Home /News /entertainment /

பிக் பாஸ் இந்த வாரம் எவிக்‌ஷனில் வெளியேறப்போவது இவரா?

பிக் பாஸ் இந்த வாரம் எவிக்‌ஷனில் வெளியேறப்போவது இவரா?

பிக் பாஸ் எவிக்‌ஷன்

பிக் பாஸ் எவிக்‌ஷன்

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

    விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் தொடங்கி 61 நாட்களை கடந்து சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகும் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவ்னி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சி தனிப்பட்ட காரணங்களுக்கான நமீதா இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் வாரத்தில் குறைந்த வாக்குகள் பெற்றதால் நாடியா வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து பிரபல யூடியூபரான அபிஷேக் ராஜா இரண்டாவது நபராக வெளியேற்றப்பட்டார். அபிஷேக் ராஜா பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தவரை அனைவரையும் மூளை சலவை செய்து தனது கருத்துக்களை திணித்து வந்தார். மேலும் பிரியங்கா, நிரூபிடம் ஒன்றாகவே அபிஷேக் இருந்தார்.

    பிரியங்கா புகழ் பெற்ற நபர் என்பதால் அவருடன் இருந்தால் தான் தனது முகம் மக்களுக்கு தெரியவரும் என்பதால் தான் அவருடன் இருக்கிறேன் என்று வெளிப்படையாகவே கூறி வந்தார். மேலும் என்ன டாஸ்க் நடந்தாலும் அதில் பிரச்னையை ஏற்படுத்தி கொண்டிருந்ததால் அவர் மூலம் நல்ல கண்டென்ட்டுகள் கிடைத்தது. ஆனால் அவரது செயல் சக ஹவுஸ் மேட்ஸ் மட்டுமின்றி, ரசிகர்களுக்கும் வெறுப்பை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கு எதிராக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வந்தனர்.

    பின்னர் இரண்டாவது வார நாமினேஷன் லிஸ்டில் அபிஷேக் இருந்த நிலையில் குறைவான வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் அவர் வெளியற்றப்பட்டார். இதனை தொடர்ந்து சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, ஐக்கி என அடுத்தடுத்து வெளியேறினர். இதனிடையே அபிஷேக் மீண்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழைந்தார். அபிஷேக் ராஜா மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றால் நல்ல கன்டென்டுகள் கிடைக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகியோரும் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்துள்ளார். இதனால் தற்போது 13 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில், ராஜு, பிரியங்கா, தாமரை, சிபி, இமான், பாவ்னி, அக்ஷ்ரா, வருண், அபினய் மற்றும் அபிஷேக் ஆகிய 10 பேர் உள்ளனர்.

    வீட்டின் தலைவரான நிரூப் மற்றும் இந்த வாரம் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகிய மூவரை தவிர அனைவரும் நாமினேஷனில் இருப்பதால் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் இந்த வாரம் வைல்டு கார்டு எண்ட்ரியாக மீண்டும் வந்த அபிஷேக் குறைவான வாக்குகள் பெற்றிருப்பதால் அவர் வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி