Home /News /entertainment /

வெப் சீரிஸாக வெளிவருகிறது மக்களின் ஆல் டைம் பேவரைட் சீரியல்!

வெப் சீரிஸாக வெளிவருகிறது மக்களின் ஆல் டைம் பேவரைட் சீரியல்!

ரமணி vs ரமணி

ரமணி vs ரமணி

இந்தத் வெப் தொடரில் முன்னணி நடிகர் ராம்ஜி மிஸ்டர். ரமணியாக நடிக்கிறார் மற்றும் வாசுகி ஆனந்த் மிஸஸ் ரமணியாக நடிக்கிறார்.

    தற்போது சின்னத்திரை தொலைக்காட்சியில் எண்ணற்ற சீரியல்கள் ஒளிபரப்பட்டு வருகின்றன. காலை முதல் இரவு வரை இல்லத்தரசிகளை மட்டுமல்லாது இளசுகளையும் தங்களது சேனல் முன்பு கட்டிப்போடும் அளவுக்கு ஒவ்வொரு சீரியலும் விறுவிறுப்பான கதைக்களத்தை அமைத்து வருகின்றன. என்னதான் கதைக்களத்தை அமைத்தாலும் இன்றைய காலத்து சீரியல்கள் 80 மற்றும் 90-களில் ஒளிபரப்பப்பட்ட சீரியல்களுக்கு ஈடாகுமா என்று சொல்வது போல, அந்த காலத்தில் பல ஹிட் சீரியலைகள் இருந்தன. அதிலும், இந்த ஒரு சீரியலுக்கு மட்டும் இப்போது கூட ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

    ஆம், 1998-ஆம் ஆண்டு ராஜ் டிவியில் ஒளிபரப்பான ‘ரமணி Vs ரமணி’ தொடர் தான் அது. முழுக்க முழுக்க நகைச்சுவையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த தொடர் என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது. ராம்ஜி, வாசுகி ஆனந்த், தேவதர்ஷினி, பிரித்விராஜ் ஆகியோர் நடித்த இத்தொடர் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை கே.பாலச்சந்தரின் மின்பிம்பங்கள் நிறுவனம் தயாரித்தது. ‘மர்ம தேசம்’ நாகா இயக்கினார். இதனை தொடர்ந்து இத்தொடரின் இரண்டாம் சீசன் "ரமணி Vs ரமணி2.0" என்ற பெயரில் 2001-ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. கவிதாலயா புரடக்சன்ஸ் நிறுவனத்தின் தொலைக்காட்சி பிரிவான மின்பிம்பங்கள் தயாரித்த இத்தொடரை நாகா இயக்கியிருந்தார்.

    தற்போது இந்த தொடர் புதிய வடிவத்தில் "ரமணி Vs ரமணி3.0" என்ற பெயரில் மீண்டும் திரைக்கு வர இருக்கிறது. அதுவும் வெப் சீரிஸ் வடிவில் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாகா இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த சீரிஸை கவிதாலயா புரடக்சன்ஸ் தான் தயாரிக்கிறது.

    இந்த வெப் தொடரில் முன்னணி நடிகர் ராம்ஜி மிஸ்டர். ரமணியாக நடிக்கிறார் மற்றும் வாசுகி ஆனந்த் மிஸஸ் ரமணியாக நடிக்கிறார். இவர்களது மகள் ராகினியாக பொன்னி சுரேஷ் நடிக்க, மகன் ராம் வேடத்தில் பரம் கனேஷ் நடிக்கிறார். இந்த சீசனை கோபு பாபு, பரத், விக்னேஷ்வரி ஆகியோர் இணைந்து திரைக்கதை, வசனம் எழுதுகிறார்கள். சதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ரெஹான் இசையமைக்கிறார். சிவா யாதவ் கலைத் இயக்கம் செய்கிறார். இருப்பினும் இந்த 3ம் சீசன் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்பது தெரியவில்லை.

    இதையும் படிங்க.. சிக்கியது ஆதாரம்.. தமிழ் - சரஸ்வதி கல்யாணம் நடக்க வாய்ப்பு இல்லை!

    இந்த புதிய சீசன் குறித்து இயக்குனர் நாகா கூறியதாவது, "குடும்ப வாழ்க்கை என்பது ஏற்ற தாழ்வுகள், கண்ணீர் தருணங்கள் மற்றும் மகிழ்ச்சிகள் நிறைந்தது. எந்த குடும்பத்திலும் இதுதான் அமைப்பாக இருக்கும். இந்தப்பொதுமை என்பது புவியியல் எல்லைகளை மட்டுமல்ல, இனம், மதம், சாதி அல்லது மதம் ஆகியவற்றைக் கடந்தது. மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியக் குடும்பம் சில விஷயங்களில் தனித்துவமானது.

    தாத்தா, பாட்டி, மகன்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் அனைவரும் ஒரே கூரையின் கீழ் வாழும் கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பு வேகமாக மறைந்து வந்தாலும், ஒவ்வொருவரின் வாழ்விலும் இந்த உறவினர்கள் செலுத்தும் வலுவான செல்வாக்கு பாதிப்புகள் எப்போதும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றது. அதனால் இன்றும் தனித்தனியாக வேறு வேறு இடங்களில் வாழ்ந்தாலும், கூட்டுக் குடும்ப மனநிலையில் தான் வசித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க.. பிக் பாஸ் சீஸன் 5 நிகழ்ச்சி முடிந்தாலும் இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை!

    இத்தகைய சூழ்நிலையில் வாழும் குடும்பங்களுக்கு, வெளி உலகத்திலிருந்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைத் தவிர, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஈகோ மோதல்கள், தலைமுறை இடைவெளிகள், இணக்கமின்மை, டீனேஜ் துயரங்கள் மற்றும் குழந்தை வளர்ப்பு போன்ற அதன் சொந்த பிரச்னைகள் பல உள்ளன. அவற்றை இந்த தொடர் அட்டகாசமான நகைச்சுவை பாணியில் கொடுக்கும்" என்று கூறினார்.

    கவிதாலயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பாளரான புஷ்பா கந்தசாமி கூறுகையில், ஒரு தயாரிப்பாளராக, எங்களின் ஆல் டைம் ஹிட் தொடரான ‘ரமணி Vs ரமணி’யின் புதிய சீசனை உருவாக்குவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆன்லைன் தளங்களில் இந்த தொடருக்கு கிடைத்த பெரும் வரவேற்பு, இந்த புதிய மூன்றாவது சீசன் உருவாக காரணமாக அமைந்தது. ஒரு வருடத்திற்கும் மேலாக அமர்ந்து , எங்கள் அன்றாட வாழ்க்கையிலிருந்த அட்டகாச தருணங்களை இத்தொடரின் கருப்பொருளாக உருவாக்கியுள்ளோம். இன்றைய குடும்பங்களில் தினசரி நடக்கும் பொதுவான அம்சங்களின் அடிப்படையில், இந்தப் புதிய சீசனை உருவாக்கியுள்ளோம். இது ரசிகர்களின் வாழ்வை பிரதிபலிப்பதோடு, பார்வையாளர்களை சத்தமாக சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கும்" என்று கூறியுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: OTT Release, TV Serial

    அடுத்த செய்தி