Home /News /entertainment /

யூடியூப்பில் ஆபாச பேச்சு... ரவுடி பேபி சூர்யாவின் கூட்டாளி சிக்கா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

யூடியூப்பில் ஆபாச பேச்சு... ரவுடி பேபி சூர்யாவின் கூட்டாளி சிக்கா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ரவுடி பேபி சூர்யா

ரவுடி பேபி சூர்யா

சைபர் கிரைம் குற்றவாளியான சிக்கந்தர்ஷாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    டிக் டாக்கில் பிரபலமான ரவுடி பேபி சூர்யாவின் கூட்டாளி சிக்காந்தர்ஷா என்கிற சிக்கா மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

    டிக் டாக்கில் வீடியோக்களை பதிவேற்றி பிரபலமானவர் தான் ரவுடி பேபி சூர்யா. டிக் டாக்கை தடை செய்த பிறகு இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் தனது கவனத்தை திசை திருப்பினார். சிக்கா என்பவருடன் இணைந்து பல வீடியோக்களை பதிவிட்டிருக்கிறார் சூர்யா.

    இருவருக்கும் தனித்தனியாக கல்யாணமாகி, குடும்பம் இருந்தாலும், அதையெல்லாம் மறந்தனர். ஆளுக்கொரு யூடியூப் சேனல் நடத்துகிறார்கள். பின்னர் இருவரும் 2 வருடம் கழித்து பிரிந்துவிட்டனர். பின்னர் சூர்யாவும், சிக்காவும் ஒருவரையொருவர் ஆபசமாக தாக்கி வீடியோ போடுவதும் சில நாட்கள் கழித்து மீண்டும் இணைவதும் வாடிக்கையாக இருந்தது.

    தனுஷுடனான பிரிவுக்குப் பிறகு பெயரை மாற்றிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

    இதையடுத்து யூ-ட்யூப் தளத்தில் ஆபாசமாக பதிவிட்ட காரணத்திற்காக கடந்த ஜனவரி 04.01.2022-ம் தேதி இருவரையும் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

    ஹீரோவாகும் வனிதா விஜயகுமாரின் மகன் விஜய் ஸ்ரீஹரி?

    மேற்படி வழக்கில் தொடர்புடைய சாகுல் அமீது என்பவரது மகனான சிக்கந்தர்ஷா என்கிற சிக்கா(வயது-49) என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் இ.கா.ப. அவர்களின் பரிந்துரைத்தார். இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் திரு.சமீரன் இ.ஆ.ப. அவர்கள் சிக்கா மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் படி சைபர் கிரைம் குற்றவாளியான சிக்கந்தர்ஷாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Dhanush: மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்த பிறகு மகன் யாத்ராவுடன் தனுஷ் - கவனம் பெறும் புகைப்படம்!

    இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Instagram, Tik Tok

    அடுத்த செய்தி