ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Vanathai Pola | தங்கை போன சோகம்.. வானத்தை போல சின்ராசும் சீரியலை விட்டு விலகுகிறாரா?

Vanathai Pola | தங்கை போன சோகம்.. வானத்தை போல சின்ராசும் சீரியலை விட்டு விலகுகிறாரா?

சன் டிவி சீரியல்

சன் டிவி சீரியல்

சீரியலுக்கு மிகப்பெரிய பலமாக இருந்த அண்ணன் - தங்கை காம்போவான தமன் - ஸ்வேதா இருவருமே சீரியலில் இல்லை என்றால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றமடைவார்கள்

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  தமிழ் சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் பல சேனல்களில் நிறைய சூப்பர் ஹிட் சீரியல்களை ஒளிபரப்பாகி வருகின்றன. தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த முன்னணி சேனலான சன் டிவி-யிலும் காலை முதல் இரவு வரை எண்ணற்ற ஹிட் சீரியல்கள் டெலிகாஸ்ட் ஆகி வருகின்றன. கொரோனா லாக்டவுன் நேரத்தில் சீரியல் ஷூட்டிங் பாதிக்கப்பட்டதால் மீண்டும் பழைய சீரியல்களை ஒளிபரப்பியது சன் டிவி.

  நிலைமை இயல்பாகி விட்டாலும் கூட பழைய சீரியல்களுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து அதில் இன்னும் சில சீரியல்களை புது சீரியலை போலவே தொடர்ந்து ஒளிபரப்பி கொண்டிருக்கிறது சன் டிவி. உதிரிபூக்கள், அத்திபூக்கள், நந்தினி மற்றும் மெகாஹிட் சீரியலான மெட்டிஒலி உள்ளிட்ட சீரியல்கள் இன்னும் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளன.

  Also Read : ட்ரெண்டிங்கில் விஜய் டிவி அறந்தாங்கி நிஷா!

  மதியம் 12 மணி முதல் இரவு 11 மணி வரை பல சீரியல்களை டெலிகாஸ்ட் செய்து வருகிறது சன் டிவி. இதில் மகராசி, திருமகள், பாண்டவர் இல்லம், சந்திரலேகா, அருவி, தாலாட்டு, அபியும் நானும், சுந்தரி, கயல், கண்ணான கண்ணே, ரோஜா, அன்பே வா, பூவே உனக்காக, சித்தி-2 உள்ளிட்டவை அடக்கம். திரைப்படங்களின் பெயர்களை தாங்கி வரும் பெரும்பாலான சீரியல்கள் ஹிட் லிஸ்ட்டில் சேருவதால், எல்லா சேனல்களிலும் திரைப்பட டைட்டில்களை கொண்ட பல சீரியல்களும் ஒளிபரப்பாகி வருகின்றன.

  அந்த வகையில் இரவு 8 மணி முதல் 8.30 வரை ஒளிபரப்பாகி வருகிறது "வானத்தை போல" சீரியல். அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7-ம் தேதி முதல் வானத்தை போல சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் இந்த சீரியல் வெற்றிகரமாக 300 எபிசோட்களை கடந்த நிலையில் இந்த சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. துளசி கேரக்டரில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்த நடிகை ஸ்வேதா திடீரென சீரியலில் இருந்து விலகி விட்டார்.

  Also Read : பிக் பாஸில் உச்சகட்ட கோபத்தில் அக்‌ஷரா.. ரெட் கார்டுக்கு வாய்ப்பு இருக்கா?

  இதனை தொடர்ந்து மான்யா ஆனந்த் என்பவர் தற்போது புதிதாக துளசி கேரக்டரில் நடித்து வருகிறார். ஸ்வேதா விலகிய அதிர்ச்சியில் இருந்தே இன்னும் ரசிகர்கள் மீளாத நிலையில் இந்த சீரியலில் இருந்து மற்றொரு முக்கிய நடிகரும் விரைவில் விலக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

  துளசியின் பாசமிகு அண்ணனாக சின்ராசு என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகர் தமன் குமார். இவரும் விரைவில் வானத்தை போல சீரியலை விட்டு விலக உள்ளதாக தெரிகிறது. வானத்தை போல சீரியலுக்கு மிகப்பெரிய பலமாக இருந்த அண்ணன் - தங்கை காம்போவான தமன் - ஸ்வேதா இருவருமே சீரியலில் இல்லை என்றால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றமடைவார்கள் என்பது நிச்சயம்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Sun TV, TV Serial