’இது இல்லாமல் என்னால் ஒருநாள் கூட இருக்க முடியாது...’ ஜி.பி.முத்து எதை சொல்கிறார்?

ஜி.பி.முத்து

இணைய பிரபலம் ஜி.பி.முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 • Share this:
  பிக் பாஸ் வீட்டுக்கு செல்வதை யோசித்து தான் சொல்ல வேண்டும் என இணைய பிரபலம் ஜி.பி.முத்து தெரிவித்துள்ளார்.

  விஜய் டிவி-யின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் விரைவில் தொடங்கவிருக்கிறது. எப்போதும் ஜூன் மாதம் இறுதியில் தொடங்கும் இந்நிகழ்ச்சி கொரோனா தொற்றால் கடந்தாண்டை போலவே, இந்தாண்டும் தாமதமாக தொடங்குகிறது. இதன் ப்ரோமோ சமீபத்தில் வெளியானது. கடந்த 4 சீசன்களைப் போலவே பிக் பாஸ் 5-ம் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

  விரைவில் தொடங்கவிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், கலந்துக் கொள்ளப்போதும் பிரபலங்கள் குறித்து இணையத்தில் தினம் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இதில் இணைய பிரபலம் ஜி.பி.முத்து கலந்துக் கொள்வதாக தகவல்கள் வெளியாகின.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பிக் பாஸ் வீட்டில் தான் இருப்பதாக புகைப்படத்தை அவர் பகிர்ந்திருந்ததையடுத்து, ஜி.பி.முத்து இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதாக பேச்சுகள் எழுந்தது. இதையடுத்து அவர் பிக் பாஸில் கலந்துக் கொள்வாரா மாட்டாரா என விவாதம் நடந்து வருகிறது.

  இந்நிலையில் இந்த குழப்பத்திற்கு பதிலளித்துள்ள ஜி.பி.முத்து, ”பிக்பாஸ் வீட்டுக்குள் நான் இருப்பது பற்றி, நானே யோசித்து தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் மொபைல் இல்லாமல் ஒரு நாள் கூட என்னால் இருக்க முடியாது. அதே நேரத்தில் என்னுடைய குழந்தைகளை பார்க்காமலும் என்னால் இருக்க முடியாது. எத்தனை தடைகள் வந்தாலும் எனக்கு, என்னுடைய மனைவியும் குழந்தைகளும் தான் முக்கியம். அவர்களை பார்க்காமல் என்னால் இருக்கவே முடியாது!” என்று தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: