Home /News /entertainment /

90ஸ் கிட்ஸுக்கு ஒரு சீக்ரெட்! - டாப் 10 சுரேஷ் பகிர்வு

90ஸ் கிட்ஸுக்கு ஒரு சீக்ரெட்! - டாப் 10 சுரேஷ் பகிர்வு

டாப் 10 சுரேஷ் குமார்

டாப் 10 சுரேஷ் குமார்

சமீபத்தில் நெட் பிளிக்ஸ் இணைய பக்கங்களில் சுரேஷ் தொகுத்து வழங்கிய `நெட்ப்ளிக்ஸ் டாப் 10' என்கிற நிகழ்ச்சி வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் நெட்பிளிக்ஸில்  கடந்த ஆண்டு வெளியான வெப் சீரிஸ்கள் மற்றும் படங்களில் சிறந்த 10 படங்களை பற்றி சுரேஷ் அவரது பாணியில் பேசியிருக்கிறார்.

மேலும் படிக்கவும் ...
பள்ளி மாணவர்கள் தொடங்கி 70ஸ் கிட்ஸ் வரை யூ டியூப் சேனல் ஆரம்பித்து, திரைப்படங்களை ரிவ்யூ செய்கின்றனர். எத்தனை திரைப்பட விமர்சகர்கள் வந்தாலும், டாப் 10 சுரேஷ் அளவுக்கு மக்கள் மனதில் யாராலும் இடம்பிடிக்க வாய்ப்பில்லை.

90ஸ் கிட்ஸ் ஃபேவரைட் தொகுப்பாளரான சுரேஷ் குமார்,  சன் டிவியின் டாப் 10 நிகழ்ச்சியை கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு மேல் தொகுத்து வழங்கியிருக்கிறார். ஒரு தொகுப்பாளர் எப்படியிருக்க வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதற்கு சுரேஷ் சிறந்த எடுத்துக்காட்டு. கோட்டு சூட்டு, கன்னியமான ஆன் ஸ்கிரீன் அப்பியரன்ஸ்,  தமிழ் உச்சரிப்பு, புன்சிரிப்பு இவைதான் அவரின் அடையாளம்.  

சினிமா மட்டுமின்றி கல்வித் துறையிலும் இயங்கி வருகிறார்.  டாக்டர் பட்டம் பெற்ற சுரேஷ் மருத்துவக் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிகிறார்.

Top 10 suresh
டாப் 10 சுரேஷ்


சமீபத்தில் நெட் பிளிக்ஸ் இணைய பக்கங்களில் சுரேஷ் தொகுத்து வழங்கிய `நெட்ப்ளிக்ஸ் டாப் 10' என்கிற நிகழ்ச்சி வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் நெட்பிளிக்ஸில்  கடந்த ஆண்டு வெளியான வெப் சீரிஸ்கள் மற்றும் படங்களில் சிறந்த 10 படங்களை பற்றி சுரேஷ் அவரது பாணியில் பேசியிருக்கிறார்.  இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம ரீச். பாசிட்டிவ் கமெண்டுகள் குவிந்துள்ளன.  திரைப்படங்களை ரிவ்யூ செய்வதற்கும், வெப் சீரிஸ் ரிவ்யூ செய்வதற்கு இருக்கும் வேறுபாடு என்ன என்று டாப் 10 சுரேஷ் அவர்களிடமே கேட்டோம்..  

Top 10 suresh
டாப் 10 சுரேஷ்


"ஒரு படத்தை பார்க்க ரெண்டு மணி நேரம் ஆகும். அதுக்கப்புறம் அதை அனலைஸ் பண்ணி, ரிவ்யூவுக்காக ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுவோம். ஆனா வெப் சீரிஸ் அப்படி கிடையாது. வெவ்வேறு எபிசோடுகளா வரும். ஒவ்வொரு சீரிஸ் முடியும் போது ரிவ்யூ கொடுக்கலாம் இல்லாட்டி ரெண்டு மூணு எபிசோட் சேர்ந்து சாராம்சத்தை கொடுக்கலாம். எனவே வெப் சீரிஸ் பார்த்து ரிவ்யூ கொடுக்க ரொம்ப நேரம் செலவிட வேண்டியிருக்கும். 

இதையும் படிங்க..  மிர்ச்சி செந்தில் டெடிகேஷன் வேற லெவல்! - நெகிழும் கதாசிரியர்!

திரைப்படங்கள தியேட்டரில் பார்க்கும் போது மக்களுடைய ஃபீட்பேக் நேரடியாக தெரியும். அதனால மக்கள் ரியாக்‌ஷனையும் எங்க ரிவ்யூல சேர்த்துப்போம்.  ஆனா வெப் மூவிஸ் வீட்ல உட்கார்ந்து பார்க்கும்போதும் என்னோட கண்ணோட்டத்தில் மட்டும் தான் ரிவ்யூ கொடுக்க முடியும். பப்ளிக் ரிவ்யூ கிடைக்காது.  நான் நெட்ப்ளிக்ஸ் டாப் 10 நிகழ்ச்சிக்காக என் நண்பர்கள் வட்டத்துல கொஞ்சம் இன்புட் வாங்கினேன்.

ஒடிடி பிளாட்ஃபார்மில் இதுவரைக்கும் இப்படி ஒரு நிகழ்ச்சி வந்ததில்ல. நாங்கதான் முதன் முதலா முயற்சி பண்ணியிருக்கோம். மக்கள் நல்ல ரெஸ்பான்ஸ் கொடுத்திருக்காங்க. தொடர்ந்து இந்த நிகழ்ச்சி பண்ணலாமா வேணாமா-ன்னு நெட்ப்ளிக்ஸ் முடிவு எடுக்கும்’’ என்றார்.

top 10 suresh
டாப் 10 சுரேஷ்


நெட்ப்ளிக்ஸ்  டாப் 10 வீடியோவுக்கு வந்த கமெண்டுகளில், 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட், மனுஷன் அப்படியே இருக்கார், இவருக்கு வயசே ஆகாதா போன்ற கமெண்டுகள் தான் அதிகம். ரசிகர்கள் சொல்ற மாதிரி `எப்படி சார் அப்படியே இருக்கீங்க? என்று அவரிடம் கேட்டதற்கு மிகுந்த தன்னடக்கத்துடன் அவர் அளித்த பதில்..

"90ஸ் கிட் என் மேல இவ்ளோ பாசமா இருக்குறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இது எனக்கு பெரிய வரப்பிரசாதம். இதற்கு எவ்வளவு கடின உழைப்பு போட்டாலும் தகும். மத்தபடி எனக்கு வயசே ஆகாதான்னு நிறைய பேர் கமெண்ட் பண்ணி இருக்காங்க. என்னை பொறுத்தவரைக்கும் வயசு அப்படிங்கறது ஒரு நம்பர் தான். வயசாக வயசாக உடல் எடை கொஞ்சம் கூடுதல், முடி கொட்டுறது மாதிரி நம்ம தோற்றத்தில்  நிறைய மாற்றங்கள் ஏற்படும். நம்ம லைஃப் ஸ்டைல் சரியா இருந்தா இந்த மாதிரியான மாற்றங்கள் சீக்கிரமே ஏற்படாம தடுக்கலாம். சுய ஒழுக்கம் நிறைந்த வாழ்வியல் முறை ரொம்ப முக்கியம். 

இதுக்காக ரொம்ப தியாகம் பண்ணனும்னு அவசியம் இல்ல. உணவு , உடற்பயிற்சி மட்டும் முறைப்படுத்தினாலே இளமையா இருக்கலாம்னு நினைக்கிறது தப்பு. இதையெல்லாம் தாண்டி ஒரு முக்கியமான விஷயம் இருக்கு. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்னு சொல்வாங்க. அதாவது நம்ம உள்ளம் எப்படியிருக்க அதைதான் முகம் பிரதிபலிக்கும். மத்தவங்களுக்கு கெட்டதை நினைக்காம, நல்லதே நினைக்கணும். புறம் பேசக்கூடாது. கெட்ட உணர்வுகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது. யாரையும் வெறுக்காத அன்பு மட்டும் இருந்தா, நம்ம முகம் எப்பவும் அழகா தான் இருக்கும்’’ என்றார் தன் சிக்னேச்சர் புன்சிரிப்புடன்.  என்ன 90ஸ் கிட்ஸ், டாப் 10 சுரேஷ் சொன்ன ஃபிட்னஸ் சீக்ரெட்  புரிஞ்சுதா?
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

 
Published by:Aswini S
First published:

Tags: Netflix, Sun TV, TV show

அடுத்த செய்தி