ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அவள் முகத்தில் சோகத்தை பார்த்தேன்.. கண்ணீர் விடும் மறைந்த சீரியல் நடிகையின் முன்னாள் காதலன்!

அவள் முகத்தில் சோகத்தை பார்த்தேன்.. கண்ணீர் விடும் மறைந்த சீரியல் நடிகையின் முன்னாள் காதலன்!

வைஷாலி டக்கர்

வைஷாலி டக்கர்

”6 மாதத்துக்கு முன்பே அவரின் முகம் சரியில்லை. நான் கேட்ட போது உடம்பு சரியில்லை என மழுப்பினார்.”

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தற்கொலை செய்துக்கொண்ட பிரபல பாலிவுட் சின்னத்திரை நடிகை வைஷாலி டக்கர் பற்றி அவரின் முன்னாள் காதலர் சிவம் ஷர்மா மனம் திறந்து பேசியுள்ளார்.

  ஏ ரிஷ்தா க்யா கெஹ்லதா ஹை இந்தி சீரியல் மூலம் பாலிவுட் சின்னத்திரையில் தடம் பதித்தவர் நடிகை வைஷாலி டக்கர். பின்பு

  சசுரால் சிமர் கா, ஏ வாதா ரஹா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருந்தார். இவர் நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் சீரியல் சசுரால் சிமர் கா தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ‘மூன்று முடிச்சு’ என்ற பெயரில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டது. பாலிவுட் சின்னத்திரையில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்து வைத்திருந்த வைஷாலி டக்கர் சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துக் கொண்டார்.

  அண்ணாந்து பார்க்க வைக்கும் வளர்ச்சி.. வெளிநாட்டில் செந்தில் - ராஜலட்சுமி ஜோடி!

  அப்போது அவரின் ரூமில் கண்டெடுக்கப்பட்ட 5 பக்கம் கடித்தத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதில் ராகுல் நவ்லானி தன்னை டார்ச்சர் செய்து வந்ததாகவும் அவரின் மனைவியும் இதற்கு உடந்தை என்றும் வைஷாலி அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். ராகுல், வைஷாலியின் முன்னாள் காதலர் என்று கூறப்படுகிறது. இவர், வைஷாலியின் வீட்டுக்கு அருகிலே தனது மனைவியுடன் தங்கி வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவரும் காதலிக்க பின்னர் இருவரும் பிரேக்கப் செய்துள்ளனர். அதன் பின்பு ராகுல் நவ்லானி வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம், செய்துக் கொண்டார்.

  இந்நிலையில் வைஷாலி டக்கரை காதலிக்கும் போகும் எடுத்த பர்சனல் புகைப்படங்களை வைத்து வைஷாலி டக்கரை , ராகுல் தொடர்ந்து  மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதை வைத்து வைஷாலியின் திருமணத்தையும் ராகுல் நிறுத்தியதாகவும் வைஷாலியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். வைஷாலி டக்கரின் மரணம் அவரின் ரசிகர்கள் மத்தியிலும் பாலிவுட் பிரபலங்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுக் குறித்த விசாரணை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

  தல தீபாவளி கொண்டாடிய ஷபானா - ஆர்யன் ஜோடியை அரவணைத்த நடிகர் எம்.எஸ் பாஸ்கர்!

  இந்நிலையில் 2013 - 2015 காலக்கட்டத்தில் வைஷாலி டக்கரும் நடிகர் சிவம் ஷர்மாவும் டேட் செய்து வந்தனர். பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர். ஆனாலும் இவர்களின் நட்பு வைஷாலியின் இறப்புக்கு முன்பு வரை தொடர்ந்து இருக்கிறது. 6 மாதத்துக்கு முன்பு சிவம் ஷர்மாவின் பிறந்த நாள் பார்ட்டிக்கு வைஷாலி டக்கர் சென்று இருக்கிறார். அப்போது அவரின் முகத்தில் ஆழ்ந்த சோகம் இருந்ததாகவும் அவர் சிரிக்கவே இல்லை என சிவம் ஷர்மா பேட்டியில் கூறியுள்ளார். சிவம் ஷர்மா அளித்திருக்கும் சமீபத்திய பேட்டியில் வைஷாலி டக்கர் பற்றி மனம் திறந்து இருக்கிறார்.

  Vaishali Takkar lover bollywood television actress Vaishali Takkar suicide case Vaishali boyfriend shivam shares old notes
  சிவம் ஷர்மாவுடன் வைஷாலி டக்கர்

  “தீபாவளி கொண்டாட்டத்திற்காக ஊருக்கு சென்று திரும்பிய பின்பு தான் எனக்கு வைஷாலி டக்கரஎரின் விஷயம் பற்றி தெரிய வந்தது. மிகவும் போல்ட்டாக பெண் எப்படி இப்படியொரு முடிவை எடுத்தார் என தெரியவில்லை. 6 மாதத்துக்கு முன்பே அவரின் முகம் சரியில்லை. நான் கேட்ட போது உடம்பு சரியில்லை என மழுப்பினார். அது உண்மையில்லை என்பது இப்போது தெரிகிறது. ராகுலை பற்றி ஒருமுறை என்னிடம் சொன்னார். ஆனால் பிரச்சனை பற்றியெல்லாம் விரிவாக பேசவில்லை. ராகுலை இதுவரை நான் நேரில் சந்தித்தது இல்லை” என சிவம் ஷர்மா அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bollywood, TV Serial