டிக் டாக் பிரபலம் "ரவுடி பேபி" சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்காந்தர் ஆகியோர் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைதளத்தின் ஆதிக்கம் அதிகரித்திருக்கும் இந்த காலகட்டத்தில், சாதரணமானவர்கள் கூட ஒரே இரவில் பிரபலமாகி விடுகிறார்கள். குறிப்பாக டிக் டாக் மூலம் பலர் மீதும் லைம் லைட் பாய்ந்தது. பலருக்கு அது சிக்கலையும் தந்தது.
அப்படி டிக் டாக்கில் வீடியோக்களை பதிவேற்றி பிரபலமானவர் தான் ரவுடி பேபி சூர்யா. டிக் டாக்கை தடை செய்த பிறகு இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் தனது கவனத்தை திசை திருப்பினார். சிக்கா என்பவருடன் இணைந்து பல வீடியோக்களை பதிவிட்டிருக்கிறார் சூர்யா.
இருவருக்கும் தனித்தனியாக கல்யாணமாகி, குடும்பம் இருந்தாலும், அதையெல்லாம் மறந்தனர். ஆளுக்கொரு யூடியூப் சேனல் நடத்துகிறார்கள். பின்னர் இருவரும் 2 வருடம் கழித்து பிரிந்துவிட்டனர். இந்நிலையில் பிரிந்து சென்ற சிக்கா மீது கோபத்தில் இருந்த சூர்யா, துபாய்காரர் ஒருவருடன் எனது வாழ்க்கையை தொடங்க போவதாக அறிவித்த சூர்யா, “இவனோட வெளியே போனாலே அவரு உங்க தாத்தாவா அப்பாவானு கேக்காறாங்க. இந்த மாதிரி இருக்கும் போதே இவனுக்கு இத்தனை திமிரு. துபாய்காரன் 4 மாசத்துல வந்துடுவான். இனி என் வாழ்க்கையை நான் பார்த்துக்கிறேன்” என தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க - ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்ளோ பெரிய மகனா? வைரலாகும் படம்!
சூர்யாவும், சிக்காவும் ஒருவரையொருவர் ஆபசமாக தாக்கி வீடியோ போடுவதும் சில நாட்கள் கழித்து மீண்டும் இணைவதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் இவர்கள் ஆபாசமாக வீடியோக்களை பதிவிட்டு வருவதாக ஜெனிபர் என்பவர் சென்னை சைபர் கிரைம் போலீஸிலும் கமிஷனர் அலுவலகத்திலும் தமிழக டிஜிபி அலுவலகத்திலும் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து கோவை சைபர் கிரைம் போலீஸார் ரவுடி பேபி சூர்யாவையும் சிக்காவையும் மதுரையில் வைத்து கைது செய்துள்ளனர்.
ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் மட்டுமல்லாமல் ஜி.பி. முத்து, திருச்சி சாதனா, இலக்கியா, திவ்யா கள்ளச்சி உள்ளிட்டோர் ஆபாசமாக நடிப்பதும், பேசுவதுமாக வீடியோக்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.