• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஜாக்குலினுக்கு விஜய் டிவி கொடுத்த சர்பிரைஸ் - ரசிகர்கள் ஹேப்பி!

ஜாக்குலினுக்கு விஜய் டிவி கொடுத்த சர்பிரைஸ் - ரசிகர்கள் ஹேப்பி!

தேன்மொழி பி.ஏ

தேன்மொழி பி.ஏ

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தேன்மொழி பி.ஏ சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த சீரியலை முடிவுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டதாக தகவல் வெளியானது.

  • Share this:
ஜாக்குலின் லீட் ரோலில் நடிக்கும் தேன்மொழி பி.ஏ சீரியல் நேரப்பிரச்சனை காரணமாக விரைவில் முடிவுக்கு வருவதாக தகவல் வெளியான நிலையில், விஜய் டிவி அவருக்கு சர்பிரைஸ் ஒன்றைக் கொடுத்துள்ளது. அடிக்கடி ஸ்லாட்டுகள் மாற்றி ஒளிபரப்பப்பட்ட அந்த சீரியல் இனிமேல் மதியம் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவித்துள்ளது. இதனால், தேன்மொழி பி.ஏ சீரியல் குழுவினரும், தொக்குப்பாளினி ஜாக்குலின் ரசிகர்களும் ஹேப்பி.

’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை துவங்கி குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்து அனைவருக்கும் பிடித்த வி.ஜே-வாக மாறினார் ஜாக்குலின். விஜய் டிவியில் வி.ஜே-வாகும் முன்னர் அதே சேனனில் ஒளிபரப்பப்பட்ட ’கனா காணும் காலங்கள்’ மற்றும் ’ஆண்டாள் அழகர்’ ஆகிய சீரியல்களில் ஜாக்குலின் நடித்துள்ளார். வெள்ளித்திரையில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் ’கோலமாவு கோகிலா’ என்ற படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பன்னூர் தான் ஜாக்குலினின் சொந்த ஊர். சென்னை, செயிண்ட் மேரீஸ் பள்ளியில், பள்ளி படிப்பையும், லயோலா கல்லூரியில் இளங்கலை படிப்பும் படித்தார். இளம் வயதிலேயே தந்தையை இழந்த ஜாக்குலின் தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். ஏர் ஹோஸ்டஸாகவும் பணியாற்றியுள்ளார். விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்தவுடன் முழுநேர தொகுப்பாளராக களமிறங்கினார். ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் தொடங்கி ஏழாவது சீசன் வரை அந்த நிகழ்ச்சியை ரக்‌ஷன், ஜாக்குலின் இருவரும் தொகுத்து வழங்கினார்கள்.

பின்னர், சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் தொகுப்பாளினி பணியை விட்டு, நடிக்கச் சென்றார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘தேன்மொழி பி.ஏ’ சீரியலில் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும், நேரப்பிரச்சனை காரணமாக அடிக்கடி வெவ்வேறு ஸ்லாட்டுகளில் ஒளிபரப்பப்பட்டது.

Also read... தல, தளபதி பற்றி ஒரே வரியில் நச் பதில் சொன்ன நடிகை ரம்யா பாண்டியன்!

அந்தநேரத்தில் கொரோனா வைரஸூம் ருத்ர தாண்டவம் ஆடியதால் சீரியலின் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தேன்மொழி பி.ஏ சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த சீரியலை முடிவுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டதாக தகவல் வெளியானது. அதற்கேற்ப கதைக்களமும் மாற்றியமைக்கப்பட்டு, முடிவுரையை நோக்கி நகர்த்தப்பட்டது.

பிக்பாஸ் ஒளிபரப்புக்கான ஸ்லாட்டைக் கொண்டு முதலில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், திடீரென இந்த சீரியலுக்கு மதியம் 3.30 மணி ஸ்லாட் கொடுத்து, தேன்மொழி பி.ஏ குழுவை விஜய் டிவி உற்சாகப்படுத்தியுள்ளது. தொகுப்பாளினி பணியை விட்டு சீரியலுக்கு வந்த ஜாக்குலின், தான் லீட் ரோலில் நடிக்கும் சீரியல் முடிவுக்கு வருவதை எண்ணி வருத்தத்தில் இருந்துள்ளார். ஆனால், சீரியலுக்கு என்டு கார்டு இல்லை என்று தெரிந்தவுடன் மீண்டும் உற்சாகமடைந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: