Home /News /entertainment /

Pudhu Pudhu Arthangal |புதுப்புது அர்த்தங்கள்: லட்சுமியை தாறுமாறாக கடுப்பேற்றும் ஆதிரா மற்றும் பிரதீபா!

Pudhu Pudhu Arthangal |புதுப்புது அர்த்தங்கள்: லட்சுமியை தாறுமாறாக கடுப்பேற்றும் ஆதிரா மற்றும் பிரதீபா!

Pudhu Pudhu Arthangal

Pudhu Pudhu Arthangal

Pudhu Pudhu Arthangal | மலையாளம், பெங்காலி, ஹிந்தி என மொத்தம் 7 திரைப்படங்களில் நடித்திருந்த தேவயானியின் சினிமா கேரியரின் 8-வது படமே அவரின் முதல் தமிழ் படமாகும். அது 1995 ஆம் ஆண்டில் வெளியான 'தொட்டா சினுங்கி' திரைப்படமே ஆகும்.

வயதாகி விட்டால் சினிமாவோடு தங்களது கலைப்பயணம் நின்றுவிடாது, சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கலாம் என்பதற்கு நிறைய நடிகைகளை எடுத்துகாட்டாக கூறலாம். ஆனால், என்னதான் வயதானாலும் கூட 'காதல் கோட்டை' படத்தில் நாமெல்லாம் பார்த்து ரசித்து - வியந்த அதே  கமலியாகவே வலம் வரும் நடிகை தேவயானி - பலருக்கும் ஃபேவரைட்!

மலையாளம் மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினாலும் கூட, நடிகை தேவயானி தமிழ் சினிமாவின் ஒரு மறக்க முடியாத முகமாகவே திகழ்கிறார். மலையாளம், பெங்காலி, ஹிந்தி என மொத்தம் 7 திரைப்படங்களில் நடித்திருந்த தேவயானியின் சினிமா கேரியரின் 8-வது படமே அவரின் முதல் தமிழ் படமாகும். அது 1995 ஆம் ஆண்டில் வெளியான 'தொட்டா சினுங்கி' திரைப்படமே ஆகும்.

இத்திரைப்படத்தில் கார்த்திக், ரகுவரன், ரேவதி, நாகேந்திர பிரசாத் ஆகியோர் உடன் தேவயானியும் நடித்துள்ளார். இருந்தாலும் கூட 1996 இல் வெளியான 'காதல் கோட்டை' திரைப்படமே தேவயானிக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அதன் பிறகு பெரிய இடத்து மாப்பிள்ளை, சூர்யவம்சம், கிழக்கும் மேற்கும், நினைத்தேன் வந்தாய், மூவேந்தர் என தொடங்கி கிட்டத்தட்ட அனைத்து தமிழ் சினிமா ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்தார், தேவயானி. வெள்ளித்திரையில் போதுமான புகழை பெற்ற கையோடு 2003 ஆம் ஆண்டு 'கோலங்கள்' சீரியல் வழியாக சின்னத்திரையிலும் காலடி எடுத்து வைத்தார்.தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் 'புதுப்புது அர்த்தங்கள்' சீரியலில் லட்சுமி என்கிற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.
குறிப்பிட்ட சீரியல் தொடர்பான லேட்டஸ்ட் ப்ரோமோ வீடியோவில், தன் மகன் மற்றும் மருமகளின் பிரிவுக்கு மூலகாரணமாக விளங்கும் ஆதிராவிடம் பல கேள்விகளை முன்வைக்கிறார் லட்சுமி. மகனுக்கும், மருமகளுக்கும் இடையே உள்ள பிரச்சனை மெல்ல மெல்ல சரியாகும் வேளையில் லட்சுமியின் குடியிருப்பிற்குள் வந்துள்ளதே ஆதிரா மீதான லட்சுமியின் கோபத்திற்கு முக்கிய காரணமாகும்.

Also Read : சோஷியல் மீடியாவில் வைரலாகும் விஜய்யின் தளபதி 66 லுக்... 

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் அடுத்தவர் குடும்பத்தை கெடுக்க நினைத்தால், அது உன்னை மட்டுமல்ல வயிற்றில் இருக்கும் குழந்தையையும் சேர்த்தே பாதிக்கும் என்று அட்வைஸ் செய்கிறார். ஆனால் அது எதையுமே காதில் வாங்காத ஆதிரா, "முதலில் உங்கள் வளர்ப்பு சரியாக இருக்கிறதா.? என்னுடைய இந்த நிலைமைக்கு காரணமே உங்கள் மகன் தான்!" என்று கோபமாக பதிலளிக்கிறார்.

Also Read : பிங்க் உடையில் கிளாமர் போஸ் கொடுத்த சமந்தா - வைரல் போட்டோஸ்

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் 'கேப்பில்' பிரதீபாவும் உள்ளே நுழைந்து அவர் பங்கிற்கு லட்சுமியை கடுப்பேற்றுகிறார். "இவளுக்கு ஏன் மறுபடியும் உங்கள் வீட்டில் இடம் கொடுத்து உள்ளீர்கள்.?" என்று லட்சுமி கேட்க, "அது உங்க குடும்ப பிரச்சினை, அதுக்காக யாருமே இங்க வரக்கூடாதுன்னா எப்படி.?" என்று நக்கலாக பதில் அளிக்கிறார், பிரதீபா. மேலும் "நீங்களும் உங்க மருமகளும் எனக்கு நிறைய செஞ்சு இருக்கீங்களே.. அதுக்கு நான் பதில் செய்ய வேண்டாமா.? என்றும் பிரதீபா 'ஓப்பன்' ஆக லட்சுமியை கடுப்பேத்துகிறார். இதெல்லாம் கேட்டு லட்சுமி கண்கலங்க, குறிப்பிட்ட ப்ரோமோ வீடியோ முடிவடைகிறது.
Published by:Selvi M
First published:

Tags: TV Serial, Zee tamil

அடுத்த செய்தி