Home /News /entertainment /

ராமராஜன் - நளினி விவாகரத்து விஷயத்தில் என் பெயரை சேர்த்தாங்க.. வருத்தப்பட்ட சீரியல் நடிகை!

ராமராஜன் - நளினி விவாகரத்து விஷயத்தில் என் பெயரை சேர்த்தாங்க.. வருத்தப்பட்ட சீரியல் நடிகை!

திருமதி செல்வம் அபிதா

திருமதி செல்வம் அபிதா

ராமராஜன் நளினி தம்பதி விவாகரத்து வாங்கிய சமயத்தில் இவர் ராமராஜனுடன் இணைந்து படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தாராம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ராமராஜன் - நளினி விவாகரத்து விஷயத்தில் என் பெயரை சேர்த்து நிறைய வதந்திகள் வெளியாகின. அது எனக்கு மிகப் பெரிய மன உளைச்சலை தந்தது என பிரபல சின்னத்திரை நடிகை அபிதா தெரிவித்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திர ஜோடியான ராமராஜன் நளினி தம்பதி தற்போது பிரிந்துவிட்டனர். இவர்களின் திருமணத்தை மறைந்த முதல்வர் எம்ஜிஆர் நடத்தி வைத்தார். தற்போது இவர்களுக்கு அருண் என்ற மகனும், அருணா என்ற ஒரு மகளும் உள்ள நிலையில், கடந்த 2000-ம் ஆண்டு நளினி ராமராஜன் தம்பதி தங்களது திருமண வாழ்வில் இருந்து பிரிந்துவிட்டனர். இந்நிலையில் இவர்கள் விவாகரத்து வாங்கிய போது அதற்கு காரணம் நடிகை அபிதா என வதந்திகள் பரவியதாம். இதை கண்டு மிகவும் வேதனைப்பட்டதாக அபிதா தெரிவித்துள்ளார்.

    5 வருஷ லவ்.. சொன்னப்படியே இந்த ஆண்டு பென்சியை கரம் பிடித்த புகழ்!

    சேது படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்த அபிதா தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்தார். திருமணம் ஆனதும் சினிமாவுக்கு பாய் சொன்னவர் திருமதி செல்வம் சீரியலில்  ரீஎன் ட்ரி கொடுத்தார். அர்ச்சனா ரோலில் நடித்து மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்தார். கணவர், குழந்தைகள் என செட்டில் ஆனவர் இப்போது மீண்டும் ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் மாரி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு  என் ட்ரி கொடுத்து இருக்கிறார்.

    சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த அவர் பல விஷயங்களை மனம் திறந்து பேசி இருந்தார். அதிலும் குறிப்பாக ராமராஜன் நளினி தம்பதி விவாகரத்து வாங்கிய சமயத்தில் இவர் ராமராஜனுடன் இணைந்து படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தாராம். செட்டில் மிகவும் அமைதியாக சொல்லப்போனால் யாருடனும் பேச கூட மாட்டாராம்.

    ஓ மை காட்..புலம்பி தள்ளும் ’சிப்பிக்குள் முத்து’ ரசிகர்கள்! ஏன் என்னாச்சு?

    அப்படி இருக்கையில் நளினி - ராமராஜன் விவாகரத்துக்கு பின்னால் இருக்கும் காரணம் இவர் தான் என்று வதந்திகள் பரவியதாம். அதுமட்டுமில்லை சில பத்திரிக்கையில் செய்திகள் கூட வெளியாகியதாம். அதை பார்த்து மிகவும் மனமுடைந்து போனாராம் அபிதா. மிகுந்த வேதனையில் இதை பற்றியே பல மாதங்கள் நினைத்து கஷ்டப்பட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial

    அடுத்த செய்தி