• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பல தடைகளை கடந்து சாதனை படைத்த சன் டிவி சீரியல்!

பல தடைகளை கடந்து சாதனை படைத்த சன் டிவி சீரியல்!

சன் டிவி சீரியல்

சன் டிவி சீரியல்

சன் டிவி திருமகள் சீரியல் 300 எபிசோடுகள் ஒளிபரப்பாகி வெற்றிநடை போட்டிகொண்டிருப்பது மிகப்பெரிய சாதனை தான்

  • Share this:
    சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று திருமகள். பல திருப்புமுனைகளுடன் மிகவும் சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகி வரும் திருமகள் சீரியல் தற்போது 300 எபிசோடுகளை கடந்துள்ளது.

    பல சேனல்களில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களும் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், திருமகள் சீரியல் 300 வது எபிசோட் ஒளிபரப்பாகி வெற்றி பெற்றுள்ளது.சீரியலின் நாயகனான சண்முக சுந்தரம், தனது இன்ஸ்டாகராம் கணக்கில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து லைவ் வீடியோவை பகிர்ந்துள்ளார். “நேயர்கள் ஆகிய உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகள், லவ் யூ ஆல், இந்த வாய்ப்பை அளித்ததற்காக சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் சார் மற்றும் செல்வி மேம் மற்றும் சன் டிவிக்கு நன்றி” என்று பகிர்ந்துள்ளார்.

    சன் டிவியில் தினமும் மதியம் 12.30 மணிக்கு திருமகள் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. எளிமையான காதல் கதையாக, குடும்பக் கதையாக இந்த தெரியும் சீரியலில் பல்வேறு சுவாரஸ்யங்கள் அடங்கியுள்ளன.சீரியலின் கதைப்படி, ஜமீந்தார் வீட்டு வாரிசான நாயகன் ராஜா, தன் அப்பாவுடன் உணவு வியாபாரம் செய்து வரும் நாயகியான அஞ்சலியை காதலிக்கிறார். இவர்கள் காதலை மறுத்த ராஜாவின் அம்மா, பிறகு ஏற்றுக்கொண்டு, இவர்களுக்கு திருமணமும் செய்து வைத்து மருமகளாக ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால், உண்மையிலேயே, நாயகிக்கும் அவரின் மாமியாருக்கும் இடையில் உள்ள உறவு என்ன?

    மிடில்-கிளாஸ் நாயகி உண்மையில் பணக்காரர், நாயகியின் உண்மையான அம்மா மற்றும் அப்பா யார், நாயகனின் அப்பா மற்றும் அம்மா யார், என்று பல சுவாரஸ்யங்கள் ஒவ்வொன்றாக வெளியாகிறது.திருமகள் சீரியல் 300 எபிசோடுகள் ஒளிபரப்பாகி வெற்றிநடை போட்டிகொண்டிருப்பது மிகப்பெரிய சாதனை தான். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு தளர்வு அறிவித்த போது, சீரியல் தொடங்கப்பட்டது. ஆனால், இடையில் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டன. பல சீரியல்களிலும் நடப்பது போல, முக்கியமான பாத்திரங்களில் நடித்தவர்கள் கொரோனா, திருமணம், என்று சீரியலில் இருந்து வெளியேறினார்கள்.

    சீரியலில் வில்லியாக, நாயகனின் அம்மாவாக மௌன ராகம் புகழ் ஷமிதா தான் நடித்து வந்தார். ஆனால், இடையில் சில காரணங்களுக்காக ஷமிதா சீரியலில் இறந்து வெளியேறினார். அதே போல, பிரகதி பாத்திரத்தில் நடித்து வந்த சுஷ்மா நாயரும் சீரியலில் இருந்து வெளியேறி, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் என்றென்றும் சீரியலில் இணைந்தார். இவற்றைக் கடந்து, சீரியல் ஓராண்டுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது.



     




    View this post on Instagram





     

    A post shared by Surendar (@surendarofficial)






    சீரியலில் நாயகனாக ராஜா என்ற பாத்திரத்தில் சண்முக சுந்தரமும், நாயகியாக அஞ்சலி என்ற பாத்திரத்தில் ஆந்திராவைச் சேர்ந்த நடிகை ஹரிகாவும், வில்லியாக, நாயகனின் அம்மா பாத்திரத்தில் ரேகா கிருஷ்ணப்பாவும் நடிக்கிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: