Home /News /entertainment /

காதலர் தினத்தில் உருகி உருகி பதிவிட்ட சீரியல் பிரபலங்கள்!

காதலர் தினத்தில் உருகி உருகி பதிவிட்ட சீரியல் பிரபலங்கள்!

காதலர் தினம்

காதலர் தினம்

இந்த தினத்தில் சில சின்னத்திரை பிரபலங்கள் தனது அன்பு துணையுடன் தங்களது காதலை பகிர்ந்து கொள்ளும் விதமாக சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

  காதலர் தினம் என்றாலே அன்பும், காதலும் நிறைந்த ஒரு முக்கிய தினமாக கொண்டாடப்படுகிறது. உலக அளவில் காதலர் தினத்தன்று மிக கோலாகலமாக இருக்கும். இதற்கு முக்கிய காரணம் அந்த நாளின் மகத்துவம் தான். தான் நேசிக்கும் நபரிடம் தனது காதலை வெளிக்காட்டும் விதமாக இந்த தினத்தை கொண்டாடி வருகிறோம். அந்த வகையில், இந்த தினத்தில் சில சின்னத்திரை பிரபலங்கள் தனது அன்பு துணையுடன் தங்களது காதலை பகிர்ந்து கொள்ளும் விதமாக சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். 

  சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை மைனா நந்தினி, தனது கணவர் யோகேஷ் இணைந்திருக்கும் புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில், பகிர்ந்து காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் அதில் கேப்ஷனாக,” லவ் யூ பாப்பா.. லவ் யூ ஃபார் எவர்.. நம்மக்கு பொண்ணு இருந்தா இந்த மாதிரி ஒரு பையன் தான் வேணும்னு வேண்டி இருப்பேன். நீ கிடச்சதுக்கு ஐ ஆம் சோ லக்கி! ஹேப்பி வேலண்டைன்ஸ் டே" என அன்பு ததும்ப யோகேஷ்-ஐ டேக் செய்து இந்த பதிவை போஸ்ட் செய்துள்ளார்.   
  View this post on Instagram

   

  A post shared by Nandhini Myna (@myna_nandhu)


  விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலின் பிரபல நடிகையான ஃபரினா (வெண்பா) தனது காதலர் தினத்தை கொண்டாடும் விதமாக, தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அந்த இன்ஸ்டா பதிவில் 'சிங்கிள் பசங்க மிங்கிள் ஆக வாழ்த்துகள்..எல்லோருக்கும் ஹேப்பி வேலண்டைன்ஸ் டே" என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.   
  View this post on Instagram

   

  A post shared by farina azad (@farina_azad_official)


  விஜய் டிவியின் பிரபல தொடரான தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை நக்ஷ்த்திரா தனது கணவர் ராகவ்விற்கு தனது காதலர் தின வாழ்த்தை தெரிவிக்கும் விதமாக, அவர் குழந்தையாக இருக்கும் படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் ”காதலர் தின வாழ்த்துக்கள் ராகவ். நீங்க அற்புதமான மனிதராக வளர்ந்ததற்கு நன்றி. எப்போதும் உங்கள் கண்களில் உள்ள அந்த அதிசயத்தையும், இதயத்தில் உள்ள மேஜிக்கையும் ஒருபோதும் இழக்காதீர்கள்” என பதிவிட்டுள்ளார்.
  சன் டிவி புகழ் சுந்தரி சீரியல் கேப்ரியல்லா, தனது கணவருடன் இருக்கும் படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ”புரிதல் ஒன்று தான் ஒரு உறவை நிலை நிறுத்தும், எனது புரிதல் நீ, எனது ராட்சசன் நீ, எனது கோவம் நீ, யாவும் நீ ” ஹேப்பி வேலண்டைன்ஸ் டே மை லவ்" என்று அவரது கணவருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
  Valentine’s Day 2022: காதலில் திளைத்து பின் பிரிந்து போன காதல் ஜோடிகள்!

  சமீபத்தில் திருமணமான அபிநவ்யா தனது கணவர் தீபக் உடன் சேர்ந்து எடுத்து போட்டோ ஷூட் விடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதில் 'ஹேப்பி வேலண்டைன்ஸ் டே என் தங்கமே, என் எல்லாமே நீ" என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இந்த போட்டோ ஷூட் வீடியோவை பலர் ரசித்து வருகின்றனர்.   
  View this post on Instagram

   

  A post shared by abi navya (@abinavya)


  ஒரே ஒரு பாடலில் ஒரு கோடி ரூபாய் சம்பதித்த சூப்பர் சிங்கர் பிரியங்கா... எப்படி தெரியுமா?

  விஜய் டிவியின் வைதேகி காத்திருந்தாள் தொடரில் நடித்து வந்த நடிகை சரண்யா துராடி காதலர் தினத்தன்று ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ள படங்களை பகிர்ந்துள்ளார். இவர் தனது காதலர் ராகுல் சுதர்ஷனுடன் இருக்கும் புகைபடத்தை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு இவர்கள் இருவரும் சேர்ந்து நீருக்கடியில் நடத்திய போட்டோஷூட் பதிவுகள் இணையத்தில் பெரிதும் வைரலாகியது.
  Beast Arabic Kuthu: விஜய், பூஜா ஹெக்டேவின் தாறுமாறான ஆட்டத்தில் அரபிக் குத்து பாடல் வீடியோ!

  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சுஜிதா தனது கணவருடன் இருக்கும் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் 'காதல் என்பது காதலிக்கப்படுவது. ஹேப்பி வேலண்டைன்ஸ் டே' என்று அழகாக காதல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.   
  View this post on Instagram

   

  A post shared by Sujithar (@sujithadhanush)  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  Tags: Valentine's day

  அடுத்த செய்தி