முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மீண்டும் சீரியலுக்கு கம்பேக் கொடுக்கும் ’திருமதி செல்வம்’ அர்ச்சனா?

மீண்டும் சீரியலுக்கு கம்பேக் கொடுக்கும் ’திருமதி செல்வம்’ அர்ச்சனா?

திருமதி செல்வம் அர்ச்சனா

திருமதி செல்வம் அர்ச்சனா

திருமதி செல்வம் சீரியல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் ஒளிபரப்பாகி அனைத்து மொழிகளிலும் டாப் ரேட்டிங் பெற்றது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சீரியல் ரசிகர்கள் ஒரு குறிப்பிட்ட சீரியல்களை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க மாட்டார்கள். அந்த தொடரை மறுபடியும் ரீடெலிகாஸ்ட் செய்தாலும் சரி முதல் முறை பார்ப்பது போலவே அதே எதிர்பார்ப்பு , ஆர்வத்துடன் பார்ப்பார்கள். அந்த வரிசையில் இடம் பெறும் சீரியல்கள் தான் சித்தி, தென்றல், திருமதி செல்வம், கோலங்கள், மெட்டி ஓலி போன்ற மெகா தொடர்கள். சன் டிவியில் ஒளிப்பரப்பான இந்த சீரியல்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளன. அதிலும் திருமதி செல்வம் சீரியல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் ஒளிபரப்பாகி அனைத்து மொழிகளிலும் டாப் ரேட்டிங் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சீரியல் ஆரம்பத்தில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாச்சு. நல்ல வரவேற்பு கிடைக்கவே, பிறகு இரவு ஸ்லாட்டுல ஒளிபரப்பாக ஆரம்பிச்சுது.

இந்த தொடர்,  செல்வம் ரோலில் நடித்த சஞ்சீவுக்கும் அர்ச்சனாவாக நடித்த அபிதாவுக்கும் மிகப் பெரிய ரீச்சை வாங்கி தந்தது. இருவரின் நடிப்பையும் ரசிகர்கள் கொண்டாடினர். சீரியல் எபிசோடுகள் டி.ஆர்.பியில் சக்கை போடு போட்டனர். இந்த சீரியல் முடிந்த பிறகு அர்ச்சனா ’தங்கமான புருஷன்’ என்ற தொடரில் நடித்தார். அதன் பின்பு கணவர் மற்றும் குழந்தைகளுடன் கேரளாவில் செட்டில் ஆகிவிட்டார். ஆனால் சஞ்சீவ் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்தார், நடித்து வருகிறார்.

இதையும் படிங்க.. ’ராஜா ராணி 2’ சீரியல் நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டது! உங்களுக்கு தெரியுமா?

பிரேக் எடுத்துவிட்டு சென்ற அர்ச்சனாவை ரசிகர்கள் ரொம்பவே மிஸ் செய்தனர். சேது படத்தில் விக்ரம் ஹீரோயினாக நடித்த அர்ச்சனா மிகவும் திறமையான நடிகை. தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்து நடிப்பார். அவரை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
 
View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)2019 ஆம் ஆண்டு வெளியான ஹிப் ஆதியின் நட்பே துணை படத்தில் நடிகை கவுசல்யா நடித்த கேரக்டரில் ஆரம்பத்தில் நடிக்க இருந்தவரும் அபிதா தான். ஆனால் அந்த நேரம் கேரளாவில் வெள்ளம் வர அபிதாவால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. இப்படி ஏதோ ஒரு காரணத்திற்காக அபிதாவின் ரீ என்ட்ரி தள்ளிப்போனது. இந்நிலையில் தற்போது அபிதா சின்னத்திரையில் ஜீ தமிழ் சீரியல் ஒன்றில் கம்பேக் கொடுக்க போவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க.. மீண்டும் முத்தரசுடன் சேர போகிறாரா ஸ்வேதா? ’யாரடி நீ மோகினி’ சீரியல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்பிரைஸ்!

ஜீ தெலுங்கில் ஒளிப்பரப்பாகி சூப்பர் ஹிட்டடித்த ’திரியாணி’ என்ற சீரியல் தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளதாம். அந்த சீரியல் ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகவுள்ளது. இதில் தான் திருமதி செல்வம் புகழ் அர்ச்சனா கம்பேக் கொடுக்க போவதாக தகவல்கள் உலா வருகின்றன.இதனால் அவரின் ரசிகர்கள் ஹாப்பியாக உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Sun TV, TV Serial, Zee tamil