சென்னையில் முழு ஊரடங்கு - சீரியல் ஷூட்டிங், சினிமா போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறுத்தம்

ஜூன் 19-ம் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு மற்றும் சினிமா போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

சென்னையில் முழு ஊரடங்கு - சீரியல் ஷூட்டிங், சினிமா போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறுத்தம்
படப்பிடிப்பு தளத்தில் ஆர்.கே.செல்வமணி மற்றும் குஷ்பு
  • Share this:
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடங்கியிருந்த சின்னத்திரை படப்பிடிப்பு மற்றும் சினிமா போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளைத் தொடங்க கடந்த மாதம் கடுமையான நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது.

தற்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் இந்த 4 மாவட்டங்களிலும் வரும் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கை அமல்படுத்த நேற்று தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து வருன் ஜூன் 19-ம் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு, சினிமா போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பெஃப்சி சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார். இதனால் மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


எனவே மீண்டும் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகள் சீரியல்களின் பழைய எபிசோட்களை மீண்டும் ஒளிபரப்புவார்கள் என்று தெரிகிறது. இருந்தாலும் தொலைக்காட்சி நிறுவனங்கள் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதையும் இன்னும் வெளியிடவில்லை.

அதேபோல் முன்னதாக தமிழக அரசு அனுமதி அளித்த போது மாஸ்டர், இந்தியன் 2, டாக்டர் உள்ளிட்ட படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: மேலும் ஒரு துயரம்... சுஷாந்தின் மறைவால் அதிர்ச்சியில் உயிரிழந்த நெருங்கிய உறவினர்
First published: June 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading