• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • முதன் முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக திருநங்கை!

முதன் முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக திருநங்கை!

Bigg Boss Tamil 5: திருநங்கைகளுக்காக நடத்தப்படும் ஃபேஷன் ஷோவில் மிஸ் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய நமீதா, மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் 2020 விருதை வென்றதையும் நினைவுக்கூர்ந்தார்.

  • Share this:
    பிக் பாஸ் சீசன் 5-ல் திருநங்கை நமீதா மாரிமுத்து போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி முக்கியமானது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இது எப்போதும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெறும். எப்போதும் ஜூன் மாத இறுதியில் தொடங்கும் பிக் பாஸ் கடந்த வருடம் கொரோனா தொற்றால் தாமதமாக தொடங்கியது.

    இந்த வருடம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது பிக் பாஸ் 5 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. முதலில் வீட்டை சுற்றிக் காட்டிய கமல் பின்னர் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.

    இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது போட்டியாளராக திருநங்கை நமீதா மாரிமுத்து களமிறங்கியிருக்கிறார். கல்லூரி 3-ம் ஆண்டு படிக்கும் போது, வீட்டில் இருந்து வெளியேறிய நமீதா அதன் பின்னர் படிக்க முடியவில்லை என்றார். பின்னர் ஆபரேஷன் முடித்து பல போராட்டங்களுக்குப் பிறகு தனது பெற்றோர் தன்னை ஏற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டார்.

    பின்னர் மாடலிங் துறையை தேர்வு செய்து அதில் தனது சமூகத்தின் சார்பாக பங்கேற்று வருவதாகக் கூறினார். திருநங்கைகளுக்காக நடத்தப்படும் ஃபேஷன் ஷோவில் மிஸ் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய நமீதா, மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் 2020 விருதை வென்றதையும் நினைவுக்கூர்ந்தார்.



    அதோடு திருநங்கையான, ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் எழுதிய புத்தகத்தை கமல் ஹாசனுக்கு பரிசளித்தார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: