Home /News /entertainment /

டி.ஆர்.பி ரேட்டிங்கில் டாப் 5 இடத்தில் உள்ள பிரபல சீரியல்கள்!

டி.ஆர்.பி ரேட்டிங்கில் டாப் 5 இடத்தில் உள்ள பிரபல சீரியல்கள்!

Tamil Serial TRP

Tamil Serial TRP

Tamil Serial TRP Rating | ஒவ்வொரு வாரமும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதல் 5 இடத்தில் உள்ள தொடர்கள் பற்றி குறிப்பிடுவார்கள். கடந்த வாரம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாராந்திர அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த வகையில், இரண்டு பிரபலமான தொலைக்காட்சித் தொடர்களான பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீண்டும் மெகா சங்கமத்தில் இணைந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
தமிழ் தொலைக்காட்சியில் அதிகம் பார்க்கப்படும் தினசரி சீரியல்கள் பல உள்ளன. அவற்றில் சில மட்டுமே நேயர்களின் அதிக விருப்பத்தை பெற்று இருக்கும். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பல வகையான சேனல்கள் இருந்தாலும் அவற்றில் ஒளிபரப்பாகும் சில தொடர்கள் மட்டுமே டாப் இடத்தை பிடிக்கும். இதை அறிந்து கொள்ள டி.ஆர்.பி ரேட்டிங்கை பயன்படுத்துகின்றனர். பல வகையான தொடர்களில் ஒரு சில மட்டுமே இந்த ரேட்டிங் டாப் 5 இடத்தை பிடிக்கும்.

அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதல் 5 இடத்தில் உள்ள தொடர்கள் பற்றி குறிப்பிடுவார்கள். கடந்த வாரம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாராந்திர அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த வகையில், இரண்டு பிரபலமான தொலைக்காட்சித் தொடர்களான பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீண்டும் மெகா சங்கமத்தில் இணைந்துள்ளது.

மேலும் மக்கள் இந்த மெகா சங்கமத்தை ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். அதே போன்று இதன் டி.ஆர்.பி தரவரிசையும் எதிர் பார்த்தபடியே முதல் ஐந்து இடங்களுக்குள் நுழைந்துள்ளது. சமீபத்திய அறிக்கைகளின்படி, தமிழ் தொலைக்காட்சியில் அதிகம் பார்க்கப்படும் தினசரி தொடர்களில் விஜய் டிவி தொடர்கள் ஹிட்டடித்து உள்ளது. அதன்படி, மெகா சங்கமம் டாப் இடத்தை பெற்றுள்ளது. இதற்கு முன்னர் இந்த பட்டியலில் வேறு சில சீரியல்கள் இடம் பிடித்திருந்தன. ஆனால், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி மெகா சங்கமம் காம்போ இந்த ரேட்டிங்கில் நுழைந்துள்ளது.



குறிப்பாக இவற்றின் காம்போ தமிழ் தொலைக்காட்சியின் டாப் ஆர்டரின் நிலையை மாற்றியமைத்ததாகத் தெரிகிறது. ஸ்பெஷல் ரீயூனியன் எபிசோட் சமீபத்திய டி.ஆர்.பி தரவரிசையில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. மறுபுறம், கயல் தொடர் மீண்டும் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. தந்தையின் மறைவுக்குப் பிறகு குடும்பத்திற்கு ஒரே ஆதாரமாக இருக்கும் ஒரு செவிலியரைச் சுற்றியே கயல் கதை நகர்கிறது. இதற்கிடையில், கயலின் பெரியப்பாவான தர்மலிங்கம், தனது சகோதரனின் குடும்பத்திற்கு எதிராக சதி செய்து குடும்பத்தை சீரழிக்க நினைக்கிறார்.

Also Read : பிரபல சீரியல் நடிகைக்காக கண்ணீர் விட்டு கதறிய ஸ்ரீநிதி!

பெரியப்பாவின் சூழ்ச்சியை முறியடிப்பதில் கயல் வெற்றி பெறுவாரா? இது தான் கதையின் கருவாக அமைகிறது. கயல் சீரியல் தொடர்ந்து, தினசரி நேயர்களின் முதன்மையான விருப்பமாக உள்ளது. இதை அடுத்து வானதைப் போல தொடர் சமீபத்திய டி.ஆர்.பி ரேட்டிங் அறிக்கையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. வானத்தைப் போல சீரியலின் கதைக்களம் ஒரு சகோதரன் மற்றும் சகோதரியைச் சுற்றி வருவதால், இந்தத் தொடர் பார்வையாளர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றது.



மூன்றாவது இடம் சுந்தரி தொடருக்கு கிடைத்துள்ளது. இந்த சீரியலானது, தனது கருமையான தோல் நிறத்தின் காரணமாக அடிக்கடி மதிப்பிடப்பட்டு தவறாக நடத்தப்படும் ஒரு கிராமத்துப் பெண்ணின் கதையைச் சொல்கிறது, இது தற்போது மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

Also Read : ரெட் வெல்வெட் உடையில் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங் - நியூ போட்டோஸ்!

இந்த தொடரில் சமூக வலைதளத்தில் பிரபலமான நடிகையான கேப்ரியல்லா செல்லஸ் மற்றும் நடிகர் ஜிஷ்ணு மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த சீரியலும் அதிக திருப்பங்களை கொண்டு உள்ளது. இதற்கு அடுத்ததாக, சமீப காலமாக கதைக்களத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்த பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த வாரம் பார்வையாளர்களை கவர்ந்து, தரவரிசையில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Entertainment, TRP Rating, TV Serial

அடுத்த செய்தி