சினிமா பிரபலங்கள் மட்டுமே சொகுசு கார்களை வாங்க முடியும் என்ற நிலையில் இப்போது தலைகீழாக மாறி வருகிறது. சின்னத்திரை பிரபலங்களும் விதவிதமான சொகுசு கார்களை வாங்கி வருகின்றனர். சமீப காலமாக சின்னத்திரை பிரபலங்களான ஆல்யா மானசா, மணிமேகலை, ஈரோடு மகேஷ், ரம்யா பாண்டியன், ஷிவானி, ராஜா ராணி 2 சித்து என பலரும் கார் வாங்கியுள்ளதாக சோசியல் மீடியாவில் அறிவித்து வருகின்றனர். தற்போது அந்த வரிசையில் இணைந்துள்ளார் சீரியல் நடிகை சரண்யா துராடி .
தொலைக்காட்சிகளில் செய்திவாசிப்பாளராக பணியாற்றி வந்த சரண்யா துராடி, 2012ம் ஆண்டு ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து 2015ம் ஆண்டு சென்னை உங்களை
அன்புடன் வரவேற்கிறது என்ற படத்திலும் நடித்தார். ஆனால் இரண்டு படங்களுமே எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாத நிலையில் சரண்யாவுக்கு சின்னத்திரை கைகொடுத்தது.
இதையும் படிங்க.. விஜய் டிவியில் மீண்டும் பிக் பாஸ் ராஜூ.. அந்த சீரியலில் திரும்பவும் வர போகிறாரா?
விஜய் தொலைக்காட்சியில் 2017ம் ஆண்டு ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதில் நடித்ததற்காக விஜய் தொலைக்காட்சி புதுமுக நடிகை என்ற விருதை வென்றார். 2019 ஆம் ஆண்டு ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ரோஜா' என்ற தெலுங்கு சீரியலிலும் நடித்தார். இது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலின் தெலுங்கு பதிப்பு ஆகும்.
இதையடுத்து சன் தொலைக்காட்சியில் பிரபலமான ரன் என்ற சீரியலில் நடித்தார். இதன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சரண்யா, திடீரென அந்த சீரியலை விட்டு விலகினார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆயுத எழுத்து என்ற சீரியலில் நடித்தார். இதுவும் சரண்யாவிற்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றுத் தந்தது.
விஜய் டிவியில் வைதேகி காத்திருந்தாள் என்ற சீரியலில் நடித்து இருந்தார். ஆனால் அந்த தொடர் திடீரென பாதியில் நிறுத்தப்பட்டது. அதற்கு பிறகு சரண்யா வேறு புது தொடர்களில் நடிக்காமல் இருக்கிறார். சின்னத்திரையில் பிசியாக இல்லாவிட்டாலும், சோசியல் மீடியாவில் எப்போதும்
ஆக்டிவாக இருந்து வரும் சரண்யா தனது வாழ்வில் நிகழும் மகிழ்ச்சியான விஷயங்களை ரசிகர்களுடன் ஷேர் செய்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது சரண்யா துராடி ஒரு சொகுசு காரை வாங்கியுள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள போட்டோ வைரலாகி வருகிறது. புது பிஎம்டபுள்யூ கார் உடன் அவர் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் அவர் புது காதல் கதை தொடங்குகிறது, எங்கள் குடும்பத்துக்கு புது உறுப்பினரை வரவேற்கிறோம் எனக்குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து புது கார் வாங்கியுள்ள சரண்யாவிற்கு வாழ்த்து மழை பொழிந்து வரும் ரசிகர்கள், சைடு கேப்பில் காரின் விலையை கூகுள் சர்ச் செய்து மிரண்டு போயுள்ளனர்.
எனக்கு எல்லாம் தெரியும்.. கோபிக்கு ஷாக் கொடுத்த பாக்கியா மகன் செழியன்!
சரண்யா வாங்கியிருப்பது BMW X5 என்ற சொகுசு காரை, இதன் சென்னை விலை கிட்டத்தட்ட ஒரு கோடியே 14 லட்சம் என்பதை கேள்விப்பட்டு ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.