Home /News /entertainment /

மீண்டும் ஒளிபரப்பாக இருக்கும் உள்ளம் கொள்ளை போகுதடா சீரியல் - ரசிகர்கள் உற்சாகம்!

மீண்டும் ஒளிபரப்பாக இருக்கும் உள்ளம் கொள்ளை போகுதடா சீரியல் - ரசிகர்கள் உற்சாகம்!

உள்ளம் கொள்ளை போகுதடா

உள்ளம் கொள்ளை போகுதடா

உள்ளம் கொள்ளை போகுதடா சீரியல் ஹிட் ஆனதுக்கு மிகப்பெரிய காரணமாக இருந்தது, சீரியலின் டைட்டில் பாடல்.

    உள்ளம் கொள்ளை போகுதடா சீரியலின் இரண்டாம் பாகம் பாலிமர் தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பாக இருக்கிறது.

    சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களுக்கும் பலதரப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். தமிழ் மொழியிலேயே உருவாக்கப்படும் சீரியல்களுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் போலவே மொழிமாற்றம் செய்யப்பட்டு அல்லது ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் ரசிகர் கூட்டம் இருக்கின்றது. ஹிந்தியிலிருந்து டப் செய்யப்பட்டு ஒளிபரப்பான பல சீரியல்கள் தமிழ் ரசிகர்களை பெரிதாக கவர்ந்தது என்றே கூறலாம்.

    இதில் தமிழில் டப் செய்யப்பட்டு மிகப்பெரிய ஹிட்டான சீரியலான உள்ளம் கொள்ளை போகுதடா மீண்டும் ஒளிபரப்பாக இருக்கிறது.
    பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டப்பிங் சீரியல் உள்ளம் கொள்ளை போகுதடா, தமிழ் சீரியல்களுக்கே பெரிய போட்டியாக இருந்தது என்று கூறும் அளவுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தனர்.

    சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் மொழியில் உருவாக்கப்பட்ட சீரியல்களை விட, டப் செய்யப்பட்ட தொடர்களுக்குத் தான் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. தமிழில் டப் செய்யப்பட்ட சீரியல்கள் பாலிமர் மற்றும் ராஜ் உள்ளிட்ட பல சேனல்களில் ஒளிபரப்பாகின. புதுப்புது அர்த்தங்கள், உறவுகள் தொடர்கதை, இனிய இருமலர்கள், நெஞ்சம் பேசுதே, சிந்துபைரவி, உறவே உயிரே உள்ளிட்ட பல சீரியல்களும் சூப்பர் ஹிட் சீரியல்களாக மாறின.

    அதில் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த சீரியல் தான் உள்ளம் கொள்ளை போகுதடா. 2012 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை உள்ளம் கொள்ளை போகுதடா பாலிமர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. ராம் மற்றும் பிரியாவின் இயல்பான, அழகான காதல் கதை இந்த சீரியல் அமைந்திருந்தது. இது சோனி டிவியில் ஒளிபரப்பான Bade Hachche Lagthe Hain ஹிந்தி சீரியலின் தமிழ் பதிப்பு.

    முதல் முறை ஒளிபரப்பாகும் போதே, சீரியல் நாளொன்றுக்கு இரண்டு முறை மறு ஒLiபரப்பு செய்யப்பட்டது. ஒவ்வொரு நாளும் மாலை 7 மணிக்கு புதிய எபிசோட் ஒளிபரப்பாகும். அதைத் தொடர்ந்து, அதே எபிசோட், இரவு 10 மணிக்கும், மறுநாள் மதியம் 1.30 மணிக்கும் ஒளிபரப்பாகும். டிஆர்பி ரேட்டிங் தொடர்ச்சியாக முன்னணியில் இருந்தது.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு பாதியில் போன லட்சுமி அம்மா.. மீண்டும் அழைத்த விஜய் டிவி!

    உள்ளம் கொள்ளை போகுதடா சீரியல் ஹிட் ஆனதுக்கு மிகப்பெரிய காரணமாக இருந்தது, சீரியலின் டைட்டில் பாடல். மிக இனிமையான குரலில் ஸ்வேதா மேனன் டைட்டில் பாடலை பாடியுள்ளார். கவிதையை அமைந்திருக்கும் தலைப்பைப் போலவே. பாடலில் ஒவ்வொரு வரியையும் மனதைக் கொள்ளை கொண்டன. இந்த பாடலை எழுதியவர் கவிஞரும், பாடலாசிரியருமான மறைந்த நா.முத்துக்குமார். பாடல் வரிகளுக்கும், குரலுக்கும் மயங்காதவர் யாருமே இல்லை என்று கூறும் அளவுக்கு அவ்வளவு அழகாக அமைந்திருந்தது டைட்டில் பாடல்.



    இப்போது இந்த சீரியலின் இரண்டாம் பாகம் பாலிமர் தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பாக இருக்கிறது. நவம்பர் 8 முதல் தினமும் இரவு 9.30 சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. முதல் பாகத்துக்கு பெற்ற வரவேற்பைப் போலவே, இரண்டாம் பாகத்துக்கும் ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: TV Serial

    அடுத்த செய்தி