வைல்ட் கார்டில் திருநங்கை என்ட்ரி - பரபரப்பாகுமா பிக்பாஸ் வீடு

news18
Updated: July 29, 2019, 7:28 PM IST
வைல்ட் கார்டில் திருநங்கை என்ட்ரி - பரபரப்பாகுமா பிக்பாஸ் வீடு
பிக்பாஸ் வீட்டில் திருநங்கை
news18
Updated: July 29, 2019, 7:28 PM IST
பிக்பாஸ் வீட்டுக்குள் திருநங்கை ஒருவர் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்தியில் 13 -வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், தமிழில் 3 வது சீசன் ஆரம்பித்துள்ளது. 3 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கிவருகிறார்.

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீரா மிதுன் ஆகிய 4 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதையடுத்து வைல்ட் கார்டில் உள்ளே செல்ல இருக்கும் நபர் யார் என்ற எதிர்பார்ப்பும் பார்வையாளர்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆல்யா மானசா, பவர் ஸ்டார் சீனிவாசன், ஸ்ரீரெட்டி, சங்கீதா உள்ளிட்டோர் வைல்ட் கார்டில் உள்ளே செல்ல இருக்கும் போட்டியாளர்களின் பட்டியலில் உள்ளனர்.


இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் மீராமிதுன் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்தது போல், கடந்த 21-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமன்னா சிம்ஹாரி என்ற திருநங்கை போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார்.திருநங்கை தமன்னா, நடிகர் பவன் கல்யாணின் தீவிர ரசிகை என்பதோடு சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading...

தெலுங்கு பிக்பாஸில் திருநங்கை தமன்னா பரபரப்பை ஏற்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

வீடியோ பார்க்க: விஜய்யுடன் மோதும் தனுஷ்!

First published: July 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...