சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ-யை அவரது காதலனின் தந்தை கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும், ஏதேனும் நடந்தால் அதற்கு தான் பொறுப்பேற்கமாட்டேன் என அவரது கணவரும் சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
சின்னத்திரை நடிகரான ஈஸ்வர் திருவான்மியூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது மனைவியும் சின்னத்திரை நடிகையுமான ஜெயஸ்ரீ கடந்த 2019ஆம் ஆண்டு கணவர் ஈஸ்வர் கொடுமைப்படுத்துவதாக அளித்த புகாரில் அடையாறு அனைத்து மகளிர் போலீசாரால் ஈஸ்வர் கைது செய்யப்பட்டார்.இதனையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் ஈஸ்வர் இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வர், ஜெயஸ்ரீ தங்களது அடுக்குமாடி குடியிருப்பில் மருத்துவர் ராகவேஷ் என்பவருடன் ஒன்றாக வசித்து வருவதாகவும், இவர்கள் ஒன்றாக இருந்து வருவது ராகவேஷின் தந்தையான சண்முகத்திற்கு பிடிக்கவில்லை என அவர் கூறினார். தொழிலதிபரும், சினிமா தயாரிப்பாளரான சண்முகம் தனது மகனை விட்டு ஜெயஸ்ரீ பிரிந்து செல்ல வேண்டும் என தன்னிடம் கூறியதாகவும், அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை தன்னிடம் காண்பித்து புலம்பியதாகவும் அவர் கூறினார்.
தனது விவகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இது குறித்து பேச மறுத்ததால் தனது மகனை விட்டு ஜெயஸ்ரீ செல்லவில்லையென்றால் ஜெயஸ்ரீ மீது காரை ஏற்றி கொலை செய்துவிடுவேன் என தன்னிடம் சண்முகம் தெரிவித்ததாக அவர் கூறினார்.இதனால் ஜெயஸ்ரீக்கு ஏதாவது நடந்துவிட்டால் தன் மீது பழி வரும் என்பதால் தற்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும், ஏதேனும் நடந்தால் தனக்கு எந்தவிதமான சம்பந்தமுமில்லை என அவர் கூறினார்.
ஜெயஸ்ரீ பணம் பறிக்கும் நோக்கத்திலேயே பல பேரிடம் பழகி வருவதாகவும், பொய் காரணங்களை கூறி விவகாரத்து வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்த்து வருவதாக அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Divorce, Life threat, Police complaint, TV Serial