90'ஸ் கிட்ஸ்களுக்கு பல்வேறு வகையான பிடித்தமான விஷயங்கள் இருக்க கூடும். இது சாதாரண விளையாட்டு முதல் பிரபலமான சினிமா பாட்டு வரை அடங்கும். அந்த வகையில் 90'ஸ் கிட்ஸ்களுக்கு சில முக்கியமான சீரியல்களை மிகவும் பிடிக்கும். அதில் முதல் இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள்' சீரியல் என்றென்றும் நீங்க இடம் பிடித்திருக்கும். பல்வேறு சீரியல்கள் இன்று சின்னத்திரையில் வந்தாலும் கனா காணும் காலங்கள் சீரியலுக்கு எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் நிறைந்திருக்கும்.
குறிப்பாக இளம்வயது பசங்களிடம் இந்த சீரியல் ஆழமாக பதிந்திருந்தது. இதில் வரும் ஒவ்வொரு பாத்திரங்களும் அந்த அளவிற்கு நேர்த்தியான நடிப்பை வெளிக்காட்டி இருந்தனர். இதை மனதில் கொண்டு இந்த சீரியலின் அடுத்த பகுதியை விஜய் டிவி ஒளிபரப்ப உள்ளது. இதற்கான கதாபாத்திரங்களின் தேர்வு சமீப காலமாக நடந்து வந்தது. அந்த வகையில் சில முக்கிய பிரபலங்கள் 'கனா காணும் காலங்கள் பகுதி-2' இல் நடிக்கவுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க.. பிக் பாஸ் 5ல் இன்னும் பல ட்விஸ்ட்டுகள் இருக்கின்றன .. சொன்னது யார் தெரியுமா?
இதன் இரண்டாம் பாகத்தை தயாரிக்க போகிறார்கள் என்கிற செய்தி வெளியானதில் இருந்தே இளம்வயதினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இந்நிலையில் சில முக்கியமான பிரபலங்கள் நடிக்க போகிறார்கள் என்கிற செய்தி தெரிந்தால் நிச்சயம் இவர்களுக்கு பேரானந்தம் தான். டிக்-டாக் பிரபல
முகங்கள் பலர் இந்த இரண்டாம் பகுதியில் நடித்துள்ளனர் என்பதை சமீபத்தில் வெளியான புரோமோ மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.

டிக் டாக் தீபிகா
அதன்படி, மேலும் ஒரு முக்கியமான
டிக்-டாக் பிரபலம் தற்போது இதில் நடிக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது. டிக்-டாக் மூலம் பிரபலமான தீபிகா அவர்கள் இதில் நடிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீபிகா வெளியிட்டுள்ளார். இதை பலர் பார்த்து வருகின்றனர். மற்றும் இவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகின்றனர்.
இதையும் படிங்க.. ஐஸ்வர்யா - கண்ணனுக்கு எதிரியாகும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸில் இன்று!
அதில், "கனா காணும் காலங்கள் சீரியலை நான் வேகமாக ஓடி சென்று பார்ப்பேன். அந்த அளவிற்கு இந்த சீரியல் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் தற்போது அந்த சீரியலில் நான் நடிக்க போகிறேன் என்பதை என்னால் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை" என்று பதிவிட்டுள்ளார். இந்த சீரியலில் அபி என்ற முன்னணி கதாபத்திரத்தில் தீபிகா நடிப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். இவர் டிக் டாக் செயலியில் பல்வேறு ரீகிரியேஷன் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானார். இந்நிலையில் தற்போது அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் இந்த சீரியல் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதனால் இதன் ரசிகர்கள் வருத்தத்துடன் உள்ளனர். எனினும் பலர் ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் பெற்று பார்க்கவும் தயாராக உள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.