Home /News /entertainment /

வெற்றி - ராதா கல்யாணம் உறுதியானது! என்ன செய்ய போகிறார் அபி?

வெற்றி - ராதா கல்யாணம் உறுதியானது! என்ன செய்ய போகிறார் அபி?

தென்றல் வந்து என்னை தொடும்

தென்றல் வந்து என்னை தொடும்

தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் அபி ரோலில் நடிக்கும் பவித்ரா, வெற்றியை புருஷ் என்று அழைக்கும் காட்சிகள் இணையத்தில் வேற லெவல் ஹிட்.

    தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் உண்மையான காதலை அபியும் வெற்றியும் புரிந்து கொள்ளும் நேரம் இது. தற்போது பிரிந்து இருக்கும் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்வது போல் திரைக்கதை சென்று கொண்டிருக்கிறது.

    தொடங்கிய நாள் முதலே மக்களின் உள்ளம் கவர்ந்த சீரியலாக ஒளிப்பரப்பாகி வருகிறது தென்றல் வந்து என்னை தொடும் சீரியல். இதில் அபி ரோலில் நடிக்கும் பவித்ரா, வெற்றியை புருஷ் என்று அழைக்கும் காட்சிகள் இணையத்தில் வேற லெவல் ஹிட். வெற்றி - அபி காம்போ ரசிகர்களுக்கு பிடித்தது தான் இந்த சீரியலின் வெற்றிக்கு முதல் காரணம். பிடிக்காமல் கட்டப்பட்ட தாலியை ஏற்றுக் கொண்டு அபி , வெற்றி வீட்டில் வந்து தங்கினாலும் இருவரும் டாம் அண்ட் ஜெர்ரி போல தான் வாழ்ந்து வந்தார்கள்.

    இதையும் படிங்க.. பாக்கியா வீட்டுக்கு வரும் ராதிகா... கோபி மாட்டபோகும் நேரமா இது?

    இந்நிலையில் தான் தான், அபியின் அப்பாவை ரவுடிகள் கடத்த, அவரை காப்பாற்ற அபியிடம் டீல் போட்டார் வெற்றி. உங்க அப்பாவை காப்பாற்ற வேண்டுமென்றால் நீ இந்த வீட்டை விட்டு போக வேண்டும் என்றார். அப்பாவின் உயிருக்காக அபியும் இந்த முடிவுக்கு சம்மதம் கூறினார். கடைசியில் பேப்பரில் கையெழுத்து போட்டுவிட்டு அபி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். இப்போது அபியின் பிரிவை நினைத்து கஷ்டப்படுகிறார் வெற்றி.

    அபியும் வெற்றியை மிஸ் செய்கிறார். இந்த நேரத்தில் தான் வெற்றிக்கு ராதாவுடன் திருமணம் நடத்த வெற்றியின் அம்மா, கமலா முடிவு எடுக்கிறார். இதுப்பற்றி வெற்றியிடமும் பேசுகிறார். ஆனால் வெற்றி சம்மதிக்கவில்லை. கடைசியில் அம்மாவுக்காக சரி என்கிறார். நீண்ட் நாள் காதலனை மணக்க ரெடியாக இருக்கிறார் ராதா. ஆனால் ராதா அம்மா ஈஸ்வரி, இந்த கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

    மிரட்டிய முத்துராசு.. சரியான பதிலடி கொடுத்து அடக்கிய ஐஸ்வர்யா!

    இப்படி இருக்கையில், இன்றைய எபிசோடில் அபியும் தர்ஷனும் பார்டி ஒன்றுக்கு செல்ல, அங்கு இருவரையும் கணவன் - மனைவி என நினைத்து நண்பர்கள் கிண்டல் செய்ய, அதை வெற்றி பார்த்து விடுகிறார். அதே போல், ராதா அம்மா ஈஸ்வரி கல்யாணத்திற்கு ஓகே சொல்லிவிட்டு 2 கண்டிஷன்களை போடுகிறார். அதாவது வெற்றி வீட்டோட மாப்பிளையாக இருக்க வேண்டும், ரவுடி தொழிலை நிறுத்த வேண்டும். அதற்கு கமலா சம்மதம் கூற வெற்றி - ராதா திருமணம் நிச்சயம் ஆகுகிறது. அடுத்து அபி என்ன செய்ய போகிறார்? என்பது தான் ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி