளிக்கு பிறகு கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் ‘வள்ளி திருமணம் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் சின்னத்திரை நடிகர் ஷ்யாம் நடிக்கிறார். வள்ளி கதாபாத்திரத்தில் நடிக்கும் நட்சத்திராவின் அம்மாவாக வடிவு ரோலில் நடிகை நளினி, கார்த்திக்கின் அக்காவாக காய்த்ரி ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் கதையை அடிப்படையாக கொண்டது. அடாவடி பெண்ணாக சுற்றி வருகிறார் வள்ளி, அவரை காதலிக்கிறார் கார்த்திக். ஆனால் அதற்குள் பல சண்டைகள் பிரச்சனைகள் வெடிக்க இப்போது இருவரும் பிரிந்து விட்டனர்.

  கேக் வெட்டி கொண்டாடிய காற்றுக்கென்ன வேலி சூர்யா - வெண்ணிலா! எதற்காக தெரியுமா?

  கார்த்திக்கின் அக்கா நாச்சியார்,  வள்ளிக்கு கோகுலுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்துள்ளார். ஆனால் இந்த கல்யாணத்தில் வள்ளிக்கு துளியும் விருப்பம் இல்லை. வள்ளி,  கார்த்திக்கை உயிருக்கு உயிராய் நேசிப்பதால் அவரை திருமணம் செய்து கொள்ள வெண்டும் என நினைக்கிறார். ஆனால் கார்த்திக் வள்ளியை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். இப்படி இருக்கையில் இந்த வாரம் முழுவதும் வள்ளி திருமண ஸ்பெஷல் எபிசோடுகள் ஒளிப்பரப்பாகி வருகின்றன. வள்ளிக்கு யாருடன் திருமணம் நடைபெறும்? என்பது இந்த வார எபிசோடில் தெரிந்து விடும்.

  பாரதிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி! கண்ணம்மாவை பற்றி கேட்கும் ஹேமா!

  அதுமட்டுமில்லை நாளை (வெள்ளிக்கிழமை) வள்ளி திருமண  முகூர்த்த எபிசோடு 2 மணி நேரம் ஸ்பெஷல் எபிசோடக ஒளிப்பரப்பாகும் என்ற தகவலும் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்பெஷல் எபிசோடில் மெகா சங்கமம் போல் அம்மன், மதுரை சிஸ்டர்ஸ், அபி டெய்லர் சீரியல் குழுவும் வருகை தரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வெளியாகி இருக்கும் புரமோ படி, கோகுல் கடைசி நேரத்தில் வள்ளியை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்கிறார். இதனால் நாச்சியார் சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என கலங்கி நிற்கிறார். கூட்டத்தில் இருப்பவர்கள் தம்பி கார்த்திகை வள்ளிக்கு திருமணம் செய்து வை என்கின்றனர்.
   
  View this post on Instagram

   

  A post shared by Colors Tamil (@colorstvtamil)  இதுதான் ட்விஸ்ட், கடைசியில் அக்காவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு வள்ளி கழுத்தில் கார்த்திக் தாலி கட்டுகிறார். இந்த புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது. இந்த எபிசோடை  நாளை கலர்ஸ் தமிழ் டிவில் பார்க்கலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், TV Serial