200 எபிசோடுகளைக் கடந்தது திருமகள் சீரியல் - சீரியல் குழுவினர் ரசிகர்களுக்கு நன்றி!

200 எபிசோடுகளைக் கடந்தது திருமகள் சீரியல்

200வது எபிசோடு கொண்டாட்டத்தை மிகவும் சுவையான கேக்குடன் சீரியல் குழுவினர் கொண்டாடியுள்ளனர்.

  • Share this:
திருமகள் சீரியல் 200 எபிசோடை வெற்றிகரமாக கடந்துள்ளது. சுரேந்தர் சண்முகம், ஜீவா ரவி மற்றும் சீரியல் குழுவினர் ரசிகர்களுக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.

கடந்த அக்டோபர் 2020 முதல், சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் திருமகள் சீரியல் 200 எபிசோடை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்த வெற்றிக்களிப்பில், சீரியலில் முன்னணி பாத்திரங்களில் நடித்து வரும் சுரேந்தர் சண்முகம், ஜீவா ரவி உள்ளிட்ட பலரும் தங்கள் சமூக வலைத்தள கணக்குகளில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

சீரியல் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் டெக்னிஷியன்கள் குழு என்று சீரியலின் ஒட்டு மொத்தக் குழுவினரும், மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், சீரியல் படபிடிப்பு தளத்தில், கஸ்டமைஸ் கேக்குகளை வெட்டி, மகிழ்ந்தனர்.

ALSO READ |  "அவரின் நினைவுகள் என்னை சுற்றி இருக்கு" - கணவரின் தற்கொலை குறித்து மனம் திறந்த நடிகை ராகவி!

ராஜா சந்திரசேகர் என்ற பாத்திரத்தில், கதாநாயகனாக நடித்து வரும் சுரேந்தர் சண்முகம், ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கும் வகையில் ஒரு ஸ்பெஷல் லைவ் செஷனும் மேற்கொண்டார். அந்த லைவ் வீடியோவில், சீரியலின் டெக்னிஷியன்கள் மற்றும் குழுவின் மற்ற உறுப்பினர்களை அறிமுகப்படுத்தினார் சுரேந்தர்.

சுரேந்தர் அந்த வீடியோவை, ‘திருமகள் 200வது எபிசோடு வெற்றிக் கொண்டாட்டம்’ என்று ஷேர் செய்துள்ளார். இந்த வாய்ப்பை வழங்கிய தியாகராஜன் சார் மற்றும் செல்வி மேம் அவர்களுக்கு நன்றி. மேலும், சத்யஜோதி ஃபிலிம்ஸ், சன் டிவி, ஹேமா மகேஷ் மற்றும் ராதிகா மேடம் ஆகியோருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

 

  
View this post on Instagram

 

A post shared by Surendar (@surendarofficial)


 

 

மேலும் உடன் நடிக்கும் அனைவரையும் டேக்கில் இணைத்து, வாய்ப்புக்கு நன்றி என சுரேந்தர் தெரிவித்துள்ளார். அதில் சில புகைப்படங்களை பகிர்ந்த சுரேந்தர், ‘இந்த வாய்ப்பை அளித்த சன் டிவி மற்றும் சத்யஜோதி ஃபிலிம்ஸ்க்கு என்னுடைய நன்றிகள்’ என்று பகிர்ந்திருந்தார்.

ALSO READ |  Zee Tamil: ராசாத்திக்கு உதவிய பார்வதி - செம்பருத்தி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சாதனை சங்கமம்!

பிரபல நடிகர் ஜீவா ரவியும் திருமகள் சீரியலில் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார். 200வது எபிசோடு கொண்டாட்டத்தை மிகவும் சுவையான கேக்குடன் சீரியல் குழுவினர் கொண்டாடியுள்ளனர்.

 

  
View this post on Instagram

 

A post shared by Surendar (@surendarofficial)


 

 

‘மிகவும் சுவையான, இரண்டாவது கேக்கிற்கு நன்றி. ஜீவா ரவி அப்பா மற்றும் அம்மாவுக்கு நன்றி. இந்த முழு நாளும் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. நீங்கள் இல்லாமல் இது சாத்தியமே இல்லை. அது மட்டுமின்றி, ரசிகர்கள் தான் எங்களின் தூண்கள். நீங்க இல்லாம நாங்க இல்ல. அத நாங்க என்னிக்குமே மறக்க மாட்டோம்! எத்தன தடவ சொன்னாலும் பத்தாது. அனைவரும் நன்றி, லவ்யூ ஆல்’ என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார் சுரேந்தர்.

 

  
View this post on Instagram

 

A post shared by Jiva Ravi (@jiva_ravi)


 

திருமகள் சீரியல் திங்கள் முதல் சனி வரை, தினமும் மதியம் 12.30 மணிக்கும், இரவு 10.30 மணிக்கும் ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் ஜீவா ரவியும், இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களைப் பகிர்ந்து, ‘திருமகள், சன் டிவி மற்றும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் 200வது எபிசோடு கொண்டாட்டம், எங்களின் அன்பான பார்வையாளர்களுக்கு மிகவும் நன்றி’ நன்றி தெரிவித்துள்ளார்.

  
View this post on Instagram

 

A post shared by Jiva Ravi (@jiva_ravi)


 

சுரேந்தர் சண்முகம் போலவே, ஜீவா ரவியும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து, குறிப்பாக ரசிகர்களின் ஆதரவுக்கு தலைவணங்குவதாக தெரிவித்திருந்தார். சீரியலின் வெற்றி, ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்துள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sankaravadivoo G
First published: