ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கோபியின் தகிடுதத்தம் முடிவுக்கு வரும் நேரம்.. உண்மையை சொல்லும் எழில்!

கோபியின் தகிடுதத்தம் முடிவுக்கு வரும் நேரம்.. உண்மையை சொல்லும் எழில்!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

கோபி பற்றிய உண்மை பாக்கியாவுக்கு தெரிய வந்தால் என்ன நடக்கும்? என்பது இப்போது ரசிகர்களின் அடுத்தக்கட்ட எதிர்பார்ப்பு.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பாக்கியலட்சுமி சீரியலில் இத்தனை நாட்களாக மொத்த குடும்பத்தையும் ஏமாற்றி வந்த கோபியின் தகிடுதத்தம் முடிவுக்கு வர போகிறது. கோபி - ராதிகா உறவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க அவரின் மகன் எழில் முடிவு எடுக்கிறார்.

  விஜய் தொலைக்காட்சியின் டாப் ஹிட்டான சீரியல் லிஸ்டில் முதலிடத்தில் இருப்பது பாக்கியலட்சுமி சீரியல். இல்லத்தரசிகளின் ஃபேவரெட் சீரியல் என சொல்லப்படும் பாக்கியலட்சுமியில் குடும்ப தலைவியான பாக்கியா சந்திக்கும் பிரச்சனைகள் தான் கதையின் ஒன்லைன். இதில் பாக்கியாவின் கணவராக  நடிக்கும் கோபி கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய ரீச் உள்ளது. சொல்லப்போனால் இந்த சீரியலில் பாக்கியாவுக்கு அடுத்து ரசிகர்கள் அதிகம் விரும்புவது கோபி கதாபாத்திரத்தை தான்.

  கோபி, ராதிகா என்ற பெண்ணுடன் வீட்டுக்கு தெரியாமல் உறவு வைத்து உள்ளார். ஆரம்பத்தில் நண்பர்களாக தொடங்கிய இவர்களின் நட்பு, கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கம் ஆகி இப்போது கல்யாணம் வரை வந்து நிற்கிறது. அதே நேரம், பாக்கியாவும், ராதிகாவும் நெருக்கமான தோழிகள். ஆனாலும் கூட கோபியை பற்றிய உண்மை ராதிகாவுக்கும் தெரியாது, பாக்கியாவுக்கும் தெரியாது.

  இதையும் படிங்க.. சன் டிவியில் பொங்கல் ஸ்பெஷல் மெகாஹிட் திரைப்படம்.. ரசிகர்கள் உற்சாகம்!

  ஆனால் கோபியின் அப்பாவுக்கு இந்த உண்மை தெரிந்து விட்டது. கோபத்தில் தனது மகனை கூப்பிட்டு வார்ன் செய்தார் சத்தியமூர்த்தி. ஆனால் அதை கோபி கண்டுக்கொள்ளவில்லை. அதே போல் கோபியின் இளைய மகனும், பாக்கியாவின் செல்ல மகனான எழிலுக்கும் கோபி பற்றிய உண்மை தெரிந்து விட்டது.கோபியின் அப்பா, மகன் இருவருமே பாக்கியாவுக்காக இந்த உண்மையை வெளியில் சொல்லாமல் மறைக்கின்றனர். அதே நேரம், மறைமுகமாக கோபியை எச்சரிக்கவும் செய்கின்றனர். ஆனால் கோபி யார் பேச்சையும் கேட்பதாக தெரியவில்லை.

  இதையும் படிங்க.. பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நடிகர் சரத்குமாருக்கு இவ்வளவு சம்பளமா? வாயடைத்து போன ரசிகர்கள்!

  இந்நிலையில் தான் சீரியலில் அடுத்தக்கட்டம் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. அதுக்குறித்த புரமோ தான் தற்போது வெளியாகியுள்ளது. சத்திய மூர்த்தியிடம் எழில், கோபி பற்றிய எல்லா உண்மையும் எனக்கு தெரியும் என போட்டு உடைகிறார். இதைக் கேட்டு சத்தியமூர்த்தி ஷாக் ஆகுகிறார். கோபியை எப்படியாவது சரிசெய்ய இருவரும் முடிவு எடுக்கின்றனர்.

  அப்படியென்றால் இருவரும் இந்த உண்மையை பற்றி பாக்கியாவிடம் பேசுவார்களா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. ஒருவேளை இந்த உண்மை பற்றி பாக்கியாவுக்கு தெரிய வந்தால் என்ன நடக்கும்? என்பது இப்போது ரசிகர்களின் அடுத்தக்கட்ட எதிர்பார்ப்பு.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv