விவேக்கிற்கு அஞ்சலி... உள்ளத்தை உருக்கும் விஜய் டிவி-யின் சின்ன கலைவாணர் நிகழ்ச்சி!

சின்ன கலைவாணர் நிகழ்ச்சி

விவேக்கை நினைவுக்கூறும் வகையில் விஜய் தொலைக்காட்சி ‘சின்னக்கலைவாணர்’ எனும் சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பவிருக்கிறது.

  • Share this:
    மறைந்த நடிகர் விவேக்கை நினைவுக்கூறும் வகையில் ‘சின்னக்கலைவாணர்’ எனும் நிகழ்ச்சி விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் நடிகர் விவேக். ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அத்தனை பேருடனும் இணைந்து நடித்திருந்தார். கடந்த ஏப்ரல் 16-ம் தேதி மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் அவரது உடல்நிலை குறித்து 24 மணி நேரத்துக்குப் பிறகு தான் தெரிய வரும் என, மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.



    விவேக் எப்படியாவது மீண்டு வந்துவிடுவார் என திரையுலகினரும், ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், ஏப்ரல் 17-ம் தேதி காலை அவரது உயிர் பிரிந்தது. 58 வயதான விவேக்கின் அந்த திடீர் மரணம், ரசிகர்களையும், திரையுலகினரையும் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் விவேக்கை நினைவுக்கூறும் வகையில் விஜய் தொலைக்காட்சி ‘சின்னக்கலைவாணர்’ எனும் சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பவிருக்கிறது. நகைச்சுவை நடிகர்கள் ஹரத்தி மற்றும் கணேஷ், விஜய் டிவி நட்சத்திரங்கள் அறந்தாங்கி நிஷா, நந்தினி, ஈரோடு மகேஷ், இயக்குனர் வசந்த் உள்ளிட்ட விவேக்குடன் பணிபுரிந்த நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டு அவரைப் பற்றி அன்போடு நினைவு கூர்ந்துள்ளனர்.



    விவேக்குடன் ‘தாராளபிரபு’ படத்தில் நடித்த ஹரீஷ் கல்யாண், ‘கண்ணே கலைமானே’ பாடலைப் பாடியுள்ளார். இதன் ப்ரோமோக்கள் தற்போது வெளியாகியுள்ளன. சின்னக்கலைவாணர் நிகழ்ச்சி விஜய் டிவி-யில் ஆகஸ்ட் 29-ம் தேதி மாலை 3 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: