• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விஜய் டிவி வடிவேல் பாலாஜியின் நினைவு தினம்...கல்லறைக்கு சென்ற சிரிச்சா போச்சி குழு

விஜய் டிவி வடிவேல் பாலாஜியின் நினைவு தினம்...கல்லறைக்கு சென்ற சிரிச்சா போச்சி குழு

வடிவேல் பாலாஜி

வடிவேல் பாலாஜி

ஒரு இரங்கல் செய்தியை சிரிச்சா போச்சு குழுவின் இயக்குனர் தாம்ஸன் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

  • Share this:
    விஜய் டிவியில் ஒளிபரப்பான சில ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று கலக்க போவது யாரு.

    இந்த நிகழ்ச்சி மூலம் வெள்ளித்திரையில் எண்ணற்ற பிரபலங்கள் தற்போது ஜொலித்து வருகின்றனர். அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வந்த சிரிச்சா போச்சு என்ற நிகழ்ச்சி இன்னும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அது இது எது நிகழ்ச்சியில் வரும் சிரிச்சா போச்சு செக்மென்ட்டிற்கு மட்டும் ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அதில் சில திரையுலக பிரபலங்களும் இருக்கின்றனர்.

    அந்த நிகழ்ச்சியில் முக்கிய பங்கு வகித்திருந்தவர் தான் வடிவேல் பாலாஜி. ஒரே ஆளாக நின்று அனைவரையும் சிரிக்க வைக்கும் திறமை இவரிடம் உள்ளது. வடிவேலு கெட்டப்பில் இவரது பெர்பாமன்ஸ்-க்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு. விஜய் டிவி-யில் ஒளிபரப்படும் அனைத்து காமெடி நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கெடுத்திருப்பார். தனக்கு பின்பு வரும் சில புதிய முகங்களில் இருக்கும் திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கும் சில வாய்ப்புகளை வாங்கித்தருவார்.

    அப்படிப்பட்ட நல்ல உள்ளம் கடந்த வருடம் செப்டம்பர் 10ம் தேதி இந்த பூவுலகை விட்டு பிரிந்தது. அவரது திடீர் மரணம் அனைவருக்குமே பெரிய சோகத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்தது. தற்போது, வடிவேல் பாலாஜி மறைந்து ஒரு வருடம் ஆன நிலையில் அவருக்காக ஒரு இரங்கல் செய்தியை சிரிச்சா போச்சு குழுவின் இயக்குனர் தாம்ஸன் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், " எங்கள் நினைவுகளில் எங்கள் சிரிச்சா போச்சியின் படை தளபதி இறந்து இன்றுடன் ஒரு வருடம் 😭😭😭😭😭😭 We miss you till our last breath Balaji" என்று கேப்ஷன் செய்துள்ளார்.



     




    Instagram இல் இந்த இடுகையை காட்டு





     

    Thomson Doss இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@director_thomson_vijaytv)






    மேலும் அந்த பதிவில், அவர் சிரிச்சா போச்சு மற்றும் கலக்க போவது யாரு குழுவினர் அனைவரையும் டேக் செய்துள்ளார். வடிவேலு பாலாஜியின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பல விஜய் டிவி பிரபலங்கள் நேற்று அவரின் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தி அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். விஜய் டிவி புகழ், தனது இன்ஸ்டா பக்கத்தில் வடிவேலு பாலாஜியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உருக்கமான இரங்கல் தெரிவித்து உள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வடிவேல் பாலாஜி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன் 4 மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அந்த சீசனில் வடிவேல் பாலாஜி பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதன் பின்னர் தான் சிரிச்சா போச்சு, கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்திருந்தார்.  இவர் சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: