அஜித்குமாரின் வலிமை திரைப்படம் வரும் மே 1 உழைப்பாளர்கள் தினம், அஜித்தின் பிறந்த நாள் ஸ்பெஷலாக ஜீதமிழில் ஒளிப்பரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கழித்து வெளியான திரைப்படம் தான் வலிமை.நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் குமார், இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகிய மூவரும் மீண்டும் கூட்டணி அமைக்க 'வலிமை' திரைப்படம் வசூல் ரீதியாக மிகப் பெரிய சாதனை செய்தது.
STATE BANK: உயர்த்தப்பட்ட வட்டி.. எஸ்பிஐயில் லோன் எடுத்தவர்கள் ஜாக்கிரதை!
வலிமை ட்ரெய்லர் ரிலீஸ் அன்று தொடங்கிய ரசிகர்களின் ஆர்பரிப்பு 100 நாட்கள் எட்டும் வரை முடியாது போல். விமர்சனம் ரீதியாக வலிமை, கலவையான வரவேற்பை பெற்றது. ஆனால் வசூல் பட்டையை கிளப்பியதாக இணையத்தில் செய்திகள் உலா வந்தன.படம் ரிலீஸ் ஆன அனைத்து இடங்களிலும் வசூலில் எந்த குறையும் இல்லை. சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் தமிழ் நாட்டில் மட்டுமே 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகவும், உலகளவில் 250 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் முடிவுகளும் வெளியிடப்பட்டன. வலிமை - முழுக்க முழுக்க 'ஆக்ஷன் பேக்' திரைப்படம் , இடையில் இடையில் சென்டிமெண்ட் சீன்களும் தூவப்பட்டிருந்தன.
UIDAI : வெறும் 12 இலக்க நம்பர் மட்டும் தான் இருக்கும்! ஆதார் கார்டின் சூப்பரான அப்டேட்!
குறிப்பாக வலிமை படத்தில் பைக் ரேஸ் மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன. அஜித் குமாரின் வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதோடு நில்லாமல் ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.ஓடிடி மிகப் பெரிய சாதனையும் செய்து இருந்தது. இந்நிலையில் தற்போது வலிமை படம் டெலிவிஷனில் டெலிகாஸ்ட் செய்யப்படவுள்ளது.
வலிமை திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி அதாவது நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாள் அன்று ஜீ தமிழ் சேனனில் ஒளிபரப்பாகவுள்ளது. இதனை ஜீ தமிழ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
அதுமட்டுமில்லை இது வெறும் டீசர் தான், மே 1 அன்று படம் எந்த நேரத்தில் டெலிகாஸ்ட் செய்யப்படும் என்ற தகவல் ட்ரெய்லர் போல் ஜீ தமிழ் வெளியிடவுள்ளது. இதனால் கண்டிப்பாக அன்றைய நாள் ஜீ தமிழ் டி.ஆர்.பியில் கெத்து காட்டும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ajithkumar, May 1, Valimai, Zee tamil