காதலர் தினத்தையொட்டி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 2 புத்தம் புதிய தொடர்கள்!

காதலர் தினத்தையொட்டி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 2 புத்தம் புதிய தொடர்கள்!
நாகினி மற்றும் இதையத்தை திருடாதே
  • News18
  • Last Updated: February 14, 2020, 12:36 PM IST
  • Share this:
காதலர் தினத்தையொட்டி இரட்டிப்பு மகிழ்ச்சியாக இரண்டு புத்தம்புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவுள்ளது `கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சி.

காதலர் தினத்தையொட்டி பிப்ரவரி மாத சிறப்புத் தொடர்களாக `கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது `இதயத்தைத் திருடாதே’ மற்றும்` நாகினி4’. காதல் கதையை மையமாகக் கொண்ட புதிய தொடரான `இதயத்தைத் திருடாதே’ காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று இரவு 7.30 மணிக்கு திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகவுள்ளது.

அதைத்தொடர்ந்து அமானுஷ்ய சக்தியைப் பிரதிபலிக்கும் கதையான `நாகினி4’ வரும் பிப்ரவரி 17 முதல் இரவு 8.30 மணிக்கு திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகவுள்ளது.


`இதயத்தை திருடாதே’ மற்றும் `நாகினி 4’ ஆகிய வண்ணமயமான இப்புதிய தொடர்கள் முற்றிலும் மாறுபட்ட கதையம்சங்களுடன் உங்களை மகிழ்விக்கக் காத்திருக்கின்றன.

இந்த புதிய தொடர்கள் குறித்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் வர்த்தக தலைவர் அனூப் சந்திரசேகரன் கூறுகையில், ``பெண்கள் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வதன் மூலமாக, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு பார்வையாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக `இதயத்தைத் திருடாதே’ தொடர் கட்டாயத் திருமணத்திற்கு எதிரான ஒரு பெண்ணின் போராட்டத்தைத் தெரிவிக்கிறது. முன் எப்போதுமில்லாத முற்றிலும் மாறுபட்ட காதல்கதையாக இத்தொடர் இருக்கும் . அதே போல், `நாகினி4’ விறுவிறுப்பான அமானுஷ்யக் கதையாக இருக்கும். இது நிச்சயமாக பார்வையாளர்களை இருக்கை நுனிக்கு அழைத்துவரும்.இதுவும் பெண்ணை மையமாகக் கொண்ட வித்தியாமான வலிமையான கதை. இத்தகைய நிகழ்ச்சிகளை வழங்குவதில் `கலர்ஸ்தமிழ்’ பெருமை கொள்கிறது’’ என்றார்.

இருமனங்கள் இணைவதுதானே திருமணம். ஆனால் விருப்பமில்லாமல் இருவருக்கும் நடக்கும் கட்டாயத்திருமணத்தால் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கும்? அதனால் அவர்கள் சந்திக்கக் கூடிய பிரச்சனைகள் என்ன என்பதே `இதயத்தை திருடாதே’ நெடுந்தொடர்.

நேர்மறைச் சிந்தனைகளுடன் கூடிய பெண்ணான சஹானா, தன்னைப் போன்ற சிந்தனைகளையும் கொள்கைகளையும் கொண்ட தன் காதலனை பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறாள்.

சஹானாவுக்கு முற்றிலும் நேர்மாறான கொள்கை உடையவன் எம்.எல்.ஏ.வின் விசுவாசியான சிவா. சஹானாவின் திருமண ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, அந்த நேரத்தில் துரதிர்ஷ்டவசமான பல தொடர் நிகழ்வுகள் அரங்கேறிவிடுகின்றன. இதனால் சஹானாவும் சிவாவும் இருவேறு துருவங்களாக நிற்கிறார்கள்.

தன் சுயலாபத்துக்காக குறுக்கு வழிகளையும் துணிச்சலாகக் கையிலெடுக்கும் எம்.எல்.ஏ.தாட்சாயினி, தன் அரசியல் போட்டியாளரான வானவராயனை எதிர்த்து தனது அரசியல் அதிகாரத்தை மீண்டும் பெற முயற்சி செய்கிறார். இவர்களுக்கு இடையே துவங்கும் அரசியல் விளையாட்டில் சஹானாவும் சிவாவும் சிக்கிக் கொள்கிறார்கள்.

இந்த விளையாட்டில் பகடைக்காய்களாகி சிவாவும் சஹானாவும் திருமணம் செய்துகொள்ள நேரிடுகிறது. தன் கனவுகளைத் தொலைத்துவிட்டு தன் வாழ்வில் திடீர் திருப்புமுனைகளைச் சந்திக்கும் சஹானா அவற்றையெல்லாம் இனி எவ்வாறு சமாளிக்கப் போகிறாள்? சஹானாவுக்கும் சிவாவுக்குமிடையே காதல் மலருமா? என்கிற அழகிய திருப்பங்களுடன் வரும் பிப்ரவரி 14ம் தேதி முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது `இதயத்தைத் திருடாதே’ நெடுந்தொடர்.

அறிமுக நாயகனாக, சிவா கதாபாத்திரத்தில் நடிக்கும் நவீன் இந்த தொடர் குறித்து கூறுகையில், இதயத்தை திருடாதே போன்ற சுவாரஸ்யமான தொடர்களில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கதையின் மையக்கரு எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்துள்ளது. பெயருக்கு ஏற்ப, இதயத்தைத் திருடாதே தொடர், பார்வையாளர்களின் இதயங்களை நிச்சயம் திருடும் என்று தெரிவித்தார்.

அறிமுக நாயகியாக, சஹானா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹிமா பிந்து கூறுகையில், இதயத்தைத் திருடாதே சுவாரஸ்யமான புதிரான கதை , அதில் நடிப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன்’’ என்றும் கூறினார்.

காதலையும் பழிவாங்கலையும் ஒருங்கே இணைத்து திக் திக் திருப்பங்களுடன் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கக் காத்திருக்கிறது `நாகினி4’ நெடுந்தொடர். மர்ம உலகில் நடக்கும் ஸ்வாரசியமான சம்பவங்களைக் கொண்டு கலர்ஸ் GECயில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `நாகினி4’ தொடர் இப்போது முதன்முதலாக தமிழில் `கலர்ஸ் தமிழ்’ தொலைகாட்சியில் பிப்ரவரி 17 ம் தேதியிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

நியா ஷர்மா, ஜாஸ்மின் பாஷின், விஜயேந்திர குமேரியா மற்றும் சயந்தனி கோஷ் ஆகிய பிரபல நட்சத்திரங்களுடன் பிருந்தா மற்றும் நந்திதா ஆகிய கதாபாத்திரங்கள் மூலம் அவர்களின் கடந்தகாலம் மற்றும் எதிர்காலத்தை இணைக்கும் விதமாக திகில் கூட்டும் பழிவாங்கல் கதையாக வரவிருக்கிறது. கேசவ்வை திருமணம் செய்து கொள்ள மானசா தனது நாகினி சக்திகளை தியாகம் செய்துவிடுகிறாள்.

ஆனால் அதே நேரத்தில் தன் மகள் நந்திதாவுக்கு 25 வயதாகும்போது அவளுக்குக் கிடைக்கும் நாகினி சக்தியின் மூலம் பாரீக் குடும்பத்தைப் பழிவாங்க நினைக்கிறாள். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அந்த நாகினி சக்திகள் அனைத்தும் பிருந்தாவுக்குக் கிடைத்துவிடுகிறது. பிருந்தா , நந்திதா இருவரும் குழந்தைகளாகப் பிறந்தபோது குழந்தை மாற்றம் நடந்து விடுகிறது. இந்த குழப்பமான சூழலிலிருந்து தொடரும் பழிவாங்கல் கதையே `நாகினி 4’.

விருப்பமில்லாமல் நடக்கும் கட்டாயத் திருமணத்தால் சஹானா மற்றும் சிவாவின் வாழ்வில் சந்திக்கக் கூடிய பிரச்சனைகள் என்ன என்பதைச் சொல்லும் `இதயத்தைத் திருடாதே’ நெடுந்தொடர் பிப்ரவரி 14 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7.30 மணிக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட நாகினிகளுடன் வித்தியாசமானத் திருப்பங்களுடன் கூடிய `நாகினி4’ பிப்ரவரி 17 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சிகளை எப்போது வேண்டுமானாலும் VOOT ஆப்பில் கண்டு மகிழலாம்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி அனைத்து முன்னணி கேபிள் நெட்வொர்க் மற்றும் டிடிஎச் தளங்களான சன் டைரக்ட்டில் சேனல் எண்.128, டாடா ஸ்கையில் சேனல் எண்.1555, ஏர்டெல்லில் சேனல் எண்.763, டிஷ் டிவியில் சேனல் எண்.1808 மற்றும் வீடியோகான் டி2எச்சில் சேனல் எண்.553-ல் ஒளிபரப்பாகிறது.

Also see...
First published: February 14, 2020, 12:36 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading