• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விஜய் டிவி-யில் முடிவுக்கு வரும் பிரபல சீரியல்?

விஜய் டிவி-யில் முடிவுக்கு வரும் பிரபல சீரியல்?

விஜய் டிவி

விஜய் டிவி

கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் ஆங்கராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜாக்குலின்

  • Share this:
    சின்னத்திரை ரசிகர்களுக்கு விருப்பமான வகையில் பல ஹிட் சீரியல்களை வரிசை கட்டி களமிறக்குவதில் முன்னணியில் இருந்து வருகிறது விஜய் டிவி. அந்த வகையில் மெளனராகம், காற்றுக்கென்ன வேலி, ராஜா ராணி 2, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி, தமிழும் சரஸ்வதியும், நாம் இருவர் நமக்கு இருவர், பாவம் கணேசன், ராஜபார்வை, வேலைக்காரன், தென்றல் வந்து என்னை தொடும், உள்ளிட்ட பல வித்தியாசமான கதைக்களம் கொண்ட சீரியல்களை ஒளிபரப்பி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது விஜய் டிவி.

    பிக்பாஸ் சீசன் 5 இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருவதால் சில இரவு நேர சீரியல்களின் டைமிங் மாற்றப்பட்டு மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இதன்படி இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த தேன்மொழி பிஏ சீரியல் தற்போது மதியம் 3.30 முதல் 4 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் விரைவில் முடிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் ஆங்கராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜாக்குலின். தொடர்ந்து ஆண்டாள் அழகர் சீரியலில் நடித்த இவர், தற்போது தேன்மொழி பி.ஏ சீரியலில் ஹீரோயினாக தேன்மொழி கேரக்டரில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக அருள் என்ற கேரக்டரில் பிரபல சீரியல் நடிகர் சித்தார்த் நடித்து வருகிறார். படித்து சுதந்திரமாக இருக்கும் பெண்ணான தேன்மொழி ஊராட்சிமன்ற தலைவர் ஆவதும், பின்னர் அருளை திருமணம் செய்து கொண்டு புகுந்த வீட்டில் கொடுமைப்படுத்த நினைப்போரை கையாண்டு பிரச்சனைகளை சமாளித்து முன்னேறுவதும் இந்த சீரியலின் கதைக்களமாக இருக்கிறது.



    இதனிடையே சில வாரங்களாக முத்தழகு என்ற புத்தம் புதிய சீரியலுக்கான ப்ரமோ வீடியோ விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வருவது நாம் அறிந்ததே. விரைவில் இந்த சீரியலை டெலிகாஸ்ட் செய்ய முடிவு செய்துள்ள விஜய் டிவி, தேன்மொழி பிஏ சீரியலை முடிவுக்கு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முத்தழகு சீரியலின் ப்ரமோ ஒளிபரப்பாக துவங்கிய போதே எந்த சீரியலை முடிக்க போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பு சின்னத்திரை ரசிகர்களிடையே எழுந்தது. விரைவில் முடிவுக்கு வரும் விஜய் சீரியல்களின் பட்டியல் பற்றிய தகவல்களும் வெளியாகி இருந்தது. இந்நிலையில் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற தேன்மொழி சீரியல் விரைவில் முடிக்கப்பட உள்ளதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல் அந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: