விஜய் டிவி குக் வித் கோமாளி பிரபலம் இப்போது சன் டிவி டாப் சீரியலில் நடிக்க களம் இறங்கி விட்டார். யார் அவர்? வாங்க பார்க்கலாம்.
சின்னத்திரை டாப் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி முதல் சீசனில் வனிதா ,
உமா ரியாஸ், ரம்யா பாண்டியன் ,பிரியங்கா ரோபோ ஷங்கர், ரேகா, மோகன் வைத்யா, தாடி பாலாஜி , கானா சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஆரம்பத்தில் இருந்தே பயங்கரமான சமையல் கலையை வெளிப்படுத்தியவர்கள் உமா ரியாஸ் மற்றும் வனிதா விஜயகுமார். இந்த இருவருக்கும் இடையில் தான் நிகழ்ச்சி ஆரம்பம் ஆன முதலே பலத்த போட்டி நிலவி வந்தது. இந்நிலையில் முதல் சீசனின் வெற்றியாளர் ஆனார் வனிதா.
பெண் குழந்தை பிறந்தது.. ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ் சொன்ன ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ தாமரை!
அதே நேரம் உமா ரியாஸ் தனியாக யூடியூப் சேனல் தொடங்கி அதில் தனது குக்கிங் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்பே உமா ரியாஸ் சின்னத்திரையில் பயங்கர ஃபேமஸ்.
சிவகார்த்திகேயன் வெற்றி பெற்ற கலக்க போவது யாரு? நிகழ்ச்சியின் நடுவரும் உமா ரியாஸ் தான். தனது மிமிக்ரி திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் கமலின் அன்பே சிவம் மற்றும் ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவரின் கணவர் ரியாஸ் கான் பற்றி அறிமுகமே தேவையில்லை. அதே போல் இவர்களின் மூத்த மகன் ஷாரிக், பிக் பாஸில் கலந்து கொண்டார். தொடர்ந்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் சூப்பராக நடனம் ஆடி டைட்டில் அடித்தார்.
கணவர் குறித்து முதன் முதலாக பேசிய விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா! விவாகரத்து வதந்தி உண்மையா?
அதன் பின்பு வெள்ளித்திரையில் நடிக்க தொடங்கினார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தில் ஷாரிக் நடித்து இருந்தார். இப்படி குடும்பமே சினிமாவில் பிஸியாக இருக்க, தற்போது உமா ரியாஸ் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார். அதுவும் சின்னத்திரையின் டி.ஆர்.பி டாப் சீரியலான கயல் சீரியலில் உமா ரியாஸ் எழில் அம்மா ரோலில் நடிக்க தொடங்கியுள்ளார்.
இதற்கு முன்பு இந்த ரோலில் காய்த்ரி நடித்து வந்தார். இந்நிலையில் அவர் சீரியலில் இருந்து விலக அந்த ரோலில் தற்போது உமா ரியாஸ் களம் இறங்கியுள்ளார். உமா ரியாஸ் வில்லனத்தில் மிரட்டுவார் என்பதில் சந்தேகமே இல்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.