ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விமர்சனங்களை கடந்து மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் பிரபல சீரியல் நடிகை!

விமர்சனங்களை கடந்து மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் பிரபல சீரியல் நடிகை!

 சரண்யா

சரண்யா

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சரண்யாவை மீண்டும் சின்னத்திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  சின்னத்திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையான சரண்யா துராடி நீண்ட இடைவெளிப் பிறகு புதிய சீரியல் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  தமிழில் பிரபலனான செய்தி தொலைக்காட்சிகளில் செய்திவாசிப்பாளராக பணியாற்றி வந்த சரண்யா துராடி, 2012ம் ஆண்டு ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து 2015ம் ஆண்டு சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற படத்திலும் நடித்தார். ஆனால் இரண்டு படங்களுமே எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாத நிலையில் சரண்யாவுக்கு சின்னத்திரை கைகொடுத்தது.

  விஜய் தொலைக்காட்சியில் 2017ம் ஆண்டு ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த தொடரில் ‘சரண்யா விக்ரம்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக விஜய் தொலைக்காட்சி வழங்கிய புதுமுக நடிகை என்ற விருதை வென்றார். 2019 ஆம் ஆண்டு ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ரோஜா' என்ற தெலுங்கு சீரியலிலும் நடித்தார். இது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலின் தெலுங்கு வெர்ஷனான இதில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

  read more.. கோபி மீது ராதிகாவுக்கு வந்த சந்தேகம்.. பாக்கியலட்சுமி சீரியலில் செம்ம ட்விஸ்ட்!

  இதையடுத்து சன் தொலைக்காட்சியில் பிரபலமான ‘ரன்’ சீரியலில் 'திவ்யா' என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இதன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சரண்யா, இந்த சீரியலின் 86வது எபிசோட் ஒளிபரப்பாகி கொண்டிருந்த நிலையில், திடீரென அதிலிருந்து சரண்யா துரடி விலகினார். அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஆயுத எழுத்து’ என்ற தொடரில் ‘இந்திரா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இதுவும் சரண்யாவிற்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றுத் தந்தது.

  விஜய் டிவியில் ‘வைதேகி காத்திருந்தாள்’ என்ற சீரியலில் நடித்து இருந்தார். ஆனால் அந்த தொடர் திடீரென பாதியில் நிறுத்தப்பட்டது. இதன் டிஆர்பி சரியாக இல்லை என்ற காரணமும் வெளியானது. அதற்கு பிறகு சரண்யா வேறு புது தொடர்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.

  பாரதிக்கு காத்திருந்த அதிர்ச்சி.. தேடி வந்து பார்த்த கண்ணம்மா

  சீரியல்களில் நடிக்கவில்லை என்றாலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் சரண்யா, எப்போதும் தனது ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வந்தார். ‘வைதேகி காத்திருந்தாள்’ சீரியலுக்குப் பிறகு சரண்யாவை எந்த சின்னத்திரையிலும் காணாமல் கவலையில் இருந்த ரசிகர்களுக்கு இப்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. அதாவது சரண்யா தற்போது புதிய சீரியல் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.

  அந்த சீரியல் விரைவில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் சரண்யா லீடு ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிற நடிகர்கள், சீரியல் பெயர் மற்றும் ஒளிபரப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை விரைவில் ஜீ தமிழ் தொலைக்காட்சி நிர்வாகம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சரண்யாவை மீண்டும் சின்னத்திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மாஸாக ரீ-என்ட்ரி கொடுக்க உள்ள சரண்யா துரடிக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, Vijay tv, Zee tamil