Home /News /entertainment /

அபி - சக்தி கல்யாணம் நின்றதா? தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் ட்விஸ்ட்!

அபி - சக்தி கல்யாணம் நின்றதா? தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் ட்விஸ்ட்!

பவித்ரா ஜனனி

பவித்ரா ஜனனி

அபி - சக்தி கல்யாணம் நடக்கும் இடத்திற்கு சென்று  வெற்றி பேசுவது போன்ற புகைப்படங்கள் ஏற்கெனவே வெளியாகின

    தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் அபி - சக்தி கல்யாணம் நிற்குமா? வெற்றி வந்து தனது காதலை அபியிடம் சொல்வாரா? என பெரும் எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் உச்சக்கட்ட பரபரப்பில் சென்று கொண்டிருக்கிறது. இத்தனை மாதமாக அபி ,வெற்றி வீட்டில் இருக்கும் போது அவருடைய அருமை வெற்றிக்கு தெரியவில்லை. கடைசி நேரத்தில் செக் வைத்து அபியை வீட்டை விட்டு அனுப்பி விட்டார். ஆனால் இப்போது கதையே வேற. அபி மீது வெற்றிக்கு காதல் வர, அபியை மீண்டும் வீட்டுக்கு அழைத்து செல்ல நினைக்கிறர். ஆனால் கதை தலைகீழானது. அபிக்கு சக்தியுடன் திருமண ஏற்பாடு நடக்கிறது. வெற்றிக்கும் ராதாவுக்கும் ஒருபக்கம் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.

    அப்படி போடு! பிக் பாஸ் பிரியங்கா சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வைரல் தகவல்

    வெற்றி எப்படியும் கடைசி நேரத்தில் வந்து தன்னை  அழைத்து செல்வார் என்ற தைரியத்தில் இருக்கிறார் அபி. அபியின் அப்பா, அவரை மிரட்டி இந்த கல்யாணத்திற்கு சம்மதம் வாங்குகிறர். அதே போல் வெற்றியின் அம்மா, வெற்றியை மிரட்டி சத்தியம் வாங்கி ராதாவுடன் கல்யாணம் செய்து வைக்க நினைக்கிறார். பெரியவர்களின் இந்த சத்தியத்தால் அபி - வெற்றி அமைதியாக இருக்கிறனர். அபிக்கு பார்த்து இருக்கும்  மாப்பிள்ளை சக்தி வெற்றியின் உயிர் நண்பன்.

    அந்த நிகழ்ச்சிக்கு சித்து - ஸ்ரேயா தான் வரவேண்டும்.. அடம் பிடிக்கும் ரசிகர்கள்!

    அவருக்கு வெற்றி - அபி பற்றி எதுவும் தெரியாது. ஒரே நாளில் ஒரே கோயிலில் ஒரே முகூர்த்ததில் இருவரின் திருமணம் நடக்கவுள்ளன. வெற்றி - அபி சேர வேண்டும் என்பதே ரசிகர்களின் திருப்பம். ஆனால் அது எப்படி நடக்கும்? என்பது தான் பரபரப்பான் எபிசோடு. இன்றைய எபிசோடில் வெற்றிக்கு, ஈஸ்வரி அம்மாவின் வாக்குபடி ராதா வீட்டுக்கு வீட்டோட மாப்பிள்ளை ஆகும் விஷயம்  தெரிய வருகிறது. இதை வைத்து அவரின் அம்மாவுடன் சண்டையும் போடுகிறார்.
    அதே போல் ஒருபக்கம் ராதா, இந்த  கல்யாணத்தை நிறுத்தினால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் வெற்றியை மிரட்டுகிறார்.

    கதை இப்படி ஏகப்பட்ட ட்விஸ்டுகளுடன் செல்ல அபி - சக்தி கல்யாணம் நடக்கும் இடத்திற்கு சென்று  வெற்றி பேசுவது போன்ற புகைப்படங்கள் ஏற்கெனவே வெளியாகின. அது அபி காணும் கனவா? இல்லை உண்மையில் வெற்றி கடைசி நேரத்தில் இந்த கல்யாணத்தை நிறுத்துவரா? என்பது எபிசோடு டெலிகாஸ்ட் ஆன பின்பே தெரிய வரும். இந்த எபிசோடுக்காக  தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி