ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

திருமணம் ஆகியும் அடங்காத காதலன்.. தற்கொலை செய்து கொண்ட சீரியல் நடிகைக்கு நேர்ந்த கொடுமைகள்!

திருமணம் ஆகியும் அடங்காத காதலன்.. தற்கொலை செய்து கொண்ட சீரியல் நடிகைக்கு நேர்ந்த கொடுமைகள்!

வைஷாலி டக்கர்

வைஷாலி டக்கர்

காதலித்த போது எடுத்த நெருக்கமான புகைப்படங்கள், வைஷாலியின் பர்சனல் வீடியோ ஆகியவற்றை வெளியே விடுவேன் என ராகுல் தொடர்ந்து வைஷாலியை மிரட்டி வந்து இருக்கிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பாலிவுட் சின்னத்திரை நடிகை வைஷாலி டக்கர் தற்கொலைக்கு முன்பு சந்தித்த சித்ரவதைகளை பற்றி அவரின் நண்பர் மனம் திறந்துள்ளார்.

  பாலிவுட் சின்னத்திரையில் வைஷாலி டக்கருக்கு மிகப் பெரிய ஃபேன்ஸ் கூட்டம் உள்ளது. இவர் நடித்த சீரியல்கள் டி.ஆர்.பியை எகிற வைத்தன. தமிழில் கூட இவர் நடித்த சீரியல் டப் செய்யப்பட்டது. தனது துருதுரு பேச்சால் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தார் வைஷாலி. இன்ஸ்டாவில் செம்ம ஆக்டிவாக இருக்கும் அவர் தினமும் ரிலீஸ் வீடியோக்களை வெளியிடுவார். இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு கூட காமெடி ரிலீஸ் வீடியோவை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து இருந்தார். ஒட்டுமொத்த பாலிவுட் பிரபலங்களும் வைஷாலியை மிகவும் போல்ட்டான பெண் என்றே கூறுகின்றனர். அப்படி இருக்கையில் வைஷாலி தனது ரூமில் உள்ள ஃபேனில் தூக்கிட்டு கொண்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  அவள் முகத்தில் சோகத்தை பார்த்தேன்.. கண்ணீர் விடும் மறைந்த சீரியல் நடிகையின் முன்னாள் காதலன்!

  இறப்பதற்கு முன்பு அவர் எழுதிய கடிதம் போலீசாரிடம் கிடைத்தது. அதில் முன்னாள் காதலன் ராகுல் பெயரை குறிப்பிட்டு இருந்தார். அவரின் மனைவி பெயரையும் வைஷாலி குறிப்பிட்டு இவர்களை தண்டிக்கவில்லை என்றால் தனது ஆன்மா சாந்தி அடையாது எனவும் கூறி இருந்தார். வைஷாலிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அபிநந்தன் என்பவருடன் திருமணம் நிச்சயம் நடைபெற்றுள்ளது. இதனை தனது சமூக வலைதள ரசிகர்களுடன் பகிர்ந்துள்ள வைஷாலி, தனது வருங்கால கணவர் கென்யா நாட்டை சேர்ந்த பல் மருத்துவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
   
  View this post on Instagram

   

  A post shared by Vaishali Takkar (@misstakkar_15)  அதன்பின், ஒரு மாதத்திற்கு பிறகு அபிநந்தனை திருமணம் செய்யபோவதில்லை என்றும், ஜூனில் நடக்க இருந்த திருமணமும் ரத்து செய்யப்பட்டதாகவும் வைஷாலி தெரிவித்தார். இந்த கல்யாணம் நிற்க காரணம் ராகுல் தான் என்று வைஷாலியின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ராகுலும் வைஷாலியும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துள்ளனர் பின்பு பல காரணங்களால் பிரிந்தனர். ராகுலுக்கு வேற ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்து விட்டது. ஆனாலும் அவர் வைஷாலியை டார்ச்சர் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

  பிக் பாஸ் செல்வதற்கு முன்பு அந்த பிரபலத்திடம் ஆசீர்வாதம் வாங்கிய மைனா நந்தினி!

  காதலித்த போது எடுத்த நெருக்கமான புகைப்படங்கள், வைஷாலியின் பர்சனல் வீடியோ ஆகியவற்றை வெளியே விடுவேன் என ராகுல் தொடர்ந்து வைஷாலியை மிரட்டி வந்து இருக்கிறார். இதை அவரின் நண்பர் நிஷாந்த் சிங் மல்கானி பகிர்ந்துள்ளார்.அதாவது வைஷாலியை கொஞ்சம் கொஞ்சமாக ராகுல் பிளாக் மெயில் செய்து வந்ததாகவும் தினமும் புகைப்படத்தை காட்டி அவரை சித்ரவதை செய்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுக் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bollywood, Sucide, TV Serial