Bigg boss 4 Tamil | பிக்பாஸ் வீட்டில் மீண்டும் தலைதூக்கும் குரூப்பிஸம் பிரச்னை..

இன்று காலை வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் மீண்டும் குரூப்பிஸம் பிரச்சனை தலைதூக்குவது காட்டப்பட்டுள்ளது.

Bigg boss 4 Tamil | பிக்பாஸ் வீட்டில் மீண்டும் தலைதூக்கும் குரூப்பிஸம் பிரச்னை..
ரியோ மற்றும் ரம்யா பாண்டியன்
  • News18
  • Last Updated: October 22, 2020, 1:41 PM IST
  • Share this:
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடந்த டாஸ்கில் சுரேஷ் நடிகை சனத்தை விளையாட்டுத்தனமாக ஒரு குச்சியால் நெற்றியில் அடித்தது பெரிய பிரச்சனையை கிளப்பியது. இதனால் கோபமடைந்த சனம் சுரேஷை ஒருமையில் திட்டினார். எனினும் தான் செய்தது தவறு என சுரேஷ் பிக் பாஸ் மற்றும் சனம் உள்ளிட்ட போட்டியாளர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

தான் தெரியாமல் இந்த தவறை செய்துவிட்டேன் என்னை எவிக்ட் செய்து விடுங்கள் பிக் பாஸ் என சுரேஷ் கண்ணீருடன் கன்பெஷன் அறையில் அழுதார். பின்னர் பிக்பாஸ் நீங்கள் தெரியாமல் செய்துள்ளீர்கள் மன்னிப்பும் கேட்டு விட்டதால் குழப்பமின்றி வெளியே சென்று தொடர்ந்து உங்கள் விளையாட்டுகள் என பிக் பாஸ் கூறினார். மேலும் நேற்று நடந்த டாஸ்கில் அர்ச்சனா வெற்றி பெற்றுள்ளார். ஆரி, ஆஜித் தோல்வியடைந்து அரக்கர்கள் குடும்பத்தில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் மீண்டும் குரூப்பிஸம் பிரச்சனை தலைதூக்குவது காட்டப்பட்டுள்ளது. அனைத்து போட்டியாளர்களும் ஒன்றாக டைனிங் டேபிளில் அமர்ந்து பேச வேண்டும் என ரியோ அழைக்கிறார். அந்த நேரத்தில் ஆஜித், ஷிவானி, ரம்யா பாண்டியன் உள்ளிட்ட சிலர் தாமதமாக வந்திருக்கிறார்கள். அதனால் ரியோ கோபமாக பேசி இருக்கிறார். அப்போது குறுக்கிட்ட ஷிவானி சொல்வது என்றால் என்னிடம் நேராக கூறுங்கள் என ரியோவிடம் தெரிவித்தார்.




Also read... ரூ.4 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்தும்பட்சத்தில் விஷால் நடித்த ’சக்ரா' படத்தை வெளியிடலாம் - நீதிமன்றம் உத்தரவு



பின்னர் ரியோ மற்றும் ரம்யா பாண்டியன் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்று வருகிறது காட்டப்பட்டு இருக்கிறது."இரண்டு நிமிடமாவது ஒன்றாக பேசி விட்டு எழுந்து போகலாம் என நினைத்தேன், ஏனென்றால் எப்போதும் குரூப்பிசம் என சொல்லி கொண்டே இருக்கிறார்கள்" என ரியோ சொன்னார்.அதற்கு ரம்யா பாண்டியன் 'உங்கள் மனதில் வேறு எதோ இருக்கிறது ரியோ. குரூப்பிசம் உங்கள் மனதில் இருக்கிறது என்பதால் நீங்கள் இதை கொண்டு வந்திருக்கிறீர்கள் என எனக்கு தெரியாது என கூறி இருக்கிறார். இதனால் இன்று மீண்டும் ஒரு பிரச்னை தலைதூக்குவது தெரிகிறது.
First published: October 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading