முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Tik Tok Sumathi: உதயாவை மறக்க முடியல... அன்புவின் வாழ்க்கை முக்கியம் - டிக் டாக் சுமதி எடுத்த அதிரடி முடிவு

Tik Tok Sumathi: உதயாவை மறக்க முடியல... அன்புவின் வாழ்க்கை முக்கியம் - டிக் டாக் சுமதி எடுத்த அதிரடி முடிவு

மாமியாருடன் சுமதி

மாமியாருடன் சுமதி

என்னால் உதயாவின் இடத்தில் இன்னொருவரைப் பார்க்க முடியவில்லை என்பதால் நாங்கள் பிரிந்துவிடலாம் என்கிற முடிவை மனமொத்து எடுத்து இருக்கிறோம்.

  • 1-MIN READ
  • Last Updated :

டிக் டாக் மூலம் பிரபலமான சுமதி உதயா, தனது இரண்டாவது கணவர் அன்புவை பிரிவதாக தெரிவித்துள்ளார்.

டிக் டாக் மூலம் சாதாரண மக்களும் தங்களது திறமைகளைக் காட்டி பிரபலமானார்கள். தமிழகத்தில் டிக் டாக் பிரபலங்கள் என ஒரு பெரும் பட்டியலையே தயாரிக்கலாம். அதில் முக்கியமான காதல் ஜோடி உதயா மற்றும் சுமதி. இவர்கள் இருவருக்கென்று தனியே ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. இருவரும் சேர்ந்து செய்யும் டிக்டாக் வீடியோவுக்கு லைக்குகள் குவியும்.

அவர்களின் காதலுக்கு உதயா வீட்டில் முழு சம்மதமும் இருந்ததால் திருமணம் நடைபெற்று, குழந்தையும் பிறந்தது. அந்த நேரத்தில் டிக் டாக் தடை செய்யப்பட, இருவரும் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பில் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் இந்தாண்டின் தொடக்கத்தில் உதயா ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டார். பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் சுமதிக்கு மறுமணம் செய்து வைத்தார் அவரது மாமியார். உதயாவின் பெரியம்மா பையன் அன்புவை தான் சுமதி இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார். இதனை சிலர் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் தங்கள் எதிர்காலம் கருதி, ஒரு முடிவை எடுத்திருப்பதாக இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார்கள் சுமதியும், உதயாவும். அதில் சுமதியின் மாமியாரும் இருக்கிறார். அப்போது பேசும் சுமதி, ”நானும் அன்புவும் திருமணம் செய்துகொண்டது அனைவருக்கும் தெரியும். தம்பிக்காகவும் (குழந்தை) குடும்ப சூழ்நிலைக்காகவும் தான் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.
 
View this post on Instagram

 

A post shared by R.Anbu_Raja(BE```) (@anbusumathisam)இருப்பினும் அன்புவை உதயாவின் இடத்தில் வைத்து இப்போது வரை என்னால் பார்க்க முடியவில்லை. உதயாவை நான் மறந்துவிடுவேன் என்று கூறப்படுவதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. உதயாவை கண்டிப்பாக மறக்க முடியாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

என் வாழ்க்கையில் இணைந்திருக்கும் அன்புவினுடைய வாழ்க்கையையும் பார்க்க வேண்டி இருக்கிறது. யாரும் இது பற்றி தவறாக பேசிக் கொண்டிருக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்களுடைய ஆதரவு எனக்கு வேண்டும். அன்பு எங்கள் குடும்பத்தின் எல்லா பொறுப்புகளையும் சரியாகவே பார்த்துக் கொண்டிருந்தார்.

எனினும் என்னால் உதயாவின் இடத்தில் இன்னொருவரைப் பார்க்க முடியவில்லை என்பதால் நாங்கள் பிரிந்துவிடலாம் என்கிற முடிவை மனமொத்து எடுத்து இருக்கிறோம். அன்புவுக்கும் வேறொரு வாழ்க்கை இருக்கிறது. அன்புவோ, தான் காத்திருப்பதாக கூறுகிறார். எனினும் அவருடைய வாழ்க்கையை பாழாக்கி விடக் கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுக்கிறோம்.

இதன் பிறகு அன்புவுக்கு என்று தனி வாழ்க்கை இருக்கிறது. அதை அவர் வாழ வேண்டும். யாரும் இதுபற்றி தவறாகவோ, எதிர்மறையாகவோ ட்ரோல் செய்ய வேண்டாம். அவருடைய எதிர்கால வாழ்க்கையை கெடுத்து விட வேண்டாம். நானும் உதயாவின் மகனை நல்லபடியாக வளர்த்து வாழ்ந்து காட்டுகிறேன். முடிந்த அளவுக்கு தவறாக ட்ரோல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு இந்த முடிவு குறித்து, சுமதியும், அன்புவும் தங்கள் கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Instagram, Tik Tok