விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் பள்ளி மாணவிகளின் பிரச்சனையை பற்றி பேசி, பெற்றோர்கள், மாணவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புது கோணத்தில் சென்று கொண்டிருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்தமான சீரியல் லிஸ்டில் இருக்கிறது.தமிழ் குடும்பங்களில் வாழும் ஒவ்வொரு இல்லதரசிகளின் கதையாக இந்த பாக்கியலட்சுமி சீரியலை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் பாக்கியலட்சுமி சீரியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இப்படி ஒரு சீரியலில் மிகவும் முக்கியமான கருத்தை வலியுறுத்தும், பள்ளி மாணவிகளின் பாலியல் பிரச்சனை பற்றி பேசும் கதையோட்டம் ஒரு வாரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.அதே நேரம் சில எதிர்ப்பு குரலும் ஒலிக்கின்றன.
கடந்த சில மாதங்களாக தமிழகத்தை உலுக்கி வரும் சம்பவம் பள்ளி மாணவிகளின் தற்கொலைகள். அவர்களின் தற்கொலைக்கு பிறகு கிடைத்த கடிதங்கள் நெஞ்சை உறைய செய்தன.ஆசிரியர், உறவினர்கள் மூலம் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக மாணவிகள் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர். இந்த விஷயத்தை தான் பாக்கியலட்சுமி சீரியல் குழு கையில் எடுத்துள்ளது.
சீரியலில் பாக்கியாவின் இளைய மகளாக நடிக்கும் இனியாவின் ஃபிரண்ட், நிகிலா பள்ளி ஆசிரியரால் சந்திக்கும் பிரச்சனைகள் , அதனால் நிகிலா எடுக்கும் தற்கொலை முயற்சி என சீரியல் கதைக்களம் ஜெட் வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கிறது. இதுப்போன்ற பிரச்சனையை மாணவிகள் சந்தித்தால் தைரியமாக பெற்றோரிடம் பேச வேண்டும், எந்தவிதமான தவறான முடிவுகளையும் எடுக்க கூடாது, பயப்பட கூடாது குற்றவாளிகளுக்கு தண்டை கிடைக்க வேண்டும் என பல கருத்துக்களை வலியுறுத்தி இயக்குனர் சீரியல் திரைக்கதையை கொண்டு செல்கிறார்.
இதையும் பாருங்க.. பட விழாவில் பேசியே நடிகர் Ram Charan-னை சிரிப்பில் ஆழ்த்திய நடிகர் Sivakarthikeya
தமிழ் குடும்பங்கள் அதிகம் பார்க்கும் சீரியலில் இதுப்போன்ற முக்கியமான விஷயத்தை பற்றி பேசி இருப்பது வரவேற்க கூடிய விஷயம் எனவும் நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர். அதே நேரம் இந்த கன்டெண்டுக்கு எதிராகவும் சிலர் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். குடும்பத்துடன் பார்க்கும் போதும் சுகம் சுளிக்க வகையில் இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தற்போது சீரியலின் திரைக்கதையும் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இன்றைய எபிசோடில், நிகிலாவின் தற்கொலை முயற்சிக்கு என்ன காரணம் என்ற முழு உண்மையையும் மீடியா முன்பு பாக்கியா போட்டு உடைக்கிறார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.