ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கலர்ஸ் தமிழ் டிவி-யில் வைபவின் பபூன்!

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கலர்ஸ் தமிழ் டிவி-யில் வைபவின் பபூன்!

பபூன்

பபூன்

தமிழ்நாட்டின் கடலோரப் பின்னணியில் உருவாகும் இப்படம், குமரனின் (வைபவ்) வாழ்க்கையைச் சுற்றி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகத் தொலைக்காட்சியில் முதல் முறையாக தெருக்கூத்து கலைஞரின் வாழ்க்கையை விவரிக்கும் பபூன் திரைப்படத்தை ஒளிபரப்புகிறது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி.

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் வயகாம்18 நிறுவனத்தின் தமிழ் பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் டிவி, நடிகர் வைபவ் மற்றும் நடிகை அனகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள பபூன் திரைப்படத்தின் பிரீமியரை வரும் ஞாயிறு அன்று மதியம் 2:00 மணிக்கு ஒளிபரப்ப உள்ளது.

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் வெளிவந்திருக்கும் இந்த க்ரைம் த்ரில்லர், சிறப்பு பார்ட்னர் ஸ்ரீ குமரன் தங்க மாளிகையின் வளையல் மேளாவுடன் இணைந்து, ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 25, மதியம் 2:00 மணிக்கு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்ப உள்ளது. பேராசையின் வினை மற்றும் அதிகார அரசியல் போன்றவற்றை மிகத் தெளிவாக பிரதிபலிக்கும் பபூன் திரைப்படத்தை கலர்ஸ் தமிழில் கண்டு மகிழுங்கள்.

அறிமுக இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில், நடிகர் ஆடுகளம் நரேன், நடிகர் ஆத்தான்குடி இளையராஜா மற்றும் நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் இதில் துணை நடிகர்களாக நடித்துள்ளனர். இது மட்டுமின்றி பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இப்டத்தை தயாரித்தது மட்டுமில்லாமல் படத்திலும் நடித்துள்ளார். நடுத்தர வர்க்கப் போராட்டங்கள், போதைப்பொருள் கடத்தல், தெருக்கூத்து நாடகங்கள் மற்றும் காதலுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் சிறந்த பொழுதுபோக்காக அமையும்.

தமிழ்நாட்டின் கடலோரப் பின்னணியில் உருவாகும் இப்படம், குமரனின் (வைபவ்) வாழ்க்கையைச் சுற்றி வருகிறது. ஒரு தெருக்கூத்து கலைஞர், அவரின் நகைச்சுவையான செயல்களுக்காக பிரபலமாக உள்ளார். இருப்பினும், அவரது வருமானத்தின் அதிருப்தி காரணமாக தெருக்கூத்து கலைஞராக தனது வாழ்க்கையை விட்டுவிட்டு வெளிநாட்டில் வேறு தொழிலைத் தேடுகிறார். அவர் பின்னர் ஓட்டுநராக வேலையில் சேருகிறார்.

புதிய போஸ்டருடன் வாரிசு படத்தின் அட்டகாச அப்டேட்... மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்!

ஆனால் அவர் ஓட்டும் வாகனம் சட்டவிரோதமாக போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்தவுடன் விரைவில் சிக்கலில் மாட்டி கொள்கிறார். பின் அவரையும் அவரது நண்பர் முத்தையாவையும் (நடிகர் ஆத்தான்குடி இளையராஜா) போலீசார் கைது செய்கின்றனர். எப்படி குமரன் தப்பித்து, தன்னை குற்றமற்றவன் என நிரூபிக்கிறான் மற்றும் அவனுடைய முதுகுக்குப் பின்னால் இருக்கும் அரசியல்வாதிகள் யார் என்பது, கண்டிப்பாக பார்வையாளர்கள் அனைவரையும் தங்கள் இருக்கைகளின் விளிம்பில் கொண்டு செல்லும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ்