• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Vadivelu: தீபாவளிக்கு சின்னத்திரையில் வடிவேலு - எந்த தொலைக்காட்சியில் தெரியுமா?

Vadivelu: தீபாவளிக்கு சின்னத்திரையில் வடிவேலு - எந்த தொலைக்காட்சியில் தெரியுமா?

வடிவேலு

வடிவேலு

ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக சின்னத்திரையில் வடிவேலு ஒரு நிகழ்ச்சியில் தோன்ற இருக்கிறார்

  • Share this:
    சில ஆண்டுகளாக நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிக்காத போதும், மீம்ஸ் வழியாக பலதரப்பட்ட ரசிகர்கள் மனதில் நிரந்தரமான, நீங்காத இடம் பிடித்து வந்துள்ளார். எந்த சூழலாக இருந்தாலும் அதற்கு கச்சிதமாக பொருந்துவது போல நடிகர் வடிவேலுவின் திரைப்படங்களில் ஏதேனும் ஒன்று அமைந்துவிடும்.

    மீம்ஸ் மட்டுமின்றி அவருடைய காமெடி டிராக் போல இதுவரை வேறு யாருமே செய்ததில்லை, வடிவேலு போல் ரசிகர்களை யாருமே மகிழ்வித்தது இல்லை, எப்பொழுது அவர் மீண்டும் திரையில் தோன்றுவார் என்று பல்வேறு ரசிகர்களும் வடிவேலுவின் ரீஎன்ட்ரிக்காக ஆவலாகக் காத்திருந்தனர்.

    வடிவேலு மீண்டும் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி சில நாட்களுக்கு முன் வெளிவந்து லட்சக்கணக்கான ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. மீண்டும் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி வெளியான உடனேயே பல திரைப்படங்களில் கமிட்டாகி இருக்கிறார் நகைச்சுவல் நடிகர் வடிவேலு. இந்நிலையில், சின்னத்திரையிலும் தோன்றப் போகிறார் என்பது தீபாவளிக்கு மிகப்பெரிய பரிசு கிடைத்தது போல, பெரிய திரை மட்டுமின்றி சின்னத்திரை ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    எந்த பண்டிகை வந்தாலும் சின்னத்திரைக்கு கொண்டாட்டம் தான். ஒவ்வொரு சேனல்களிலும் பல்வேறு ரகளையான நிகழ்ச்சிகள் நடைபெறும். முன்பு போல், பட்டிமன்றம், சிறப்பு சமையல் நிகழ்ச்சி, சிறப்பு திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களில் நடிப்பவர்கள், சின்னத்திரை தொகுப்பாளர்கள் உட்பட பலரும் பலவிதமான நிகழ்ச்சிகளில் பங்கேற்று பண்டிகை நாட்களை சேனல் நண்பர்களுடன் கொண்டாடுவார்கள். அதேபோல இந்த ஆண்டு தீபாவளிக்கும் எல்லா சேனல்களிலும் என்னென்ன சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது என்று ஏற்கனவே விளம்பரங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.

    இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக சின்னத்திரையில் வடிவேலு ஒரு நிகழ்ச்சியில் தோன்ற இருக்கிறார் என்ற செய்தியும் வெளிவந்தது. எந்த சேனலில் எந்த நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு கலந்து கொள்ளப் போகிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாகவும், அதே நேரத்தில் ஆர்வமாகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஒரு ஸ்பெஷல் ஷோவில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டு சிறப்பித்து இருக்கிறார்.

    அந்த ஸ்பெஷல் நிகழ்ச்சி கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது என்ற செய்தி வெளிவந்துள்ளது. என்ன சேனலாக இருந்தாலும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் வடிவேலு மீண்டும் திரும்பி வந்தது குறித்து நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

    பல்வேறு தோற்றத்தில், பல பாத்திரங்களில் நடித்துள்ள நடிகர் வடிவேலு சில ஆண்டுகள் இடைவெளி எடுத்துக் கொண்டதால், தற்போது தோற்றத்தில் கொஞ்சம் மெலிந்து காணப்படுகிறார். இருக்கிறார் இருந்தாலும் அவருடைய தனித்துவமான முகபாவனைகளுக்கு என்றுமே ரசிகர் பட்டாளம் குறையாது. தனது ரீஎன்ட்ரியில் வடிவேலு தற்போது 5 திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இவற்றில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் என்று பெயரிடப்பட்ட திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்ததாக, லைகா நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தியும் வெளியானது. வெள்ளித்திரையில் அவரைக் காண்பதற்கு முன்பு. தன் ரசிகர்களுக்கு சின்னத்திரை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: